உலகில் பலகோடி மக்கள் தம் சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்-

untitledஉலகக நாடுகளில் மொத்தம் மூன்று புள்ளி மூன்று கோடி மக்கள் தம் சொந்த நாட்டிலேயே இடம் பேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், கடந்த வருடத்திலும் பார்க்க இவ் வருடம் தம் சொந்த நாடுகளில் புலம் பேர்ந்து வாழும் மக்களின் தொகை 45 லட்சத்தால் அதிகரித்துள்ளது என்றும்
குறிப்பாக 65 லட்சம் மக்கள் சிரிய நாட்டுக்குள் மட்டும், அங்கு இடம் பெறும் மக்கள் போரால், அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும், 25 லட்சம் மக்கள் பிற நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,  UNHCR தெரிவித்துள்ளது.
உள் நாடுகளில் இடம் பேர்ந்த மக்கள் தொகை அதிகரித்த நாடுகளாக சிரியா, கொலம்பியா, நைஜீரியா, கொங்கோ, சூடான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு என்பன அடங்குவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில நாடுகளில் யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீழ் குடியேற்றமும், சமரச முயற்சிகளும் எடுக்கப்படாமைக்கு ஐ.நா.சபையின் வேலைத் திட்டத்தில் தவறிருப்பது போல் தோன்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அகதிகளில் பெரும்பாலானோர் புலம்பேர் மக்களுக்கான ஜெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது போல் பாதுகாப்பையும், அடிப்படை உரிமைகளையும் பெறும் வாய்ப்பு அற்ற சூழலில் பல ஆண்டுகள் வாழ்ந்து வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம் சொந்த தேசத்தில் இடம் பேர்ந்த மக்கள் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாகவும், அரசியற் பழிவாங்கலிற்கு அந்த ஏழை மக்கள் ஆளாகி வருவதாகவும், மருத்துவ வசதிகளேதுமின்றி அவதிப்படுவதாகவும், குழந்தைகள் பாலுணவுத் தட்டுப்பாடு காரணமாக ஊட்டச் சத்துக்களைப் பெற இயலாத பரிதாப நிலையில் மிகவும் மெலிந்து காணப்படுவதாகவும்.
மக்கள் போர் இடம் பெற்று வரும் நாடுகளில் பேச்சு வார்த்தைகளுக்குத் தயாராவதன் மூலமும், போர் முடிவுற்ற நாடுகளில் சமரசப் பேச்சு வார்த்தை மூலமும், சகலருக்கும் வளமான வாழ்வைப் பெற்றுத்தர முன்வர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..