தொல்புரம் பகுதியில் புதிதாக மருத்துவ நிலையம் திறந்து வைபவபு
05.06.2014 அன்று தொல்புரம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ நிலையம் திறந்து வைக்கும் வைபவம் இடம் பெற்றது. இவ் வைபவத்தில் வட மாகாண ஆளுனர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினராகவும் வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவாகள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் தவிசாளர் உரையாற்றும் போது இவ்வாறான அழப்பரிய பணியினை மேற்கொண்ட புலம் பெயர் உறவான பொறியியலாளர் பட்சம் அவர்களுக்கு இப் பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஆரமப வைத்திய சாலையின் தேவையானது இந்த இடத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்தப்பகுதி எமது பிரதேசத்தின் மக்கள் தொகை நிறைந்த பகுதி இது மட்டுமல்லாது அன்மையில் மீளக்குடியமர்ந்த மக்களை கொண்டுள்ளதாகவும் இப் பகுதி அமைந்துள்ளது. இந்த வகையில் நோக்கும் போது இவ் ஆரம்பசுகாதார நிலையம் மிக முக்கியமான ஒன்றாகவே கருத முடியும். இன்றைய சூழலில் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களது அழப்பரிய பணிகள் எமது சமூதாயத்தின் பல தேவைகளையும் நிறைவேற்றி வருவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இந்த வகையில் அவர்களையும் இந்த இடத்திலே அவர்களது பணி மெனமேலும் சிறக்க வாழ்த்துகின்றேன். இந்த வேளையிலே எமது பிரதேசத்திலே மேலும் பல பணிகள் காணப்படுகின்றது. குறிப்பாக இந்த பிரதேசத்தில் ஆரம்ப வைத்தியசாலையை அமைத்து உதவியவர்களின் உறவினர்களால் தொல்புரம் பகுதியிலே எமது சபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட காணி உள்ளது. இக் காணியிலெ ஒரு சிறுவர் பூங்கா ஒன்றை அமைப்பதில் ஆர்வமாக உள்ளேன் இவ் விடயம் தொடர்பில் புலம் பெயர் உறவுகளின் உதவியினை வேண்டி நிற்கின்றேன். இதே வேளை சுகாதாரம் மற்றும் மருத்துவம் தொடர்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்ளேறன் எமது பிரதேசத்திலுள்ள வைத்திய சாலைகளில் சங்கானை வைத்திய சாலையை ஆதார வைத்திய சாலை ஆக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் இவ்வாறே வட்டுக் கோட்டையிலுள்ள பிரதேச வைத்திய சாலையினையும் தரம் உயர்த்த வேண்டும் இதே வேளை மூளாய் பகுதியிலுள்ள கூட்டுறவுவைத்திய சாலை பல வழங்களுடனும் இயங்கியதை பலரும் அறிவர் இந்த வகையில் இவ் வைத்திய சாலையினையும் மீன்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வது மிக முக்கியமான கடமை ஆகும் இது மட்டும் அல்லாமல் பிரதேச சுகாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு எமது சபைக்குரிய வளங்களையும் மேம்படுத்த வேண்டிய நிலை உள்ளது என்றார்.