மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம்-பொலிஸ்

imagesCASUZRLMரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மே 18 நினைவு தினத்தினை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் அவர்களை நினைவுகூருவார்கள் என்ற ரீதியிலே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அதேபோல், வடமாகாண சபையிலும் அஞ்சலி செலுத்தவுள்ளதாக அறிந்தோம், ஆனால் அங்கும் அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

sivajilingam(11)வடமாகாணசபை முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவுகூர்ந்ததினை அடுத்து, அங்கு நின்ற ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘இதே நாளில் தான் பல்லாயிரக்கணக்கான எம் உறவுகள் கொன்றொழிக்கப்பட்டது. இத்தினத்தில் நாம் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இன்று இங்கு இம்மக்களை நினைவு கூர்ந்து ஏற்றப்பட்ட சுடர் தட்டி வீழ்த்தப்பட்டு சப்பாத்துக் கால்களால் மிதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்கள் மட்டும் அல்ல இந்த மாதம் பூராகவும் இத்தினத்தை அனுஷ்டிப்போம். அத்துடன், இடம்பெறவிருக்கும் வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்துவோம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (16) வடமாகாண சபைக்கு சென்றிருந்த போது சிவாஜிலிங்கத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். எனவே வடமாகாண சபைக்கு வெளியே வைத்து அவர் தீபமேற்றி அஞ்சலி செய்த போது, பொலிஸார் அந்த தீபங்களை எடுத்து எறிந்து அஞ்சலி செலுத்துவதைத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் பாரிய தொடர்பு இலங்கையர் கைது

main_oo_1605_p4aஅல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் பாரிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து, மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இம்மூவரும் இந்தியாவில் வைத்தே கைது செய்யப்பட்டார்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இந்தியதாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைதாகியுள்ள இலங்கையர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார் என்றும் இவர் இதற்கு முன்னர் இருமுறை கைது செய்யப்பட்டவர் என்றும், தீவிரவாத அமைப்பில் ஆட்களைச் சேர்க்கும் பணியிலேயே இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்ததாகவும். த ஸ்டார் ஒன்லைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

பங்களாதேஷ் படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி.

1333371நேற்று வியாழக்கிழமை, சுமார் 250 – 300 பயணிகளுடன் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலிருந்து 27 கிலோமீற்றர் தொலைவிலுள்ள முன்ஷிகஞ்ச் மாநிலத்திலுள்ள ஆற்றில் பயணித்த படகொன்று, சீரற்ற காலநிலையினால் விபத்துக்குள்ளானதில் சுமார் 200 பேர் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு தகவல்கள் தெவிக்கின்றன. எம்.வி.மிராஜ்-4 என்ற அந்த படகு முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் ரசூல்பூர் கிராமம் அருகே மேக்னா ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.