வவுனியாவில் நடைபெற்ற 25வது வீரமக்கள் தின நான்காம் நாள் நினைவுகள் –
வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25ஆவது வீரமக்கள் தினம் கழகத்தின் தோழர்களால் கோவில்குளத்தில் உமாமகேசுவரன் வீதியில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேசுவரன் அவர்களின் இல்லத்தில் சுடரேற்றி, மலரஞ்சலிகளுடன் இன்றுமாலை (16.07.2014) நடைபெற்றது. இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இலங்கையில் தமிழர் உரிமைப் போராட்டத்தில் மறைந்த கழகத் தோழர்கள், மாற்று அமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து மலரஞ்சலி செலுத்தினர்.
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)