வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது விசேட அறிவித்தல்.valimetku thavisalar

1) வாக்காளர் தினம் -யூன் -1

வாக்களர் தினமாகிய இன்று வாக்களிப்பு தொடர்பில் வாக்காளர்கள் தமது வாக்குரிமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக செயற்படுவதற்கான ஒரு விழிப்புனர்வு நாளாகவே கருத வேண்டும். இன்று பலரும் தமது கவலையீனத்தினால் தம்மை வாக்காளராக பதிவு செய்வதிலிருந்து தவறிவிடுகின்றனர். இதனால் அவர்கள் தமது வாக்குரிமையினை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மிக வேதனைக்குரிய ஒரு விடயம் ஆகும்.
1931ம் ஆண்டு டொணமூர் யாப்பின் மூலமாக அறிமுகமானது இந்த சர்வசன வாக்குரிமை.
இன்று வரை பல தேர்தல்கள் நடை பெற்றும் மக்கள் பலர் தமது வாக்குரிமையை பதிவு செய்ய தவறியதால் தமது வாக்குரிமையை இழந்துள்ளனர், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது வாக்குரிமையை தமது பிரதேச கிராம அலுவலர்கள் ஊடாக பதிவினை மேற்கொள்ள முடியும்.
தழிழர்களாகிய நாம் இன்று வாக்காளர் எண்ணிக்கை குறைவினால் எமது பாராளுமன்ற அங்கத்தவர் எண்ணிக்ழகயிலும் வீழ்ச்சி போக்கை கண்டுள்ளோம். இதனால் எதிர்காலத்தில் மேலும: பல விளைவுகளையும் எதிர்நோக்க வேண்டிய நிலையும் உருவாகலாம். இந்த நிலையை போக்க நாம் அனைவருமு; வாக்காளராக பதிவினை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.
வாக்குரிமை என்பது மிக முக்கிய ஜனநாயக ஆயுதம் எம்மை ஆழுபவர்களையும் எம்மை ஆழ நினைப்பவர்களையும் தீர்மானிக்கும் சக்தி இவ் வாக்குரிமைக்கே உண்டு. இந்த நிலையினை உணர்ந்தவர்களாக நாம் ஒவ்வோர்வரும் எமது வாக்கை பயன் படுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

2) மின்னியல் மற்றும் இலத்திரனியல் கழிவு சாதனங்களை அகற்றல்

எமது பிரதேசத்தை நாமே ஒன்றினைந்து தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு வரும் வாரம் முதலாக இவ் மின்னியல் மற்றும் இலத்திரனியல் கழிவு சாதனங்களை எமது பிரதேசத்திலிருந்து அகற்றும் பணியினை மேற்கொள்ள உள்ளோம். இவ் விடயம் தொடர்பாக எமது தலைமைக் காரியாலயத்தில் மக்கள் நேரடியாகவே வந்து ஒப்படைக்க முடியும் அவ்வாறு ஒப்படைப்பதில் சிரமம் உள்ளவர்கள் எமது தலைமைக்காரியாலய தொலைபேசி இலக்கமாகிய 0212250144 எனும் இலக்கத்தோடு தொடர்பு கொண்டு ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கௌ;ள முடியும்.

3) இன்று சர்வதேச புகைத்தல் ஓழிப்பு தினம் ஆகும்.

untitled2இத்தினத்தில் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு நாம் அனைவரும் அழிந்து வரும் அழிக்கப்பட இருக்கும் பலரையும் மீட்க வேண்டும்.உடல் நலதத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்க்ககூடிய புகைத்தலை விலக்க வேண்டியது சமூகத்திலுள்ள பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை ஆகும்.இன்று அதிகரித்து வரும் இறப்புகளுக்கான காரணங்களில் ஒன்றாக இப் புகைப்பழக்கம் காணப்படுகினறது. உலக சுகதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி ஒவ்வோர் ஆண்டும் 60 இலட்சம் பேர் உலகளாவிய ரீதியில் இறப்பதாகவும் 25 இலட்சம் பேர் புற்று நோய்க்கு ஆழாவதாகவும் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையினை தடுப்பதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் இவ்வாறான பொருட்கள் மீது தடையை ஏற்படுத்தும் அதே வேளை இன்றைய இளம் தலை முறைக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் போதுமான விழிப்புனர்வுகளை ஏற்படுத்துவதோடு பாதிக்கப்ப்டவர்களின் அவஸ்தையினையும் காண்பிப்பது மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கும் என நம்புகின்றேன்
திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்
தவிசாளர்
வலி மேற்கு பிரதேச சபை

வலிகாமம் தெற்கு பிரதேச சபை செயலாளர் கௌரவிப்பு

SAM_2058SAM_2060SAM_2104வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் 04.07.2009 தொடக்கம் 30.05.2014 வரை செயலாளாராக கடமையாற்றி நிர்வாகத்தை திறம்பட நடாத்தி இன்று நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியெய்தி நிர்வாக சேவையை சிறப்புற நடாத்தப் பயணிக்கும் எமதருமைச் செயலாளர் திருமதி சுலோச்சனா முருகநேசன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி. பிரகாஷ; தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் உளராட்சி மன்றங்களின் செயலாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்

சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு

29.05.2014 வியாழன் அன்று பிப 1.30 மணியளவில் சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா நிலைய உப தலைவ அ.சிவானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலிகாமம் வலய முன்பள்ளி உதவிப்பணிப்பாளர் திருமதி ரூபா உதயரட்ணம்,சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை அதிபர் திருமதி மலர்விழி குணபாலன்,சுழிபுரம் மேற்கு கிராம உத்தியோகஸ்தர் திரு சி.ஜீவராஜா,சுழிபுரம் மத்தி கிராம உத்தியோகஸ்தர்திரு.ம.சிறி முருகவேள், யாழ்மாவட்ட சர்வோதய இணைப்பாளர் திரு.எஸ்.யுகேந்திரன் மற்றும் வேள்ட் விசன் முகாமையாளர் திரு.இருதயம் மைக்கல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்,

கௌரவ விருந்தினர்களாக வலிகாமம் வலய சர்வோதய அமைப்பாளர் செல்வி க.கோணேஸ்வரி, சமூகசேவகியும் சமாதான நீதவானுமான திருமதி சி.புனிதவதி,சுழிபுரம் அலைமகள் கூட்டுறவுச்சங்க தலைவர் திரு.க.குலசிங்கம்,வலிமேற்கு முன்பள்ளிசஆசிரியர் சங்க தலைவர் திருமதி கி.பரநிருபசிங்கம்,ஆசுகவி திரு.சி.சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து சிறப்பித்துக்கொண்டனர்
இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் உரையாற்றுகையில் நடைபெற்று முடிந்த கொடிய யுத்தத்தால் நாம் பலவற்றையும் இழந்துள்ளோம்.இந்த இழப்பில் இருந்து மீளவேண்டுமானால் காணப்படுகின்ற ஒரே வழி கல்வியில் மேல் நிலை பெறுவது மட்டுமே இந்த நிலையினை உருவாக்க முயற்சிக்கவெண்டும். கல்வியினால் சாதிக்கப்படுவது நிலையான ஒன்றாக அமையும். இன்று எமது பிரதேசங்களிலே பல கலாச்சார பிறள்வுகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் எமது கல்வியிலும் தாக்கத்தினை ஏற்பமுத்தக் கூடிய ஒன்றாகும்.
ஒரு காலத்தில் யாழ்ப்பணத்தவர்களே கல்வியில் இந்த நட்டில் முன்னின்றவர்கள். உயர் பதவிகளில் பெரும்பாலும் தமிழர்களே முக்கிய பங்கு வகித்தவர்கள் ஆனால் இன்று நாம் கல்வியில் பின் தங்கிய நிலையினை அடைந்தத தன்மை உணரப்பட்டு வருகின்றது. குறிப்பாக தய்மொழியாக தழிழை கொண்டிராத பலர் தமிழர் செறிவாக வாழூம் பகுதிகளில் பணியாற்ற வருகின்றமை நாம் கல்வியில் பின்தங்கிவிட்ட நிலையினை எடுத்துக்காட்டும் ஒரு செயற்பாடு. இந்த நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். நாம் தமிழர்கள் எமக்கு எப்படியும் வாழலாம் என்ற நிலை கிடையாது இப்படித்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் நாம் இந்த நிலையினை கருத்திற் கொண்டு எமது பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்துவது இன்றைய சம காலத்தில் உள்ள அனைவரதும் கடமையாகும் இதற்கும் மேலாக முன்பள்ளிக் கல்வி என்பதும் மிக முக்கிய இடத்தினை வகிக்கும் ஒன்றாகும். இக்கல்வி முறை சரியானதாக அமையும் போது மட்டுமே இவர்களது எதிர்கால கல்வி சிறப்பானதபாகவும் உயர்ந்ததாகவும் உருவாகும் இக் கல்வியில் சகலரும் மிக முக்கிய இடத்தினை வகிக்க வேண்டும். இந்த பாலக வயதில் சிறுவர்ளுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும் போது மட்டுமே எதிர்காலத்திலும் கல்வியில் ஆர்வம் உருவாகும். இவ் வாறே மாணவாகளுக்கு விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் ஏற்படுத்தப்படவேண்டம் அதன் போது பெறப்படும் வெற்றி தோல்விகள் மாணவர்களை உளவியல் ரீதியாக உறுதியாக்குவதோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கினையும் உருவாக்கும். எனகுறிப்பிட்டர்ர்.