வலி மேற்கு பிரதேச சபையில் சர்வதேச சுற்றாடல் தினம் –

eveners22014 11.06.2014 அன்று மாலை 2.30 மணியளவில் வலி மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி .ஐங்கரன் தலைமையில் வேள்விசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் திருமதி ச.விஜித்தா அவர்களும் சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேச வேள்விசன் முகாமையாளர் ஐ.மைக்கேல் அவாகளும் கௌரவ விருந்தினர்களாக சங்கானை செலான் வங்கி முகாமையாளர் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் சுற்றுப்புற சூழல் தினத்தினை ஒட்டி பாடசாலை மாணவாகளிடையே பல போட்டிகள் விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இவ் நிகழ்வில் நடைபெற்ற போடடிகளில் வெற்றி பெற்ற 200க்கும் அதிகமான மாணவர்கள் பரிசில்களை பெற்றுக் கொணட்னர். நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையினை சபை உறுப்பினர் ஆகிய ந.பி.இராஜ்குமார் நிகழ்த்தினார். தொடர்ந்து ஆசியுரையினை சர்வதேச இந்துகுருமார் ஒன்றிய தலைவரும் சித்தன்கேணி சிவன் ஆலய பிரதம குருவுமாகிய சபா.வாசுதேவக் குருக்கள் நிகழ்த்தினார் தொடர்ந்து தலைமை உரையினை நிகழ்த்தினார் eveners3eveners5eveners6eveners7eveners9eveners8eveners10eveners4வலி மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி .ஐங்கரன் அவர்களது உரையின் போது – இவ் ஆண்டுக்குரிய சர்வதேச சுற்றுப்புற சூழல் தினத்தின் மகுட வாக்கியமாகிய உங்கள் குரல்களை உயர்த்துங்கள் கடல் மட்டத்தினை அல்ல என்ற தொனிப்பொருளுக்கு அமைய இந்த நிகழ்வினை இன்று இந்த இடத்திலே ஏற்பாடு செய்து நிகழ்த்தி வருகின்றோம். இந்த சர்வதேச சுற்றுப்புற சூழல் தினத்தின் செயற்பாடுகளை யூன் 5 முதல் 11 வரை வாரமாக மேற்கொள்வதற்கான சுற்றறிக்கை வடமாகாண கௌரவ அமைச்சர் ஐங்கரநேசன் அவாகளால் உள்ளுராட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவ் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்படி நிகழ்வினை நடாத்த வேண்டிய நிலைகாணப்பட்டது.  இதற்கும் மேலாக எமது உள்ளூராட்சி வேலைத்திட்ங்களில் சுற்றுப் புற சூழல் சார்ந்த வேலைத்திட்ங்கள் பல உண்டு அந்த வகையிலும் மேற்படி நிகழ்வினை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். சூழல் சார்ந்த விடயங்களில் நாம் ஒவ்வோருவரும் மிகுந்த அக்கறையுடன் செயல்படவேண்டிய தேவை இன்று மிக முக்கியமாக அமைந்துள்ளது. ஆரம்பகால மனிதன் சூழலுக்கு பயந்தவனாக வாழ்ந்து வந்தான். இயற்கையை பல வழிகழிலும் வணங்கி வந்தான். இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவனது வாழ்க்கை அமைந்தது. இதன் பின்னர் ஏற்பட்ட சனத்தொகைப் பெருக்கம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக மனிதன் படிப்படியாக சூழலை பல வழிகழிலும் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டான். இதன் அடுத்த கட்டமாக சூழலை முழுமையாக கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தான். அதாவது சூழலை ஆக்கிரமிக்கும் நிலைக்கு மாறினான் இதன் வெளிப்பாடே தற்போது எம்மை சூழல் பல வழிகளிலும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இன்றைய வரட்சி நிலை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இன்றைய மனித நாகரீகத்தின் வழர்ச்சி மற்றும் பல துறைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் சூழலை மேலும் பல விடயங்கள் ரீதியாகவும் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இது மனித சமுதாயத்திழன மேலும் நலிவடையச் செய்துள்ளது. இதே வேளை இன்றைய அபிவிருத்தி விடயங்கள் சூலலுடன் இனைந்த போக்கிலிருந்து விலகியுள்ள நிலையினை கொண்டுள்ளமை குறிப்பிட்டுக்கொள்ள முடியும். இந்த நிலையும் மிகப்பாரிய தாக்கத்தினை எதிர்காலங்களில் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே குறிப்பிட முடியும். குறிப்பாக இன்று வீதி அபிவிருத்தி என்ற போக்கில் பல அரிய நீண்ட கால மரங்கள் பலவும் அழிக்கப்பட்டு விட்டமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது இவ் இயற்கை தாவரங்களை பாதுகாக்க கூடிய வகையில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. அல்லது அவற்றை வேரோடு பிடுங்கி வேறுபிரதேசத்தில் நடும் செயல் முறை இடம் பெறுகின்றது. இவ்வாறான செயற்பாடு எமது பிரதேசத்தில் பின்பற்றுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வது மிக முக்கிய கடமையாக உள்ளது. இதே வேளை வெறுமனே அபிவிருத்தி என்ற போக்கில் இயற்கை வழங்கள் சுரண்டப்படுவது தடுக்கப்படவேண்டும். இவ் விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் அதிக கவனம் செலுத்துவது காலத்தின் மிக முக்கிய கடமை ஆகும்.  இதே வேளை நடைபெற்று முடிந்த யுத்தத்தின் வாயிலாக பல வழங்களும் அழிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காடுகள் பலவும் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இயற்கை வழங்களை மீண்டும் புத்துயிர் பெறச்செய்வது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். இந்த நிலையில் மாற்றத்தினை ஏற்படுததவேண்யது மிக முக்கியமான வியம் ஆகும். இதே வேளை இவ் சுற்றாடல் தினத்தில் நாம் அனைவரும் மிகப்புனித மாக இச் சூழல் மீது சத்தியம் செய்வோம், இந்த இயற்கையான காற்று,நிலம்,சூரிய ஒளி,சுத்தமான நீர் என்றும் எம்மை சூழ்ந்து இருக்கட்டும். மரங்களையும் செடிகொடிகளையும் எம் நன்பர்களாகவும் உறவுகளாகவும் மதிப்போம். இன்று முதல் பயன் தருமரங்களின் பயன்களை நாம் மற்றவாகளுக்கு எடுத்துரைப்போம் என கூறினார், இவ் நிகழ்வில் வலிமேற்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் காட்சிப்படுத்தும் பதாதைகளை தவிசாளர் அதிபர்களுக்கு வழங்கினார் இதே வேளை மேற்படி நிகழ்வில் சிறநிததோர் பட்டி மண்டப நிகழ்வும் இடம் பெற்றது.  வலிமேற்கு பிரதேச சபையால் சர்வதேச சுற்றுப்புற சூழல் தினத்தினை முன்னிட்டு விழிப்புனர்வு நடவடிக்கைகள் பல இடம் பெற்றது. இவ் நிகழ்வின் ஒரு அங்கமாக வலி மேற்கிலுள்ள சகல பாடசாலைகளிலும் சங்கானை செலான் வங்கியின் அனுசரனையுடன் விழிப்புனர்வு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் மாணவாகளுக்கு விழிப்புனர்வு பதாதைகள் வழங்கப்பட்டது. மூளாய் சைவப்பிரகாச வித்தியா சாலை, மூளாய், சுழிபுரம். தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியா சாலை, தொல்புரம், சுழிபுரம். பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம், பண்ணாகம், சுழிபுரம். வட்டு மத்திய கல்லூரி, சங்கரத்தை, வட்டுக்கோட்டை. பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியா சாலை, பொன்னாலை, சுழிபுரம். வட்டு இந்துக்கல்லூரி, சித்தன்கேணி, சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியலயம், சங்கானை விக்டோறியாக் கல்லூரி, சுழிபுரம். ஆகிய பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புனர்வு பதாதைகளை சூட்டியுள்ளார். இவ் நிகழ்வின் அங்கமாக வலிமேற்கு பிரதேச சபைத் தலைமைக்காரியாலயத்தில் பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சபையின் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு சூட்டி ஆரம்பித்து வைப்பதனையும் இதனைத் தொடர்ந்து சபையின் செயலாளர் ஏனைய உத்தியோகஸ்தர்களுக்கு வழங்குவதையும் படத்தில் காணலாம்.

Test Test1 Test3 Test4 Test5 Test6 Test7 Test2