ஐ.நா. குழு அனுமதி கோரவில்லை-இலங்கை-

இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட குழு இலங்கைக்கு வருவதற்கான கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்தபோதும், இந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை எனவும், அதன் காரணமாக விசாரணைக்குழு இலங்கை வருவதற்காக நுழைவிசைவு கோரினால் அது நிராகரிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவென மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் 12பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அடுத்தமாத நடுப்பகுதியில் விசாரணைகளை ஆரம்பித்து செப்டம்பரில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களது படகில் 30 சடலங்கள் மீட்பு-

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்றில் பயணித்த  பயணிகளுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிசிலி மற்றும் வட ஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே பயணத்தை மேற்கொண்ட குறித்த படகில் இருந்து 600 புகலிடக் கோரிக்கையாளர்களை இத்தாலியக் கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளதுடன் இதில் இருவர் கர்ப்பிணிப் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் இத்தாலியின் தென்பிராந்தியத்தை 60 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர் சென்றடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

மேலும் செய்திகளை வாசிக்க——-

சார்க் வலய நாடுகளுக்காக செய்மதி ஒன்றை உருவாக்குமாறு மோடி வேண்டுகோள்-

சார்க் நாடுகளுக்காக செய்மதி ஒன்றை விரைவில் உருவாக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விஞ்ஞானிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். Pளுடுஏ ஊ-23 என்ற ஏவுகணையை  விண்ணுக்கு ஏவுவதற்காக ஆந்திராவின்  ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்ற வைபவத்தில் இன்று முற்பகல் பங்கேற்று உரையாற்றியபோதே பிரதமர் மோடி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஐந்து செய்மதிகள் அடங்கிய ஏவுகணை இன்று முற்பகல் 9.52 அளவில் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக இந்தியத் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸ், ஜேர்மன், கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த செய்மதிகளே விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன. ஏவுகணை விண்ணுக்கு ஏவப்பட்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட இந்திய பிரதமர் மோடி, தெற்காசிய வலய ஒத்துழைப்பு சங்கத்திற்காக ஏவுகணை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டுமென குறிப்பிட்டார். இந்நடவடிக்கை சார்க் வலய நாடுகளுக்கு இந்தியா வழங்கும் மிகச் சிறந்த பரிசு எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா குழுவுக்கு நேரடியான பங்களிப்பு சாத்தியமில்லை : பிரதிபா 

இலங்கைமீது நடத்தப்படவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்வது சாத்தியமில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ள நிபுணர்குழுவை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அண்மையில் அறிவித்திருந்தது. இந்த விசாரணைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பங்களிப்பு வழங்குமா என மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவாவிடம் சர்வதேச ஊடகமொன்று கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எங்களால் நேரடி பங்களிப்பைச் செய்யக்கூடிய நிலைமை இல்லை. நாங்கள் தேசிய மட்டத்தில் தான் பணியாற்ற முடியும். இதேவேளை ஐ.நா விசாரணையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளது. அந்த விசாரணைகளுக்கு தகவல் அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகளும் வெளியாகியிருந்தன. இதனிடையே, தென்னிலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த வன்முறைகள் தொடர்பில் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வவுனியா நகர சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு-

வட மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் பணியாற்ற வேண்டிய அட்டவணைப்படுத்தப்படாத, ஊழியர்களின் ஆளணியை ஒழுங்குபடுத்தி, உரிய இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கும்படி வலியுறுத்தி வவுனியா நகரசபை ஊழியர்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இப் போராட்டத்தில் சுமார் 120 ஊழியர்கள் வரை பங்குபற்றியுள்ளனர். இந்த போராட்டத்தை வட மாகாணம் முழுவதும் விஸ்தரிக்க சங்கம் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார தொழிலாளர்களில் 7 பேருக்கு நிரந்தர நியமனம் வேண்டும், வடக்கு உள்ளுராட்சி மன்றங்களில் ஆளணி அதிகரிக்கப்படவேண்டும், உள்ளக வெற்றிடங்கள் உள்ளக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும், 30 வருடங்களாக பணியாற்றுபவர்களுக்கு 01- 2001ற்கு அமைவாக தரமுயர்த்தல் வழங்கப்படவேண்டும். வேறு திணைக்களங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும், தொழிலார்களுக்கு சாப்பாட்டறை கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான மலசலகூடம் புனரமைப்பு செய்து தரப்படவேண்டும். உமா எனப்படும் சுகாதார தொழிலாளியை தொழிலாளிகளுடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும், வட மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சட்டத்தரணி வீட்டின்மீது குண்டுத் தாக்குதல்-

களுத்துறை மாவட்டம் வாதுவ,, தல்பிட்டிய குணத்திலக்க மாவத்தையில் அமைந்துள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டின்மீது இன்று அதிகாலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் எந்தவித உயிராபத்தும் ஏற்படவில்லை என்றும் எனினும் வீட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

கலகொட ஞானசார தேரருக்கு அமெரிக்கா தடை

பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரருக்கு அமெரிக்கா செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த வீசாவை தற்காலிகமாக தடை செய்வதற்கு அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தீர்மானத்துள்ளது. இந்த தகவலை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஞானசார தேரருக்கு அறிவித்துள்ளதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களது படகில் 30 சடலங்கள் மீட்பு-

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்றில் பயணித்த  பயணிகளுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிசிலி மற்றும் வட ஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே பயணத்தை மேற்கொண்ட குறித்த படகில் இருந்து 600 புகலிடக் கோரிக்கையாளர்களை இத்தாலியக் கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளதுடன் இதில் இருவர் கர்ப்பிணிப் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் இத்தாலியின் தென்பிராந்தியத்தை 60 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர் சென்றடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.