Header image alt text

 

போராட்டத்தில் மறைந்தவர்களை நினைவு கூர்வது மனச்சாட்சியும், தார்மீக உணர்வுமுள்ள ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும். – ஈ.பி.ஆர்.எல்.எப „பத்மநாபாஅணி” தலைவர் தோழர் சுகு

untitledதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சர்வதேச ஒன்றியங்களின் சார்பில் கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25 ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.07) மாலை சுவிற்சர்லாந்தின்  சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வை முன்னிட்டு பத்மநாபா ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சிறீதரன் (சுகுத் தோழர்) அனுப்பி வைத்த அறிக்கை வருமாறு… போராட்டத்தில் மறைந்தவர்களை நினைவு கூர்வது மனச்சாட்சியும் இதார்மீக உணர்வுமுள்ள ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும். இன்று போராளிகள் என்ற சொல் எமது சமுதாயத்தில் முகமிழந்து நிற்கிறது. இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் அனைத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும நடைப்பிணங்களாக முகவரியற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் போராடிய பெண்களும் ஆண்களும் சமூக நிலையில் அவலமானதும் பாதுகாப்பற்றதும் இடர்பாடு மிக்கதுமான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். பொதுவாக போராடப் புறப்பட்டவர்கள் எமது சமுதாயத்தில் வறுமைப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளே. எமது போராட்டகாரர்கள் கௌரவப்படுத்தப்படா விட்டாலும் பரவாயில்லை. கண்ணியமாக வாழமுடியவல்லை. இன்று இலங்கையில் மாகாண சபைமுறையொன்று உருவாகியருக்கிறதென்றால் அல்லது இலங்கையில் சமூகங்களிடையே அதிகாரப்பகிர்வு நிகழ வேண்டும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறதென்றால் அதற்கு அனைத்து இயக்கங்கள் போராளிகளதும் பொதுமக்களதும் தியாகமே காரணம். ஆனால் 30 ஆண்டு துனபங்களின் பின்னர் தமிழ் மக்களின் தலைவர்களாக உருவாகியிருப்பவர்கள் ஏகப்பெரும்பான்மையினர் துரதிஸ்டவசமாக போராட்ட பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் அல்ல.. Read more

25வது வீரமக்கள் தினம் ஆடி13-ஆடி16 வரை

 

plote.uma-v.m.t

PhLEPQt4PlEgGzRXH_goObMKu4bEgyLLKG2Ua3rb_HYதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்ட ஆடி 13 தொடக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் உமாமகேசுவரன் கொலைசெய்யப்பட்ட ஆடி16 வரை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கையின் தமிழின விடுதலைப் போராட்டத்தில்  மரணித்த கழகக்கண்மணிகள், அனைத்தியக்கப்போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து வரும் இந்நாள் இவ்வாண்டு 25வது ஆண்டாகும். இவ்வாண்டும் வழமை போல் வவுனியா கோவில்குளம் உமாமகேசுவரன் வீதியில் அமைந்துள்ள கழகத்தின் செயலதிபர் அமரர் உமாமகேசுவரன் நினைவு இல்லத்தில் நினைவு கூரல் வைபவம் நடைபெறவுள்ளது.