புளொட்டின் கொழும்பு தலைமையகத்திலும் 25வது வீரமக்கள்தின நிகழ்வுகள்
இன்றுகாலை 9.30மணியளவில் புளொட்டின் கொழும்பு தலைமையகத்திலும் 25வது வீரமக்கள்தின நிகழ்வுகள் கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. ,தன்போது கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவபடத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. கொழும்பில் நடைபெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய ஜி.ரி.லிங்கநாதன், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர் எம்.பத்மநாதன், கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.