Header image alt text

இறையாண்மையோடு வாழும் உரிமையைத்தான் கோருகிறோம்-இரா.சம்பந்தன்-

sampanthanநாட்டின் இறையாண்மையின் கீழ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் வாழ்வதற்கான உரிமையைத்தான் நாம் கோருகின்றோம். நாட்டைப் பிரித்துத் தருமாறு நாம் கேட்கவில்லை. இந்நாட்டின் குடிமக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையுடன் தமிழ் மக்களும் வாழ்வதற்கான உரிமையைத்தான் கேட்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் 34 ஆவது வருட சிறப்பு மாநாடு அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் நாம் பிரிவினையைக் கோரவில்லை. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது நிலங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையே கோருகின்றோம். சிங்கள மக்களுடன் இணைந்து பெறவேண்டியவற்றை நாம் பெறவேண்டும். அதற்காக விட்டுக்கொடுக்க முடியாதவற்றை நாம் விட்டுக்கொடுக்கவே முடியாது. வன்முறைப் போக்கை நாம் விரும்பவில்லை. எமது மக்கள் வாழ்ந்த இடத்தில் எமது இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கங்கள் பகிரப்பட்டு வாழ அனுமதிக்கப்பட வேண்டும். இதனையே நாம் உறுதியாக கோருகின்றோம். அதிகாரப் பகிர்வில் நாம் இராணுவ அதிகாரத்தையோ அல்லது விமானப்படை அதிகாரத்தையோ, வெளிவிவகார அதிகாரத்தையோ கேட்கவில்லை. எமது நிலம், நீர், சட்டம், விவசாயம், கல்வி, கடற்றொழில், சிறுகைத்­தொழில், பொருளாதாரம் மற்றும் எமது பாதுகாப்பு போன்ற அதிகாரங்களே எமக்குக் கிடைக்க வேண்டும் Read more

கூட்டமைப்பு பதிவு தொடர்பில் இறுதி முடிவு எதுவும் இல்லை-இரா.சம்பந்தன்-

1719856666tna3தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதியப்படுமா என்பதை அதன் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்துவாரென யாழில் நேற்று இடம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் சிறப்பு மாநாட்டின்போது எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அவர் உரையாற்றுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென திருமலை நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடைபெற்று வருகிறது. எனவே இப்பதிவு விடயத்தை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக தமிழ் தேசிய சபையொன்றை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுபற்றி இரா.சம்பந்தன் அவர்கள் உரையாற்றுகையில், கூட்டமைப்பு பல்வேறு கட்சிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இங்கு கருத்து வேறுபாடு இல்லையென நான் கூறமாட்டேன். இருப்பினும் எமக்குள் அதனைப் பேசித் தீர்த்து ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த ஒற்றுமையின் வெளிப்பாட்டால்தான் சர்வதேச சமூகம் அரசாங்கத்தை எம்முடன் பேசுமாறு கூறியுள்ளது. இவை ஒற்றுமையின் அடைப்படையிலும் தமிழ் மக்கள் விசுவாசம் வைக்கின்ற அமைப்பு இதுதான் என ஜனநாயக ரீதியில் அடையாளம் காட்டியபடியாலும் கிடைத்த வெற்றி. இதனைப் பலப்படுத்த வேண்டியது எமது கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

யாழ். அச்சுவேலியில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்-

yaal achchuveliyil  (1)எமது காணிகளை அளவீடு செய்ய நாம் அனுமதிக்க மாட்டோம் என கூறி நிலஅளவை திணைக்களத்தின் வாகனத்தினை சுற்றிநின்று காணி உரிமையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அச்சுவேலியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்தது. அச்சுவேலி இராசவீதியில் அமைந்துள்ள பொதுமக்களுக்கு சொந்தமான 53 பரப்பு காணியினையே அளவீடு செய்யும் பணிகள் இன்றுகாலை பொலிஸ் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட இருந்தது. கடந்த ஜூன் 2ம்திகதி இக் காணிகளை அளவீடுசெய்ய முற்பட்டபோதும் காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினால் அப் பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் இன்று மீண்டும் பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவையாளர்கள் அழைத்துவரப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தது. Read more