சுவிஸில் 25ஆவது வீரமக்கள் தினம் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்ப்பு

plote.uma-v.m.tபுளொட்டின் சுவிஸ் கிளை நடாத்தும் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

DSC00679மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி மீனா சித்தார்த்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
06.07.2014 அன்றையதினம் காலை 8.00மணியளவில் தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதுடன்.  பிற்பகல் நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் அமரர் அமிர்தலிங்கம் மரணித்த நாள் ஆடி 13 தொடக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழக செயலதிபர்  அமரர் உமாமகேசுவரன் மரணித்த ஆடி 16 வரை வீரமக்கள் தினமாக வருடாவருடம் அனுஷ;டிக்கப்பட்டு வருகின்றது.
அனைத்து நாடுகளிலுமுள்ள புளொட் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களையும் இவ் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வினில் கலந்து சிறப்பிக்குமாறு புளொட்டின் சுவிஸ் கிளை தோழமையோடும், அன்போடும் அழைக்கின்றது.
தொடர்புகளுக்கு:- 079.6249004, 079.8461170, 079.8224153, 076.5838410, 077.9485214
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை

VM2014 color