Header image alt text

இந்தியாவின் புதிய பிரதமருக்கு புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் வாழ்த்து

Sithar-ploteஇந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள திரு. நரேந்திர மோடிக்கு புளொட் அமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களிலொருவருமான திரு.த.சித்தார்த்தன் அவர்கள் வாழ்த்து.

எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அவதானித்து வந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாறு காணாதவொரு வெற்றியை  பெற்றிருப்பது குறித்து, எங்களது மக்கள் சார்பில் எனது வாழ்த்தையும் மகிழ்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவரும் எதிர்ப்பார்த்தவாறே இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர  மோடி அவர்கள் பதிவியேற்கவுள்ளார். அவருக்கு எனது மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் பெரும் மகிழ்சியடைகின்றேன்.
இலங்கையில் இனமுரண்பாடு உருவெடுத்த காலத்திலிருந்து, எமது பிராந்திய சக்தியான இந்தியா ஒன்றையே நாம் பெரிதும் நம்பி வந்திருக்கிறோம். அதே நம்பிக்கையுடனேயே தற்போதும் செயற்பட்டு வருகிறோம். பெரு வெற்றியொன்றை பெற்றிருப்பதன் ஊடாக, பிரதமராக வரவுள்ள மோடி அவர்கள், தெற்காசியாவின் பலம்பொருந்;திய தலைவராக மாறியுள்ளார். அந்த வகையில், அவரது காலத்தில், எமது மக்கள் முகம்கொடுத்துவரும் பிரச்சனைகளுக்கு, ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நாம் முன்னெடுக்கவுள்ள முயற்சிகளுக்கு, அவர்;, பக்கபலமாக இருப்பார் என்றே நம்புகின்றோம்.
மாறிவரும் உலக ஒழுங்கில், ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில், இந்தியாவின் முன்னால் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நாம் விளங்கிக்கொள்ளாமல் இல்லை, எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் மக்களும், தங்களது உரிமையை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக கண்ணீர் சிந்திவருபவர்களுமான, தமிழ் மக்களின் பிரச்சனையையும், ஒரு முக்கியமான பிராந்திய விடயமாக கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பை, மோடி அவர்களின் அரசாங்கம் ஒரு போதுமே தட்டிக்கழிக்காது, என்னும் நம்பிக்கை எமக்குண்டு.

த.சித்தார்த்தன்
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர்
வட மாகாணசபை உறுப்பினர்

 

இந்திய தேர்தலில்

Posted by plotenewseditor on 18 May 2014
Posted in செய்திகள் 

 இந்திய தேர்தலில்

imagesபுதுடெல்லி : நாடு முழுவதும் 1,687 பதிவு செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இவற்றில் இந்திய தேசிய காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 6 தேசிய கட்சிகளும், 54 மாநில கட்சிகளும், 1,627 பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகாரம் பெறாத கட்சிகளும் உள்ளன.இந்த மக்களவைத் தேர்தலில் மோடி அலையால் பெரிய கட்சிகள் உட்பட 1,652 கட்சிகள் தோற்றுள்ளன. இவற்றில் பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட பல பெரிய கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.  16வது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 8,241 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 3,234 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். கட்சிகளின் சார்பாக நின்றவர்கள் 5,007 பேர்.கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்ற 540 பேர், 35 கட்சிகளை சேர்ந்தவர்கள். 3 சுயேச்சை வேட்பாளர்கள் புதிதாக நாடாளுமன்றத்தில் நுழைகிறார்கள். கடந்த தேர்தலில் கணிசமான எம்பி.க்களை கையில் வைத்திருந்த பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டு கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இம்முறை ஒரு எம்பி. கூட இல்லை. Read more

பிரதமராக  மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு

Moodyபுதுடெல்லி: பாஜ நாடாளுமன்ற கட்சியின் கூட்டம் 20ம் தேதி நடக்கிறது. அதில், பிரதமராக  மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த கூட்டத்துக்கு கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களை பிடித்து வரலாறு காணாத வெற்றி பெற்றது. பாஜ மட்டுமே 282 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மை பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் அல்லாத தனிப் பெரும்பான்மை பெற்ற ஒரே கட்சி என்ற சாதனையையும் பாஜ படைத்தது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான பாஜ பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட போது அகமதாபாத்தில் இருந்தார். தனது வீட்டில் இருந்தபடி, தேர்தல் முடிவுகளை கவனித்தார். Read more