வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸாரால் கைது-

vaddarakka_thero_polic_001பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நிறைவடைந்து வெளியேறிய நிலையில், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக  பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முஸ்லிம்கள்  மீதான தாக்குதலுக்கு துருக்கி கண்டனம்-

singala_ravaya_5முஸ்லிம்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு துருக்கி கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கை வாழ் அனைத்து இன சமூகங்களும் சமாதான சூழ்நிலையில் வாழ்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என வலியுறுத்தியுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை வாழ் மக்களின் சமாதானத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. சிறுபான்மை இன மற்றும் மத சமூகங்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக துருக்கிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூர்வர் நியமனம்

2(3178)ஏற்கனவே இந்தப் பதவியை வகித்த பிரசாத் கரியவாசம், அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுதர்சன் செனவிரத்னவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரதேனியா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவராக பதவி வகித்து வந்த செனவிரத்ன, இலங்கையின் பாரம்பரியச் சின்னங்களைக் காக்கும் பணியை செய்து வந்தார். அத்துறையில் அவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, அமெரிக்க தொல்லியல் கழகத்தின் 2013ம் ஆண்டுக்கான ‘பாரம்பரிய மேலாண்மை” விருதைப் பெற்றுள்ளார்.

இந்திய மீனவர் 46பேர் விடுதலை

ilankai india meenavar pechchuஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 46 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட 24 மீனவர்கள், அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 மீனவர்கள் என 46 பேரையும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மீனவர்களும், அவர்களுடைய 11 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டன. அவர்களை விடுதலை செய்யும்படி அதிபர் ராஜபக்சே உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஊர்க்காவல் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டன. 46 மீனவர்களைத் தவிர்த்து, மேலும் 18 மீனவர்கள் இலங்கை சிறையிலுள்ளனர். 36 விசைப்படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளது. இதற்கிடையே, தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறியதாக எழுந்த புகாரை இலங்கை கடற்படை மறுத்திருக்கிறது. சர்வதேச விதிகளின்படியே, தமிழக மீனவர்களைக் கைது செய்து, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக, கடற்படை செய்தித்தொடர்பாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

தீவிரவாதிகளை ஒடுக்கஅமெரிக்காவிடம் உதவிகோரல் – ஈராக் அரசு

US-Assessmentஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கிளர்ச்சி வலுத்து வருகிறது. தீவிரவாதிகளை கண்டு அரசு படை வீரர்கள் ஓட்டம் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் தீவிரவாதிகள் வசம் வந்து விட்டன. 3 வாரங்களாக அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வருகிற சண்டையில் குறைந்தது ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். உள்நாட்டுப்போரில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்காவின் உதவியை ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி நாடினார். இதில் ஈராக் ராணுவத்துக்கு உதவுவதற்காக அமெரிக்க வீரர்கள் 300 பேரை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். அதன்படி முதற்கட்டமாக அவர்களில் பாதிப்பேர் தலைநகர் பாக்தாத் வந்து அடைந்தனர். அவர்கள் தங்கள் பணியைத் தொடங்கினர். மீதிப்பேர் இன்னும் ஓரிரு தினங்களில் பாக்தாத் வந்து சேருவார்கள் என தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய விமானத்தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். விமானத்தளத்தை தீவிரவாதிகள் சுற்றி வளைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே யாத்ரிப் நகரில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்  கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே ஈராக்கில் பிரதமர் நூரி அல் மாலிக்கியிடம் பேச்சு நடத்திய பின்னர் குர்திஷ்தான் சென்ற அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, அதன் தலைவர்களை சந்தித்து பேசினார். குர்திஷ்தான் அதிபர் மசூது பர்ஜானியிடம் அவர், ஈராக் ஒருங்கிணைந்த நாடாக திகழ வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அனைவரும் ஒன்றுப்பட்டு நின்று ஈராக்கைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.