Header image alt text

மோடி பதவியேற்பிற்கான ஜனாதிபதியின் அழைப்பு, வடக்கு முதல்வர் நிராகரிப்பு-

C.V.-ma-modi1நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்விற்குச் செல்லும் தான் உள்ளிட்ட குழுவுடன் இணைந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 26ம் திகதி நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும் ஜனாதிபதி இந்தியா செல்வது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அழைப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அவர்களுக்கு வடக்கு முதல்வர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதம் பின்வருமாறு,

கௌரவ பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர் வெளிவிவகார அமைச்சர்
கௌரவ அமைச்சரவர்களுக்கு,

இன்றைய திகதிய உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன். இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ள தாமதமாகியேனும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் எனக்கனுப்பிய அழைப்பைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி. எமது அமைச்சர் குழாமுடன் பேசியதன் பின் இந்தப் பதிலை உங்களுக்கு அனுப்புகின்றேன். ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது இலங்கை அரசாங்கத்தினரிடத்தில் வடமாகாணத்துடன் கூட்டுறவையும் ஒருங்கிணைந்து செயற்படும் தன்மையையும் எழுப்பியுள்ளமை நல்லதொரு சகுனமே. வடமாகாண மக்களின் சொல்லொண்ணாத் துயரங்கள், வடமாகாணசபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள் இவற்றின் மத்தியில் இக் கூட்டுறவு சிந்தனையானது வரவேற்கத்தக்கதே.  Read more

விசாரணை குழுவை அமைப்பதில் நவநீதம்பிள்ளை தீவிரம்-

navilpillaiஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணை நடத்துவதற்கான குழுவினை நியமிக்கும் பணியில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் ஜூன் முதல் வாரத்தில் விசாரணை குழு தொடர்பான அறிவிப்பை நவநீதம்பிள்ளை வெளியிடவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டுமென்று மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்திருந்தது. இதேபோல் விசாரணை குழு தொடர்பான அறிவிப்பை நவநீதம்பிள்ளை வெளியிட்டதும், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கையிடம் கோரவுள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கை மீதான விசாரணைக்கு தேவையான நிதியினை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்தே விசாரணைக்கான குழு நியமிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். விசாரணைக்குழுவில் இடம்பெறவுள்ள உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்-

desapiryaஎதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊவா மாகாண சபை தேர்தல் முதலாவதாக இடம்பெறும். எனது அதிகாரத்தின் பிரகாரம் செப்டெம்பர் 2ஆம் திகதி இந்த மாகாண சபை கலைக்கப்படும். அவ்வாறு கலைக்கப்பட்டால் நவம்பர் மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை தேர்தலை நடத்த முடியும். ஆனால் நவம்பர் மாதத்தில் தேர்தலை நடத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. வரவு – செலவு திட்ட அறிக்கை மற்றும் அடுத்தாண்டில் கட்டாயம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதேபோல் 2016ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலையும், பாராளுமன்ற தேர்தலையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியால் விரும்பிய நேரத்தில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியும். சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டோ அல்லது பெறாமலோ பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியும் என்பதனையும் அனைவரும் அறிவர். தேவைப்படின் நவம்பருக்கு பின் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த முடியும். எனினும் உரிய கால கட்டத்தை குறிப்பிட முடியாது என்றார் அவர்.

மீனவர் பிரச்சினைக்கு இலங்கையின் தனித்துவத்துடனான தீர்வு-

srilankaசட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாது, இலங்கையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையிலான தீர்வொன்றின் மூலம் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என இலங்கை மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கன்னியாகுமரி கடற்பரப்பில் நேற்று முன்தினம் 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இராமநாதபுரம் நீதிமன்ற உத்தரவின்பேரில் 15 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நேற்று மேற்கொண்டிருந்தோம் என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானம்-

palkalai kalagankalilநாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் 2 புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தில் கணனி வன்பொருள் பொறியியல் பாடத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஷெணிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார். யாழ் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் மொழிப்பெயர்ப்புக் கல்வி பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறுகின்றது. 2013 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களை கற்பதற்கான வாய்ப்புள்ளதாக ஷெனிக்கா ஹிரிம்புரேகம கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பல்-

imagesசீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு 7.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஆசியாவின் சர்வ செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நான்காவது மாநாடு சீனாவின் ஷங்காய் நகரில் இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி அதில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இதன்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குடன் இரு தரப்பு உறவுகள் குறித்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதுதவிர, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஈரான் ஜனாதிபதி ஹசன் ரெஹானியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடியுள்ளார். அத்துடன் ஐ.நா செயலாளர் பான் கி முனையும் சந்தித்துள்ளார்.

மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞன் காயம்-

2cயாழ். எழுதுமட்டுவாழ் தெற்குப் பகுதியில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் மர்மப் பொருள் வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்திய வீட்டுத் திட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் வேலைசெய்யும் கட்டடத் தொழிலாளி துப்பரவுப் பணியில் ஈடுபட்ட சமயத்தில் மர்மப்பொருள் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் மிருசுவில், தவசிகுளத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 22வயதுடைய சந்திரகுமார் பிரதீபன் என்பவர் தனது இடது கால் பாதத்தை இழந்துள்ளார். காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த இங்கு பொதுமக்கள் மீள்குடியேற 2012ல் அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.

தாதியர் சேவையில் 3067 வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டு-

thaathiyar panipurakanippu (1)தாதியர் சேவையில் காணப்படும் 3067 வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2500 பேரை பயிற்சியில் இணைத்துக்கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் 2000பேர் மட்டுமே பயிற்சிக்காக வந்துள்ளனர். எனவே மீண்டும் பயிற்சித் தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நாட்டில் தாதியர் சேவைக்கான வெற்றிடங்களை நிரப்புவதாயின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக செயற்படுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் கைது-

meenavar pirachanaikkuபடகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றிருந்த நிலையில், இன்றுகாலை மீண்டும் படகுமூலம் நாடு திரும்பிய மன்னார் பிரதேசவாசிகள் ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்த ஐவரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறும்வகையில் செயற்பட்ட குற்றத்துக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள், எதற்காக இந்தியா சென்றார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அம்பாறையில் இராணுவ வீரர் சடலமாக மீட்பு-

அம்பாறை, காரைதீவு படை முகாமிலிருந்து இராணுவ வீரர் ஒருவர், இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முகாமிலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, கட்கஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சமன்குமார என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவர், காரைதீவு 3ஆவது விஜயபாகு படையணியின் பணியாற்றி வந்தார். இவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-

1719856666tna3தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் தலைமையில் கொழும்பு, மாதிவெலயில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், கருணாகரன், சுமந்திரன், சிவநேசன் பவன், ஆர். ராகவன், சர்வேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டதுடன், இந்திய தேர்தலின் பின்னர் பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றிருக்கும் சூழ்நிலையில் இலங்கை தொடர்பான இந்திய அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும், இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மற்றும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை உள்வாங்கி அங்கு உறவுகளைப் பேணுவது குறித்தும் கூடுதல் கவனமெடுத்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையேற்றிருக்கின்ற பல பிரதேச சபைகளினுடைய நடைமுறைச் சிக்கல்கள் சம்பந்தமாகவும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. இவற்றை சரிசெய்வதற்கு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படல் வேண்டுமென ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்-

vada makana sabai mullivaaikal ninaivu (1) vada makana sabai mullivaaikal ninaivu (3) vada makana sabai mullivaaikal ninaivu (4)வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 9ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை கட்டடத்தில் இன்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்களால் சபையில் கறுப்புப்பட்டி அணிந்து தீபமேந்தி அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர் ரயீஸூம் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆயினும் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வெளிநடப்பு செய்திருந்தார். அவைத்தலைவர் இந்த செயற்பாட்டில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் சபையின் அஞ்சலி உரையினை வடக்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜி.ரி லிங்கநாதன் உள்ளிட்ட சிலரும் உரையாற்றினர். இதன்போது இறந்தவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டியது எமது பொறுப்பு என்றும் எந்த அடக்கு முறைக்குள்ளும் நாம் எமது உறவுகளை நினைவு கூருவோம் என்றும் உரையாற்றினர்.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்-மனித உரிமைப் பேரவை-

UNஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற யோசனைக்கு இணங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம், இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகவே அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் செய்தி தொடர்பாளர், தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உட்பட இலங்கை அரச அதிகாரிகள் ஐ.நா சபை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு விடுக்கப்படும் அழைப்புக்களை தொடர்ந்து நிராகரித்தாலும், விசாரணையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகப் பேச்சாளர் கூறியுள்ளார். ஆணையாளரின் செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும் சாத்தியம் பற்றி நம்பிக்கையோடு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீன ஜனாதிபதி சந்திப்பு-

imagesஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குடன் இரு தரப்பு உறவுகள் குறித்த இன்று உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். ஆசியாவின் சர்வ செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான 4ஆவது மாநாடு சீனாவின் சங்காய் நகரில் இடம்பெற்று வருகின்றது. இதில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி, இன்றுகாலை சீனா ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார். நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஈரான் ஜனாதிபதி ஹசன் ரொஹானியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடியிருந்தார். அத்துடன் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி முனையும் ஜனாதிபதி சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு எதிராக ஞாயிறு ஆர்ப்பாட்டம்-

indiaஇந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள பதவிஏற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 17 இயக்கமே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டசபையில் மகிந்த ராஜபக்;;ஷவை போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற நிலையில் அவரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பது ஏன்? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் நலன் கருதியே ஜனாதிபதிக்கு அழைப்பு-பா.ஜ.க-

imagesஇலங்கைத் தமிழர் நலன் கருதியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார் என்று தமிழக பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி, எதிர்வரும் 26ஆம் திகதி இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு இலங்கை, பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை. இலங்கைத் தமிழர்களின் நலன் கருதியே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதேவேளை நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி புரிந்து கொள்ள வேண்டுமென தி.மு.க கூறியுள்ளது.

ஜனாதிபதி பங்கேற்பதால் தமிழக முதல்வர் புறக்கணிக்கும் நிலைமை-

tamilnaduஇந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொள்வதில் சந்தேகம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் புதிய பிரதமராக எதிர்வரும் 26ஆம் திகதி மாலை, நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் வெளியானது முதல் தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளன. இதனால் ஜனாதிபதி பங்கேற்கும் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலிதா கலந்துகொள்வது சந்தேகமே என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நீதியான தேர்தலை நடத்த தற்போதுள்ள அதிகாரம் போதுமானது – தேர்தல் ஆணையாளர்-

mun koottiya vaakkaalar idaappuசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள அதிகாரம் போதுமானது என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலதிக அதிகாரம் இருக்குமானால் நல்லது. எனினும் தற்போது நடைமுறையில் உள்ள அதிகாரமே போதுமானாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டும்-சுப்ரமணியசுவாமி-

subramaniam swamyஇலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் சுப்ரமணியசுவாமி குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கும் பொருட்டு செயற்பட்ட இலங்கையர் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக இலங்கையுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இலங்கைக்கு தீவிரவாதத் தொடர்பில் நல்ல அனுபவம் இருக்கின்றது எனவும் சுப்பிரமணியசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் மீளிணைவு தொடர்பில் மேலும் ஒரு மூதாட்டி கைது-

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் மேலும் ஒரு மூதாட்டி யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். 64 வயதுடைய பத்மாவதி என்ற மூதாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது அவர் பயங்கரவாதப் புலனாய்வு பிவிரினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மீளிணைய முயற்சிக்கும் புலிகளின் எதிர்கால பயன்பாட்டிற்காக காணி ஒன்றை குறித்த மூதாட்டியின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும் அக் காணிக்கான பணத்தை புலிகளே குறித்த மூதாட்டிக்கு வழங்கியிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்-

வங்காள விரிகுடாவில் இன்றுகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் 30 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், புதுடில்லி கொல்கத்தா, ராஞ்சி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் சென்னையிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையின் அடையாறு, திநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சூளைமேடு, எக்மோர் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவ பேச்சாளர் உபய மெதவலவிற்கு புதிய பொறுப்பு-

வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாண (மேற்கு) வலயத்திற்குப் பொறுப்பான கட்டளையிடும் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உபய மெதவல நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியின் பரிந்துரையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னர் இப்பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா இராணுவ தலைமையக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். உபய மெதவல முன்னர் மத்திய பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வந்தார். அதன்படி, உபய மெவல எதிர்வரும் 26ம் திகதி பதவியேற்கவுள்ளார். உபய மெதவல இராணுவ ஊடகப் பேச்சாளராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இணையதளங்கள்மீதான தடை குறித்து முறைப்பாடு-

இலங்கையில் எட்டு செய்தி இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடக அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளன. இணையத்தளங்களை தடை செய்வதன் மூலம் அரசாங்கம் அரசியல் யாப்பை மீறியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பம்பலப்பிட்டி ஆசிரியர் மரணம்; தற்கொலை என்பது உறுதி-

கொழும்பு பம்பலபிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் தற்கொலை செய்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின்போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியரின் மனைவி தெரிவித்திருந்தார்.

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு-

modi pathaviyetpuஇந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள விழாவில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தெற்கு ஆசிய கூட்டமைப்பை சேர்ந்த சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. சார்க் அமைப்பில் பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன. எதிர்வரும் 26ம் திகதி இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அன்று மாலையில் புதுடெல்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகின்றது. தற்சமயம் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மகிந்த, அங்கிருந்து திரும்பிய பின்னர், புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்க புதுடெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வலிமேற்கு தவிசாளர் பண்டத்தரிப்பு பாடசாலைக்கு உதவி, இலவச ஆயள்வேத நடமாடும் சேவை-

valimetku thavisalarயாழ். வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் நேற்றையதினம் (20.05.2014) தமது மாதாந்த கொடுப்பனவினை பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலைக்கு பாடசாலையின் பூப்பந்தாட்ட அணியினை மேம்படுத்தும் முகமாக வழங்கினார், வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் மேற்படி பாடசாலையின் பழைய மாணவியாவார். மேற்படி தவிசாளர் தான் பதவி ஏற்ற காலம் முதலாக தனது மாதாந்த கொடுப்பனவை தொடர்ச்சியாக பல சமூகப்பணிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்று (21.05.2014) வலிமேற்கு பிரதேச சபையின் சங்கானைப் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள நவீன வசதிகளுடனான மீன்சந்தை தொடர்பில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள் சங்கானை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சங்கானை பட்டின அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் நாளைகாலை (22.05.2014) வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் அவர்களின் ஏற்பாட்டில் இலவச ஆயுள்வேத நடமாடும் சேவை அராலிப் பகுதியில் இடம்பெறவுள்ளது. வலி மேற்குப் பிரதேசத்தில் கடந்த கால வரட்சியால் பாதிக்கப்பட்வர்களுக்காக ஏறத்தாள 4000 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு 9760.00 படி வழங்க ஏற்பாடு செய்யப்படடுள்ளது குறிப்பாக விவசாயம் பாதிப்பு, விவசாய கூலி பாதிப்பு மற்றும் வீட்டுத்தோட்டம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இரணைமடு நீர் வினயோக திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டம் இன்று சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் தொடக்க உரையினை பிரதேச செயலர் நிகழ்த்தினார். தொடர்ந்து இத் திட்டம் பற்றிய விளக்கத்தினை வடிகால் அமைப்பு சபையினர் வழங்கினர்.

ரஷ்யா, ஈரான், இலங்கையுடன் இணைந்து அமெரிக்காவை எதிர்க்க சீனா முயற்சி-

americavai ethirkka china muyatshiபாதுகாப்பு ஒத்துழைப்பு ஆசிய அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு சீன ஜனாதிபதி எஸ்சி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா உள்ளிட்ட இலங்கை, ஈரான் ஆகிய நாடுகளை கொண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆசிய அமைப்புக்கே சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அமைப்பின் அமெரிக்கா இடம்பெறக்கூடாது என அவர் நிபந்தனை விதித்துள்ளார். ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு சாங்காயில் நடைபெற்றபோதே சீன ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் மூலோபாய போட்டியையும் தலையீட்டையும் குறைக்க சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளதென சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நம்முடைய பாதுகாப்பு ஒத்துழைப்பை புதிதாக்கி புதிய பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டமைப்பு நிறுவ வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஆசிய வலய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பதாக பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் சீன ஜனாதிபதியின் புதிய அழைப்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் விசாரணைக்கு அழைப்பு-

யாழ். பலாலி பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணைகளை தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை விசாரணைக்காக பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்திற்கு நேற்று யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி உதயபெரேர அழைத்திருந்தார். அங்கு நடைபெற்ற விசாரணைகளை தொடர்ந்து இன்று மேலதிக விசாரணைகளிற்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்திற்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலையே பலாலிக்கும் கொழும்புக்கும் இராசகுமாரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பம்பலப்பிட்டி பாடசாலை ஆசிரியரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு-

bambalapitiyil aasiriyar maranam (1)கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரின் சடலம் அப்பாடசாலை அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டதாகவும், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையெனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சடலம்மீதான நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது இது ஒரு கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாளையதினம் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புமென கூறப்படுகிறது. இதேவேளை சடலமாக மீட்கப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் பிரான்ஸ் கமிலாஸின் (வயது 37) மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளது என அவரது மனைவி மஹேசா கமிலாஸ் தெரிவித்துள்ளார்.

மலேசிய காவல்துறையினர்மீது குற்றச்சாட்டு-

malaysian policeமலேசிய காவல்துறையினர் இலங்கையிலிருந்து செல்லும் அகதிகள் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மலேசிய உள்ளுர் மனிதவுரிமைகள் அமைப்பொன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் மலேசிய காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சூவாரம் என்ற அமைப்பின் பேச்சாளர் ஆர் தேவராஜன் குற்றம் சுமத்தியுள்ளார். மலேசிய காவல்துறையினர் நாட்டின் அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயற்படுவதாக அவர் கூறியுள்ளார். மலேசியாவில் கடந்த வியாழக்கிழமை மூன்று இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிருபநாதன், மகாதேவன் கிருபாகரன் மற்றும் குஸாந்தன் சந்திரலிங்கம் என்ற பெயர்களில் அவர்கள் அறியப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்களின் விசாரணை குடிவரவு சட்டத்தின் அடிப்படையில் நடைபெறவேண்டும் என்று தேவராஜன் வலியுறுத்தியுள்ளார். இவர்கள் மூவரையும் நாடு கடத்தக்கூடாது என ஐ.நா மனித உரிமைகள் சபையிலும் அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதி பான் கீ மூனுடன் பேச்சுவார்த்தை-

mahinda ban ki moon meetசீனாவில் இடம்பெறும் ஆசியாவின் சர்வ செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான சர்வதேச மாநாட்டில் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உரையாற்ற உள்ளார். இதனிடையே, சீனாவின் ஷங்காய் நகருக்கும் சென்ற ஜனாதிபதி நேற்று பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னுன் ஹூசைனை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது இருநாட்டு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என பாகிஸ்தானிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.. அத்துடன், இரு நாட்டுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை நடத்துவதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டது. இதனிடையே, இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி சீன ஜனாதிபதி மற்றும் ஈரான் ஜனாதிபதி ஆகியோரை சந்திக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகபிரிவு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி இன்றைய தினம் ஐ.நா பொதுச் செயலாளர் பான்கி மூனை சந்திக்கவுள்ளார்.

நானுஓயாவில் காணமல்போன மாணவிகள் மீட்பு-

imagesCA4W14EAநுவரெலியா, நானுஓயாவில் நேற்றுமாலை காணமல் போனதாக கூறப்பட்ட 2 பாடசாலை மாணவிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளனர். நானுஓயாவிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து இரு மாணவிகளும் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகள் இருவரும் பாடசாலைக்கு சென்று வீடு திரும்புகையில் நேற்றுமாலை காணமல் போயிருந்ததாக கிடைத்த முறைப்பாட்டு அமைய, பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, மாணவிகள் இருவரும் கடத்தப்பட்டிருந்தார்களா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய சிறைச்சாலை அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை-

puthiya sirai athikarikalசிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 67 புதிய சிறைச்சாலை அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் வெற்றிடங்கள் நிலவுவதாகவும், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட தகுதிகாண் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம் தெரிவித்துள்ளார் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான பரீட்சையில் சித்தி அடையாதவர்களால், பரீட்சையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நேற்றையதினம் தள்ளுபடி செய்யப்படுள்ளது

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம்-

kilakku makana padasalaikalukuகிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை மீள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, 40 புதிய ஆசிரியர்களுக்கு நேற்று நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.நிசாம் தெரிவித்துள்ளார். திருகோணமலை கல்வி அபிவிருத்தி முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் நியமனம் வழங்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது. நிபந்தனை அடிப்படையில் புதிய ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

வீசாவில் வந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இணைய முயற்சி-அமைச்சர் சம்பிக்க-

china udanaana nadpuravai modi viruppa mattaarசுற்றுலா விசா மூலம் இலங்கைக்குள் வந்த வெளிநாட்டவர்கள் வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயர்களை பதிவு செய்துகொள்ள முயல்வதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி ஷம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சி செயலர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்குமிடையிலான சந்திப்பின்போது ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர்களும் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்திருந்தனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சிங்களக் குடியேற்றங்களுக்கு யாரிடமும் அனுமதி கோரத்தேவையில்லை-ஹெல உறுமய-

Jathika Hela Urumayaவடக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள நாம் யாரிடமும் அனுமதி கோரவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைப்பாளரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில வடக்கில் தனி தமிழர்களுக்கு அங்கீகாரம் கொடுத்ததனாலேயே பயங்கரவாதம் உருவாகியது எனவும் குறிப்பிட்டுள்ளார். மூவின மக்களையும் இணைத்து வடக்கில் குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இராணுவ பிரசன்னத்தை குறைக்க இதுவே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்க மன்னாரில் சிங்களக் குடியேற்றத்தினை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டமை தொடர்பில் கூறும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமோ, சர்வதேசத்திடமோ அனுமதியினைப் பெற்று வடக்கில் சிங்கள மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை. சிங்கள மக்கள் எவ்வித தடைகளும் இன்றி வடக்கில் வாழக்கூடிய உரிமை உள்ளது. அதனை எவராலும் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது. மேலும், வடக்கில் இராணுவ அதிகரிப்பு உள்ளதெனவும் பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதாகவும் கூட்டமைப்பு தொடர்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது. இதனைத் தடுக்க வேண்டுமானால் வடக்கில் மூவின மக்களையும் குடியேற்ற வேண்டும் என்றார் அவர். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு-

Mullivaikal ninaivendhal (2)Mullivaikal ninaivendhal (1)யாழ்.பல்கலைகழகத்தில் பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதாக தெரியவருகிறது. பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் இன்றுகாலை 11 மணியளவில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் ஆத்மா சாந்தியடையவேண்டி சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இவ் அஞ்சலி நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இலங்கைத் தமிழர் நலனில் அக்கறையோடு செயற்படுவேன்- நரேந்திர மோடி-

Pலங்கைத் தமிழ் மக்களின் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக (மறுமலர்ச்சி) மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வைகோ வாழ்த்தியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப்போல செயற்பட வேண்டாம் என நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மே மாதத்தில் சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த இராணுவ உதவியைக் கொண்டு இலங்கை இராணுவம், இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப் படுகொலை செய்தது. காங்கிரஸ் தலைமை செய்த அதே தவறை மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் செய்யக்கூடாது என மோடியிடம் வலியுறுத்தினேன் என்று வைகோ கூறியுள்ளார். அத்துடன், இலங்கைத் தமிழர்கள் அனைவரும், உங்களது ஆட்சியில் பாதுகாப்புப் பெறுவார்கள் என நம்புகின்றேன் என மோடியிடம் தான் கூறியதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மோடி, இலங்கைத் தமிழர் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயற்படுவேன் என்று உறுதியளித்துள்ளார்.

சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு வலியுறுத்தல்-

UNஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்த இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமை பிரேரணைக்கு அமைய சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் தீர்மானத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிரகாரித்துள்ளது. எனினும் யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் நடத்தப்படவில்லை. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்திற்காக காத்திருக்கின்றனர். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் இலங்கையில் நீடித்து வருகிறது. ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கரிசனை காட்டவில்லை. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு கூட இலங்கையரசு அனுமதி மறுத்திருந்தது என மனித உரிமை கண்காணிப்பக பணிப்பாளர் பிரட் அடம்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோடியின் ஆட்சி இலங்கைக்கு நன்மை பயக்கும்-அமைச்சர் ரம்புக்வெல்ல

kehaliya rambukwellaஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியுள்ள மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் உறுதியான அரசாங்கம் இந்தியாவில் காணப்படுமாயின் அது இலங்கைக்கு நன்மையானதாக இருக்கும். இலங்கை, இந்தியாவுடன் ஒரு நல்லுறவை பேணுமேயானால் இலங்கையில் சௌகரியமான ஆட்சியை மேற்கொள்ளலாம் என ஊடக மற்றும் தொடர்பாடல் அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மோடியை, பெரும்பான்மை சக்தி தெரிவு செய்தமையினால் உறுதியான அரசாங்கத்தை அவரால் கொண்டு நடாத்தமுடியும். தேர்தலிகளின் பின்னர் கூட்டணிகள் அமைக்கப்பட்டிருக்குமாயின் கட்சிகளுக்கிடையில் போட்டிகள் உருவாகியிருக்கும். ஆனால் தற்போது மோடியால் எந்த ஒரு முடிவினையும் சுதந்திரமாக எடுக்கமுடியும். அது மாத்திரமல்ல இலங்கையும் அயல் நாடு என்பதினால் இலங்கையர்களாகிய எமக்கு அது பிரயோசனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மோடிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே நல்ல அனுபவங்களையும் தூர நோக்குடைய சிந்தனைகளையும் உடையவர்கள். மோடி ஒரு அனைவரின் கவனத்தையும் திருப்பும் தலைவர். எமக்கு எந்த ஒரு விடயமானாலும் இந்தியாவுடன் தொடர்பு கொள்வதில் இனிமேல் எவ்வித பயமும் இல்லை. அதேபோல இலங்கை இந்தியாவுக்கான நல்லுறவை மேலும் பேணவும் முடியும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தேர்தலின்போது 39 ஆசனங்களில் 37 ஆசனங்கள் பெற்றுக்கொண்டது தொடர்பில் இலங்கை எவ்வித கவலையையும் கொள்ளவில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவரை பெற்றோர் அடையாளம் கண்டனர்-

isai priya arukil ullavarஇறுதிப்போரின் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு, அதற்கான ஆதார படமாக அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி, மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து பெற்றோர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இறுதிப்போரின்போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி, 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியாவுககு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்-

imagesCA5PZGM219 வருடங்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி யுரேசா டி சில்வா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான இந்திய பிரஜைமீது 26ம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் – பரசன்கஸ்வௌ, கோலிபெந்தேவ பகுதியில் வைத்து குறித்த இந்திய பிரஜை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தடை உத்தரவு பெற ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்குமாறு அறிவுறுத்தல்-

12887486002109922332law02எதிர்வரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை உத்தரவு பெற வேண்டுமாயின் ஒரு வாரத்திற்கு முன்பே நீதிமன்றிற்கு அறிவித்திருக்க வேண்டும் என கொழும்பு நீதவான் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்து கைது செய்யப்பட்ட இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களை நீதிமன்றில் நேற்று பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தடை விதிக்கும்போது ஏற்பாடு செய்த தரப்பினரிடமும் கருத்தறிய வேண்டியுள்ளதென நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உரிமை போராட்டங்களை முன்னெடுக்கவென ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யும்போது சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற கருத்தை முன்வைத்து பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவுபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் பிரச்சினைக்கு புதிய அரசிடம் தீர்வு கோரல்- 

fishermen talksஇலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு புதிய அரசாங்கத்தின் ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக தமிழக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் எற்கனவே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவு பெற்றுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் ஊடாக தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள விரும்புவதாக இலங்கை இந்திய மீனவர் சங்க அமைப்பின் தமிழக தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். இதற்கான முன்னெடுப்புகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சங்கானை நிச்சாமம் சரஸ்வதி முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா-

Nichchamam saraswathi munpalli (1)Nichchamam saraswathi munpalli (2)Nichchamam saraswathi munpalli (3)யாழ். சங்கானை நிச்சாமம் சரஸ்வதி முன்பள்ளியின் 2014ம் ஆண்டுக்குரிய வருடாந்த விளையாட்டு விழா கடந்த 15.05.2014 அன்று வியாழக்கிழமை முன்பள்ளியின் தலைவர் செல்வன் இ.பிரதீப் தலைமையில் பி.ப 1.30 மணியனவில் ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் Nichchamam saraswathi munpalli (4)Nichchamam saraswathi munpalli (6)அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக சங்கானை கிழக்கு விக்னேஸ்வரா வித்தியாசாலை அதிபர் திரு.பொ.தயானந்தன் அவர்களும் சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைவர் திரு.ம.கிருஸ்ணராஜா அவர்களும் வலிமேற்கு முன்பள்ளி இணைப்பாளர் செல்வி ந.நிறஞ்சனா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் சரஸ்வதி முன்பள்ளி ஆசிரியை திருமதி.தே.தெய்வேந்திரம் அவர்களும் து-179 பிரிவு கிராம சேவகர் திரு.நா.மகிழ்ராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வில் கலந்துகொண்டு தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், முன்பள்ளிகள் இன்று எமது சழூதாயத்திலே முக்கிய இடம் வகிக்கின்றது. முன்பள்ளிகளில் வழங்கப்படுகின்ற கல்வி காத்திரமானதாக அமையும்போது மட்டுமே வளமான எதிர்கால சந்ததி உருவாக முடியும். இன்று முன்பள்ளிகள் பல சவால்களுக்கு மத்தியில் இயங்கும் நிலையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக பௌதீக வளப்பற்றாக்குறை மிக முக்கியமான ஒன்றாகும். பல முன்பள்ளிகள் பழைய கட்டிடங்களிலும் மலசலகூட வசதியற்ற நிலையிலும் விளையாட்டு முற்றம் அற்ற நிலையிலும் இயங்குகின்றன. இது மட்டுமல்லாது போதுமான ஆளணி அற்ற நிலைமையும் இங்கு காணப்படுகின்றது. இவ் விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிக முக்கியமான ஓர் விடயம் ஆகும். இவ் விடயங்கள் தொடர்பில் பலமுறை பல இடங்களிலும் குறிப்பிட்டும் கூட இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில இடங்களில் முன்பள்ளிகளுக்கு முற்றுமுழூதாக பொருத்தமற்ற நிலையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் முன்பள்ளிகள் காணப்படுவது வேதனைக்குரிய ஒர் விடயம் ஆகும். பொருத்தமான கட்டமைப்பு காணப்படும் சந்தர்ப்பத்தில் கல்விச் செயற்பாடுகளும் பொருத்தமானதாக அமைய வாய்ப்பு காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பம் காணாத பட்சத்தில் இந் நிலைப்பாடு மாணவர்களின் கல்விப்புலத்திலும் தாக்கத்தினை உருவாக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும். மாணவர்கள் உடல் உள ஆரோக்கியம் கொண்டவர்களாக காணப்பட்டபோதும் கல்வி நிலையில் பின் தங்கியவர்களாகவும் திறன் குறைந்தவர்களாகவும் மெல்லக் கற்பவர்களாகவும் காணப்படுவதற்கு இவ்வாறான பொருத்தமற்ற நிலையும் காரணமாக உள்ளமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இவ் விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்வேண்டியது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்றாகும். இலங்கையின் ஏனைய பகுதிகளில் இவ் முன்பள்ளிகள் உள்ளுராட்சி அமைப்புகளிடம் உள்ள நிலையில் இங்கு மட்டும் இவ் அமைப்பு எம்மிடம் இல்லாத நிலை மிக வேதனைக்குரிய ஒன்றாகும். இவ் விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதும் இன்றைய மிக முக்கியமான ஒன்றாகும். இது மட்டும் அல்லாது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வேதனம் தொடர்பிலும் உரிய நடவடிக்ழககள் மேற்கொள்ளப்படுவதும் மிக முக்கியமான ஒன்றாகும். மிக குறைந்த சம்பளத்தில் அர்ப்பணிப்புடன் அவர்களால் நிறைவேற்றப்படும் இவ் கல்விப்பணி காலத்தினால் போற்றப்படவேண்டிய ஒன்றாகும். இவ் முன்பள்ளியின் தேவைகள் தொடர்பில் இவ் நிர்வாகத்தினர் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இவ் விடயங்கள் தொடர்பில் என்னால் இயன்றவரை நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளேன். எமது பிரதேசத்தில் உள்ள முன்பள்ளிக்ள் தொடர்பில் வெகு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன் என குறிப்பிட்டார்.  

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சர்வதேச புவிதினம்-

puvi1 puvi2 puvi3 puvi4 puvi5 puvi6யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சர்வதேச புவி தினம் கடந்த 16.05.2014 வெள்ளிக்கிழமை அன்று வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அனர்;த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு. சங்கரப்பிள்ளை ரவீந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழவில் கௌரவ விருந்தினராக வலிமேற்கு பிரதேச சுற்றாடல் உத்தியோகஸ்தர் திருமதி திருச்செல்வி சிவானந்தன் அவர்களும் டயானா பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளர் த.தவராஜா அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இந் நிகழ்வில் ஆசியுரையினை வணபிதா செபஸ்டியன் அன்டனி அவர்களும் சபா.வாசுதேவ குருக்கள் அவர்களும் நிகழ்த்தினர். இவ் நிகழ்வில் தலமையுரையில் தவிசாளர் உரையாற்றும்போது, இன்று இவ் புவி தினத்தினை எமது பிரதேசத்திலே நிகழ்த்துவதை இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று சுற்றுப்புற சூழல் பல்வேறு தாக்கங்களுக்கும் உட்பட்டிருப்பதனை நாம் உணரக்கூடிய ஒர் நிலை ஏற்பட்டு விட்டது. முன்னர் இவ் விடயங்கள் தொடர்பாக பேசினோம். ஆனால் இன்று அவற்றின் விளைவுகளை அனுபவிக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விட்டது. இதுவரை எத்தனையோ வகையினதான மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதன் விளைவுகள் பாரதூரமான தாக்கத்தினை மனித குலத்தின்மீது ஏற்படுத்தும். எம் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என்ற எதிர்பாhர்ப்பில் பல நடவடிக்ழககளை நாம் மேற்கொள்கின்றோம். இவ் விடயம் தொடர்பிலும் எனது வீடு நான் என்ற வகையில் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றது. நாம் எமது என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் ஏற்படுவதில்லை. வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் நாம் பிரதேசம் தொடர்பில் அதிக கவனம் கொள்ளத்தவறி விடுகின்றோம். இவ் விடயத்தில் நாம் தொடர்ர்ச்சியாக கவனம் கொள்ள தவறும் போது சூழலின் தாக்கத்தினால் சூழல் அகதிகளாக மாறவேண்டிய நிலை வெகு விரைவில் உருவாகி விடும். பசுமை நகரங்கள் என்ற கருப்பொருளில் இவ் ஆண்டு உலகம் முழூவதிலும் இவ் புவி தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இக்கருப் பொருளின் தன்மையை உணர்ந்தவர்களாக நாம் அனைவரும் செயற்படுவது காலத்தின் கட்டாயம் ஆகும். இவ்வாறான விடயம் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படவே இவ்வாறான நிகழ்வுகள் இவ் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக இன்றைய மாணவர்களின் மத்தியில் இவ் விழிப்புணர்வு ஏற்படவே மாணவர்கள் மத்தியில் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டார், இந் நிகழ்வினை ஒட்டி நடாத்தப்பட்ட சித்திரப் போட்டிகள் 7 பிரிவுகளாக நடாத்தப்பட்டது அத்துடன் 7பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இத்துடன் 72 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக – இன்றைய நகராக்க செயல்முறைகள் நகர மீட்சித் திறனை வளர்த்தெடுக்கின்றனவா அல்லது வளர்த்தெடுக்க தவறி விட்டனவா எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக புவியியல் மற்றும் திட்டமிடல் மாணவர்களின் பட்டிமண்டபம் இடம்பெற்றது. இவ் நிகழ்விறிகு புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் நடுவராக கலந்து சிறப்பித்தார். இவ் நிகழ்வில் பிரதேச சபையில் மிக நீண்ட காலம் பனியாற்றி வரும் திரு பாரதி என்பவருக்கும் கௌரவிப்பு நடைபெற்றது  

சுழிபுரம் கள்விளான் சனசமூக நிலையத்தில் சிறுவர்களுக்கான மகிழ்வகம் நிகழ்வு-

kalvilaan siruvar makilvagam (1)kalvilaan siruvar makilvagam (2)யாழ். வலிமேற்கு பிரதேச சபைத்தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கான மகிழ்வகம் நிகழ்வு கடந்த 16.05.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை சுழிபுரம் கல்விளான் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஏராளமான சிறுவர்கள் கலந்து பயன்பெற்றனர். இதேவேளை அன்று மாலை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 பஜனைப் பாடசாலைத் திட்டம் வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியிலுள்ள பிட்டியம்பதி பத்திரகாளி கோவிலில் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதேவேளை யாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளரால் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகத்தின் இரண்டாவது  நிகழ்வு சங்கரத்தை மாதர்சங்க மண்டபத்தில் தலைவர் திருமதி சந்திரசோதி நேசகுமாரி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டார். இங்கு வளவாளராக கலந்து கொண்ட திரு சிறிகஜன் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி மற்றும் உளவிருத்தி செயன் முறைகள் பற்றிய விளக்கங்களை முழூமையாக பல்லூடக எறிகருவி மூலமும் செயன் முறைகள் மூலமும் வழங்கினார். இந் நிகழ்வில் மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பெற்றோரும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.  

வலிகாமம் மேற்கில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தெளிவுபடுத்தல் நிகழ்வு-

hinduhindu1unnamedhindu2யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் கடந்த 15.05.2014 வியாழக்கிழமை அன்று வலிகாமம் மேற்கு பகுதி பாடசாலைகளில் கா.பொ.த உயர்தரத்தில் அரசியல் விஞ்ஞானத்தினை ஒர் பாடமாக கற்கும் மாணவர்களுக்கு சட்டக்கல்லூரி மற்றும் சட்டத்துறை சார்ந்த விடயங்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு சித்தன்கேணியில் அமைந்துள்ள வட்டு இந்து நவோதய பாடசாலை வள்ளியம்மை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் தலைமை உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு சிவஞானபோதன் தனஞ்சயன் இச் செயற்பாடு இன்றைய காலத்தின் கட்டாய தேவை ஆகும் மாணவர்கள் தமது எதிர்காலத்தினை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு சரியான தெரிவு அவசியமான ஒன்றாகும். சட்டத்துறை சார்ந்து மாணவர்கள் தமது கல்வியை முன்னெடுக்கும் போது உயரிய நிலையினை பெறமுடியும் என குறிப்பிட்டார். இந் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்றைய மாணவர்கள் மிகுந்த சிரத்தையுடன் கல்வியை பயில்கின்றனர் பல்கலைக்கழகமும் செல்கின்றனர் அதன் பின்னர் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதில் பல இடர்பாடுகளை எதிர்நோக்கு கின்றனர். இந் நிலை அவர்களை விரக்தி நிலைககு இட்டுச் செல்கின்றது. மாணவர்கள் தமது துறைகளை தெரிவு செய்யும் போது தமக்குரிய வாய்ப்புக்களை முதலிலி ஆராய வேண்டும். சட்டத்துறை சார்ந்து இன்று பல தேவைகள் காணப்படுகின்றது. மாணவர்கள் சட்டத்துறையில் ஆர்வமானவாகளாக வரவேண்டும் என்பதற்காகவே இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்தேன். இக் கருத்தரங்கின் வாயிலாக உங்களுக்கான சந்தர்ப்பங்கள் எவை என்பதனை நீங்களே கண்டுகொள்ள முடியும் என குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய வளவாளர் சட்டத்தரனி சுகாஸ் தவிசாளரின் இச் செயல்பாடு நல்லதோர் முன் உதாரணம் ஆகும். அவரது முயற்சி பாராட்டத்தக்கது எமது பிரதேசத்திற்கு ஒர் அரிய சொத்தாகவே தவிசாளர் காணப்படுகின்றார். இவரது இந்த முயற்சி மாணவர்களுக்கு மிகுந்த பயன் வாய்ந்த செயலாகும் என குறிப்பிட்டதோடு தொடர்ந்து கருத்தரங்கினை நடாத்தினர் இக்கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர்  

வடக்கு மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது-

வடக்கு ரயில் மார்க்கத்தில் தடைப்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக   ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. பொத்துஹரவுக்கும் பொல்கஹவெலவுக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயிலொன்றில் இன்றுகாலை இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் வடக்கு ரயில் மார்க்கத்தின் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. பொத்துஹரவில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ரயிலின் பாகங்களை, அனர்த்த நிவாரண ரயிலில் கொண்டு வந்த வேளையில் குறித்த ரயிலில் இன்றுகாலை இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டது. இதனால் கொழும்பிலிருந்து பளை மற்றும் மட்டக்களப்பு வரையான ரயில் சேவைகள் தடைப்பட்டதுடன் வடக்கு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து  கொழும்பிலிருந்து பொல்கஹவல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு 26931 பயனாளிகள்; தெரிவு-

இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தியன் வீட்டுத்திட்டத்திற்கு இதுவரை வடக்கு மாகாணத்தில் 26931 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதரக தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்துள்ளார். மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய வீட்டுத்திட்டத்தில் முதல் 1000 வீடுகள் 5 மாவட்டங்களிலும் உள்ள 25 இடங்களில் கட்டப்பட்டன. அதனையடுத்து 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் 43 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இணைந்து கைச்சாத்திடப்பட்டது. அதன்படி கடந்த முதலாம் திகதி வரைக்கும் 26931 பயனாளிகள் வடக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 11227 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 16654 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. எனினும் மிகவிரைவில் பூர்த்தியாக்கப்படும் என்றும் மகாலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமலை வைத்தியசாலையின் வைத்திய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை-

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு புதிதாக 8வைத்தியர்களும், 7தாதியர்களும் இன்றுமுதல் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், திருகோணமலை வைத்தியசாலையில் சுமார் 100 தாதியர்களுக்கும், 30 – 40 வரையிலான வைத்தியர்களுக்கும்  பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநோயாளர் பிரிவுக்கு போதுமானளவு வைத்தியர்கள் இல்லை எனவும் திகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.    ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பில் விசாரணை- காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, மட்டக்களப்பு பகுதிக்கான தமது விசாரணைகளை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியு. குணதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, மண்முனை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, 3 மாவட்டங்களில் அடிப்படை விசாரணைப் பணிகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மட்டக்களப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அரசாங்க அதிபரினதும், அதிகாரிகளினதும் பங்களிப்புடன் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியு. குணதாச மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த காலத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை விசாரணை நடவடிக்கைகள் வரையறுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அந்த பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளன.   இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் இராஜதந்திர பேச்சு- இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு இராஜதந்திர முறையில் தீர்வுக்காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை இந்திய மீனவர் சங்க அமைப்பின் தமிழக தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நரேந்திரமோடி தலைமையிலான இந்திய புதிய அரசாங்கத்தின் ஊடாக இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான அடுத்தகட்ட பேச்சு வார்த்தை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.               

யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு-

இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேர்முகத் தேர்வு யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக் வலயத்தில் இன்றுகாலை இடம்பெற்றது. இந்த நேர்முகத் தேர்விற்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த  32 பேர் அழைக்கப்பட்டு அவர்கள் 32பேரும் இன்றுமுதல் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கான பயிற்சிகள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள பெண்கள் பயிற்சிக் கல்லூரியில் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும்  யாழ். மாவட்ட இராணுவ ஊடகப்போச்சாளர் ரஞ்சித் மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.  

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை-

பாதுகாப்புச் செயலர்- சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடிபணியப் போவதில்லை என்றும், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தமை குறித்த கொண்டாட்டங்களில் ஈடுபட இலங்கைக்கு எல்லா வகையிலான உரிமைகளும் காணப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை கைவிட முடியாது எனவும் தொடர்ச்சியாக கொண்டாட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளின் பின்னர் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால், புலிகளினால் ஏற்பட்ட பாதிப்புக்களை கனடா விளங்கிக்கொள்ள முடியும். புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக சொற்பளவிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களே நாட்டுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை இராணுவத்தின் அளவு படையினர் நிலைநிறுத்தம் தொடர்பில் உலக நாடுகள் தீர்மானம் எடுக்க முடியாது. அதனை தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

கைத் தொலைபேசியில் புலிகளின் பாட்டு வைத்திருந்தவர் கைது-

புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் பதிவேற்றம் செய்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசியில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் சேமித்து வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  

உலக சுகாதார அமைய உப தலைவராக மைத்திரிபால நியமனம்-

உலக சுகாதார அமையத்தின் உப தலைவராக இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற உலக சுகாதார அமையத்தின் 67வது மாநாட்டில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பார்வையற்றவர்களுக்கான கையடக்கத் தொலைபேசி அறிமுகம்-

பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையிலான கையடக்க தொலைபேசிகளை பிரிட்டன் நிறுவனமான ஓன்போன் தயாரித்துள்ளது. இதன் விலை 5900 இந்திய ரூபாய்களாகும் பார்வையற்றவர்கள் எளிதில் மற்றவர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த கையடக்கத் தொலைபேசிகள் தயாரிக்கப்பட்டுள்ளனர். தற்போது பிரிட்டனில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இந்த போனின் முன், பின் பக்கங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளதால் அவற்றை விருப்பப்படி மாற்றியமைத்துக் கொள்ள முடியும். பிரெய்லி முறை தெரியாதவர்களும் இந்த போனில் வழக்கமான முறையில் தகவல்களைப் படிக்க முடியும்.’முப்பரிமாணத் தொழில் நுட்பத்துடன் அச்சடிக்கப்பட்ட கீ போடுகளைக் கொண்ட முதல் பிரெய்லி போன் இதுவென கூறப்படுகிறது. இந்தப் போனில் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டிருக்கும் பிரெய்லி எழுத்துகளை நாம் தேவைப்பட்டால் அதிகரித்துக் கொள்ள முடியும் இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என இந்த மொபைல் போனைக் வடிவமைத்த டாம் சுந்தர்லேண்ட் தெரிவித்துள்ளார். சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள முதல் பிரெய்லி போன் இதுவெனக் கூறப்பட்ட போதிலும் ஆனால் கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் கிரியேட் நிறுவனம் பிரெய்லி வசதி கொண்ட ஸ்மார்ட்போனை தயாரித்தது பிரெய்லி எழுத்துகளைத் திரையில் காட்டும் வசதியும் அந்த போனில் இணைக்கப்பட்டிருந்தது.  

இந்திய புலனாய்வு முகவர் என சந்தேகிக்கப்படுபவர் கைது-

இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் அதிகாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை அநுராதபுரம், கொலியபென்டாவெள பகுதியிலுள்ள பரசங்கஸ்வெள எனுமிடத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து பல்வேறுப்பட்ட ஆவணங்கள், படங்கள் மற்றும் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர், விசேட துப்பறியும் பிரிவினரினாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 44வயதான சந்தேகநபர் இலங்கையில், ஹமாஸ் ஜமால்டீன் என்ற பெயரிலேயே இருந்துள்ளார். அவர் வடக்குக்கு அடிக்கொரு தடவை பயணித்துள்ளதாகவும் அவர் இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர், போலி கடவுச்சீட்டுடன் வெளிநாடுகளுக்கும் பல தடவைகள் சென்றுள்ளார். தனது முன்னைய கடவுச்சீட்டு தொலைந்து போனதாகக் கூறி இலங்கையில் இவர் கடவுச் சீட்டைபெற்றுள்ளார். இந்தியாவில், கேரள மாநிலத்திலிருந்து 1995ஆம் ஆண்டு இவர் இலங்கை வந்தததாகவும் கொழும்பு டெக்னிக்கல் சந்தி, வவுனியா, அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் பரஸன்கஸ்வெள ஆகிய இடங்களில் ஹோட்டல்களில் வேலைசெய்ததாகவும் விசாரணைகளின் போது தெரிவந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

சர்வதேச விசாரணையை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும்-ராஜித-

சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக  நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு  கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போரை வெற்றி கொள்வதற்கு பலமும் புத்திசாலித்தனமும் தேவைப்பட்டது. ஆனால் தற்போது எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களையும் சவால்களையும் வெற்றிகொள்ள புத்திசாலித்தனமே தேவை. சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கோரி வந்த தமிழ் தரப்பினர் போர் முடிவடைந்ததும் முதல் தடவையாக ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்துக்கு இணங்கினார்கள். ஆனால் அரசு அதனைக் கருத்தில் கொள்ளாமல் காலதாமதமாகியதால் அவர்கள் மீண்டும் தமது பயணத்தை மாற்றியுள்ளனர். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எமது அரசியல் தலைவர்கள் கைநழுவ விட்டனர். சிலர் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போது நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போர் முடிந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் உரிய முறையில் பேச்சுக்களை நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைத்திருக்கலாம்.  அவ்வாறு செய்திருந்தால் இன்று இவ்வாறான சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இன்று சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இலங்கைக்குள் எந்தவொரு விசாரணைக் குழுவையும் அனுமதிக்க மாட்டோம் என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது மிகவும் முட்டாள் தனமான வாதமாகும். இந்த விசாரணையில் பிரதிவாதிகளே நாம் தான். எனவே நாம் இந்த விசாரணையில் கலந்து கொள்ளாமல் விசாரணைகள் நடக்குமானால் முடிவு பயங்கரமானதும் பாரதூரமானதுமாக இருக்கும். எனவே இந்த விடயம் தொடர்பில் நன்றாகச் சிந்தித்து இராஜதந்திர ரீதியில் தான் அணுக வேண்டும். எமது நாட்டுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படுமானால் பொருளாதாரம் பாதிப்படையும்.  லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்க வேண்டிவரும். இவ்வாறான சவால்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் போது மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அப்பொழுது சர்வதேசம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மே 18 முள்ளிவாய்கால் தமிழர் நினைவுகளும் – அரச கொண்டாட்டங்களும்

_nocredit (1)Banner1_CIஇலங்கையின் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஆனாலும், பலத்த இராணுவ பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பதட்டமான சூழலிலும் இறுதி யத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. Read more

இந்தியாவின் புதிய பிரதமருக்கு புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் வாழ்த்து

Sithar-ploteஇந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள திரு. நரேந்திர மோடிக்கு புளொட் அமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களிலொருவருமான திரு.த.சித்தார்த்தன் அவர்கள் வாழ்த்து.

எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அவதானித்து வந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாறு காணாதவொரு வெற்றியை  பெற்றிருப்பது குறித்து, எங்களது மக்கள் சார்பில் எனது வாழ்த்தையும் மகிழ்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவரும் எதிர்ப்பார்த்தவாறே இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர  மோடி அவர்கள் பதிவியேற்கவுள்ளார். அவருக்கு எனது மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் பெரும் மகிழ்சியடைகின்றேன்.
இலங்கையில் இனமுரண்பாடு உருவெடுத்த காலத்திலிருந்து, எமது பிராந்திய சக்தியான இந்தியா ஒன்றையே நாம் பெரிதும் நம்பி வந்திருக்கிறோம். அதே நம்பிக்கையுடனேயே தற்போதும் செயற்பட்டு வருகிறோம். பெரு வெற்றியொன்றை பெற்றிருப்பதன் ஊடாக, பிரதமராக வரவுள்ள மோடி அவர்கள், தெற்காசியாவின் பலம்பொருந்;திய தலைவராக மாறியுள்ளார். அந்த வகையில், அவரது காலத்தில், எமது மக்கள் முகம்கொடுத்துவரும் பிரச்சனைகளுக்கு, ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நாம் முன்னெடுக்கவுள்ள முயற்சிகளுக்கு, அவர்;, பக்கபலமாக இருப்பார் என்றே நம்புகின்றோம்.
மாறிவரும் உலக ஒழுங்கில், ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில், இந்தியாவின் முன்னால் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நாம் விளங்கிக்கொள்ளாமல் இல்லை, எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் மக்களும், தங்களது உரிமையை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக கண்ணீர் சிந்திவருபவர்களுமான, தமிழ் மக்களின் பிரச்சனையையும், ஒரு முக்கியமான பிராந்திய விடயமாக கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பை, மோடி அவர்களின் அரசாங்கம் ஒரு போதுமே தட்டிக்கழிக்காது, என்னும் நம்பிக்கை எமக்குண்டு.

த.சித்தார்த்தன்
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர்
வட மாகாணசபை உறுப்பினர்

 

இந்திய தேர்தலில்

Posted by plotenewseditor on 18 May 2014
Posted in செய்திகள் 

 இந்திய தேர்தலில்

imagesபுதுடெல்லி : நாடு முழுவதும் 1,687 பதிவு செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இவற்றில் இந்திய தேசிய காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 6 தேசிய கட்சிகளும், 54 மாநில கட்சிகளும், 1,627 பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகாரம் பெறாத கட்சிகளும் உள்ளன.இந்த மக்களவைத் தேர்தலில் மோடி அலையால் பெரிய கட்சிகள் உட்பட 1,652 கட்சிகள் தோற்றுள்ளன. இவற்றில் பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட பல பெரிய கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.  16வது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 8,241 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 3,234 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். கட்சிகளின் சார்பாக நின்றவர்கள் 5,007 பேர்.கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்ற 540 பேர், 35 கட்சிகளை சேர்ந்தவர்கள். 3 சுயேச்சை வேட்பாளர்கள் புதிதாக நாடாளுமன்றத்தில் நுழைகிறார்கள். கடந்த தேர்தலில் கணிசமான எம்பி.க்களை கையில் வைத்திருந்த பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டு கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இம்முறை ஒரு எம்பி. கூட இல்லை. Read more