புலிகளுக்கு 5 வருட தடை – இந்தியாவில்.

Indiaதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசு புலிகள் இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாக மேமாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை.
ஆனால் இலங்கை அரசு அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்குவதாக கூறி அதன் ஆதரவு அமைப்புகளையும் தடை விதித்தது. இப்படியான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா? வராதா என்ற நிலையில் அதுவும் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஒரேயடியாக எதிர்பாராத விதமாக 5 ஆண்டுகாலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பிராபாகரனுக்கு அஞ்சலி செலுத்தவேண்டாம் – இந்திய அதிகாரிகள் ஆலோசனை

imagesCA47OAWZதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் இவ்வாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை சட்டவிரோதமான முறையில் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் முயற்சிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயங்கள் குறித்து இலங்கை அகதிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வரும் மே 18 முள்ளிவாய்கால் நினைவுதினம் அனுஸடிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

காணாமல்போனோர் பட்டியலிலிருந்து 90 வீதமானோரை நீக்க நடவடிக்கை – ருவன் வணிகசூரிய

ruwan wanigasuriyaஇலங்கையில் காணாமற்போனதாக கூறப்படுபவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியலிலிருந்து 90 சதவீதமானவர்களின் பெயர்களை நீக்குவதற்கு பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானவர்கள், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளிடத் விபரம் கோரியுள்ளோம். அந்த விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் 90 சதவீதமானவர்களின் பெயர்கள், காணாமற்போனோர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கே.தயாபரராஜா, தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதன் மூலம் காணாமற்போனோர்கள், வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றமை உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நாம் சர்வதேச நாடுகளிடம் விபரம் கோரியுள்ளோம். அந்நபர்களின் பெயர் விபரங்கள் எமக்கு கிடைக்குமாக இருந்தால், காணாமற்போனதாக கூறப்படுபவர்களின் பெயர்ப்பட்டியலில் இருந்து 90 சதவீதமானவர்களின் பெயர்களை எம்மால் நீக்கக் கூடியதாக இருக்கும் என்றும்.
புலிகளின் முன்னாள் உறுப்பினரான தயாபரராஜா (வயது 33), யாழ்ப்பாணத்தில் கணினித்துறை பொறியியலாளராக கடமையாற்றியவராவார். இவர், வடக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில், துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இருப்பினும், அவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்றவேளை தனுஷ்கோடியில் வைத்து தமிழ்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட தயாபரராஜா, இதுவரை காலமும் தலைமறைவாக வாழ்ந்துள்ளமை இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவமானது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச செய்திச் சேவைகளினால் முன்வைக்கப்படும் செய்திகளில் உண்மைத் தரவுகள் இல்லாதுள்ளமைக்கு சிறந்த உதாரணமாகுமெனவும்.
நாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் இருக்கின்ற காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி, வடக்கு  கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் சட்டவிரோத வழிகளை கையாண்டு மேற்குலக நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனை மறைக்கும் வகையில் மோதலின் போது பலர் காணாமற்போனதாக பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை அரசாங்கத்துக்கும் படையினருக்கும் அவப்பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்துகின்றனர் என்றும்.
கணினி பொறியியலாளரான தயாபரராஜா, ஏதோவொரு காரணத்திற்காகவே தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளார். அவர் காணாமற்போனதும் அதற்கு இராணுவம் தான் காரணமென கூறினர். இந்த பொய்க் குற்றச்சாட்டினை நாம் ஏற்க மறுத்திருந்த நிலையில், இது இன்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
தயாபரராஜா போன்று காணாமற்போனவர்களின் பெயர்ப்பட்டியலில் இடம்பிடித்த எத்தனையோ பேர் இன்றும் உயிருடன் அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள் என நாம் உறுதியாக நம்புகின்றோம்
அவர்கள் தொடர்பான விபரங்களை குறித்த நாடுகளிடம் கேட்டுள்ளோம். அவ்விபரவங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களை, காணாமற்போனோர் பெயர்ப்பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ மற்றும் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.