சங்கானை கோட்ட முன்பள்ளி விளையாட்டு விழா

untitled4untitled5untitled 1untitled 2சங்கானை கோட்ட முன்பள்ளி விளையாட்டு விழாகடந்த 05.06.2014 அன்று சித்தன்கேணி வட்டு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் உரையாற்றும் போது
இன்று இந்த கோட்ட மட்ட முன்பள்ளி நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய சிறார்களே நாளைய நாட்டின் தலைவர்கள் இவர்களை செம்மையான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த சமூகத்தில் உள்ள அனைவரையும் சார்ந்ததாகும் இவ் சிறார்கள் இன்று எதிர்நோக்கும் சவால்களும் பிரச்சனைகளும் ஏராளமானவை இவற்றிலிருந்து சிறார்களை மீட்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. குறிப்பாக இன்றைய சிறார்கள் பலவேறுவகையான துஸ்பிரயோகம் மற்றும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகின்றனர். சிறுவர் தொழிலாளரகவும் உள்ளனர்.
குறிப்பாக புள்ளிவிபரத்தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் 9 இலட்சம் பேர் சிறுவர்தொழிலாளர் என கூறப்படுகின்றது. இவற்றிலும் கிராமப்புறங்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாறான நிலைக்கு அடிப்பழடயாக அமைவது கிராமிய வறுமையும் சமூகம் சார் அக்கறை அற்ற நிலையும் ஆகும். இந்த நிலை மாறவேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைப்பது மிக அவசியமான ஒன்றாகும். இவ்வாறான நிலை தொடருமானால் சிறார்கள் உடல் உள பாதிப்புகளுக்கு உட்பட்டவர்களாக மாறும் நிலை உருவாகும். இதே வேளை இச் சிறார்கள் மகிழ்ச்சியாக கற்பதற்குரிய சூழல் உருவாக்கப்படுவது மற்றுமொரு முக்கிய வியடயம் ஆகும்.
 இவ் விடயம் தொடர்பில் மிக முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும். போதுமான இடவசதி மறறும் சுற்றுப்புற சூழல் வசதி முக்கியமான ஒன்றாகும். இந்த வகையில் எமது பிரதேசத்தில் சிறுவர்பூங்கா ஒன்றின் அவசியம் மிக முக்கியமானது ஒன்றாகும். இதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த விடயம் தொடாபில் சமூக ஆர்வலர்கள் உதவ முன் வரவேண்டும். சிறுவர்கள் மன அழுத்தத்திலிருந்து மகிழ்ச்சியாக வாழும் போது ஆரோக்கியம் மிக்க எதிர்கால சந்ததியினர் தோற்றம் பெற வாய்ப்புக்கள் உருவாகும். சிறுவர்கள் தொடர்பில் பெற்றோரது அரவனைப்பும் மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. இவ் விடயம் தொடாபில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமான ஒன்றாகும். இதே வேளை முன்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அவர்களது ஏனைய விடயங்கள் தொடர்பில் எமது கௌரவ வட மாகாண கல்வி அமைச்சர் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றார். வெகு விரைவில் உங்கள் பிரச்சழனகளுக்கான தீர்வு எட்டப்பம் என்றே கருதுகின்றேன் என குறிப்பிட்டார்