தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) கொடியினை கழகத்தின் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
அதனைத்தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் திருவுருவப்படத்துக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களினதும் திருவுருவபடத்துக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களினால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டுஇதொடர்ந்து கழகத்தின் தோழர்களால் மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டது.
இவ் ஆரம்ப நிகழ்வுகளில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களான யோகராஜன்இ குகன்இ ராஜாஇ மாலாஇ மத்திய குழு உறுப்பினரும்இ வெங்கல செட்டிக்குள பிரதேச சபை உறுப்பினருமான ஜெகதீஸ்வரன்(சிவம்)இ வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் இராஜசேகரம்(சேகர்)இ பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதா வின்சன் கெனடிஇ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர்களான சூரிஇ சிவாஇ சங்கர்இ தவம்இ குருஇ நெப்போலியன்இ சுரேஷ்இ மயூரன்இ அனுஇ சிறிஇ காண்டிஇசுகந்தன் ஆகியோருடன் கனடா வாழ் ஆதரவாளர் சத்தியசீலன்இ மற்றும் தேவா ஆகியோருடன் பொது மக்களும் நிகழ்வில் கலந்து அஞ்சலி செலுத்தினர்.