Header image alt text

பிரான்ஸில் புளொட்டின் 25ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-

plote.uma-v.m.tதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) பிரான்ஸ் கிளையினரால் நடாத்தப்பட்ட 25ஆவது வீரமக்கள் தினம் கடந்த 17.07.2014 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11மணிமுதல் பிற்பகல் 3மணிவரையில் தோழர் தயா அவர்களின் தலைமையில்  என்னுமிடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Porte, Ivary 75013 Paris,a France வீரமக்கள் தின ஆரம்ப நிகழ்வாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தீபச் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மரணித்த அனைவரையும் நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது ஜெர்மனியிலிருந்து தோழர் ஜெகநாதன், லண்டனிலிருந்து தோழர் சிவபாலன் ஆகியோரும் தோழர் ஜோன்சன் உள்ளிட்ட பிரான்ஸ் கிளைத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

FGiHdcmqaJk

 

புளொட் தலைவர் தலைமையில் பிரான்ஸில் விசேட கலந்துரையாடல்-

புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் கடந்த 17.07.2014 வியாழக்கிழமை அன்று மாலை 4மணிமுதல் இரவு 8 மணிவரையில் பிரான்ஸின் பொபினி என்ற இடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்;பெற்றுள்ளது. சுழிநளிநைசசந 93300 Ropespierre 93300 Bobigny France என்னுமிடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல அமைப்புக்களையும், நிறுவனங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும், புளொட்டின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விசேட கலந்துரையாடலின்போது, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக புளொட் தலைவர் விரிவாக எடுத்துக் கூறினார். குறிப்பாக அனைத்தையும் இழந்து நிற்கின்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்கள் தமது சொந்தக் கால்களில் நிற்பதற்கு புலம்பெயர் உறவுகள் உதவி வருவது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட புளொட் தலைவர். அம் மக்களுக்கான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமென்று தெரிவித்தார். இதன்போது பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் மிகவும் தெளிவாக பதில்களை வழங்கியதுடன், தற்போதைய அரசியல் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

பிரான்ஸில் வர்த்தகசமூகப் பிரதிநிதிகளுடன் புளொட் தலைவர் சந்திப்பு-

பிரான்ஸின் லாச்சப்பல் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 18.07.2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1மணிமுதல் மாலை 4மணிவரை பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்றது. டுயஉhயிநடடந 75018 என்னுமிடத்தில் Lachapelle 75018 Paris France இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வடகிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக் கூறினார். இதன்போது வர்த்தக சமூகப் பிரதிநிதிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் புளொட் தலைவர் இதன்போது உரிய பதில்களை வழங்கினார்.

மூன்று நாடுகளிலிருந்து இலங்கைக்கு எதிராக விசாரணை-

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையால் நடத்தப்படும் விசாரணைகள் மூன்று நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது. நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரசாங்கம் மற்றும் புலிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை நடத்தப்படவுள்ளது. இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதி கோரப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதியளிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடாது என இலங்கையில் எவ்வித சட்டங்களும் கிடையாது என்ற போதிலும், சாட்சிமளிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சாட்சியாளர்களின் பெயர் விபரங்கள் இருபது ஆண்டுகளுக்கு இரகசியமாக பேணப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.