Header image alt text

ஒன்றுபட்டு பொது வேலைத்திட்டத்தின்கீழ் முன்னேறிச் செல்வதே இறந்தவர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும்-ஜி.ரி.லிங்கநாதன்-

20140716_094140நாம் ஒன்றுபட்டு ஒரு பொது வேலைத்திட்டத்தின்கீழ் உடனடியாக அடுத்தகட்ட நகர்வை நோக்கி முன்னேறிச் செல்வதுவே நாம் இறந்தவர்களுக்கு செய்யும் ஒரு மிகப்பெரிய நன்றிக்கடனாகவும், அஞ்சலியாகவும் இருக்கும் என புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியாவின் முன்னைநாள் நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 16.07.2014 புதன்கிழமை அன்று புளொட்டின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ஆம் திகதியிலிருந்து எமது மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுதினமான 16ஆம் தி;கதிவரையில் வீரமக்கள் தினமாக நாங்கள் அனுஷ்டித்து வருகின்றோம். இற்றைக்கு 25ஆண்டுகளுக்கு முன்னர் எம்மைவிட்டுப் பிரிந்த எங்களுடைய செயலதிபர் மற்றும் அமரர் அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய இயக்கத் தலைவர்களான பத்மநாபா, சிறீ சபாரட்ணம், தங்கத்துரை, அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், அனைத்தியக்க போராளிகள் மற்றும் பொதுமக்களின் இழப்புக்களுக்கு மத்தியிலும் எங்களுடைய மக்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வையோ அல்லது ஒரு அமைதியான வாழ்வினையோ பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் இன்றைக்கு நாங்கள் இருக்கின்றோம் Read more

ஆட்சியாளர்களே இனவாதத்தை தூண்டாதீர்கள்!-

aatchiyaalarkale inavaathaththai (1)ஆட்சியாளர்களே இனவாதத்தை தூண்டாதீர்கள் என தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கத்தினால் வவுனியா நகர்ப் பகுதியில் இன்று கையெழுத்து இடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து இனவாதங்களையும் தோற்கடிப்போம், இனவாத, மதவாத வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தை அழுல்படுத்து, அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சோசலிசம் எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதேவேளை நகர்ப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த பதாதையொன்றில் பொதுமக்கள் கையெழுத்து இட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டடிருந்தனர்.

யாழில் பாலியல் வன்முறைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்-

yaalilyaalil2)yaalil 3பெண்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டித்து யாழ் நீதிமன்றத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்றினை பெண்கள் செயற்பாட்டு இயக்கத்தினர் இன்றுகாலை 10 மணியளவில் மேற்கொண்டனர். யாழ். மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் கடற்படையால் சிறுமிகள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். குறித்த வழக்கு இன்று யாழ் சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனையடுத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ‘பாலியல் பலாத்கார கொலைகளை எப்பொழுது இல்லாமல் ஆக்குவோம்’, ‘சட்ட அமுலாக்கம் எங்கே அதை உறுதிப்படுத்துபவர்கள் எங்கே?’ பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கும்படி நீதி கோருகிறோம்., ‘நாம் ஒவ்வொருவரும் சமூக பொறுப்புடையவர்களாக செயற்படுகின்றோமா? உள்ளிட்ட பல்வேறு வாசங்களை தாங்கியவாறு அவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஐநா மனித வள அபிவிருத்தி தரப்படுத்தலில் இலங்கைக்கு 75ஆம் இடம்-

மனித வள அபிவிருத்தி சுட்டெண் வரிசையில் இலங்கைக்கு 73வது இடம் கிடைத்துள்ளது. எனினும் இந்தியாவுக்கு 135ஆவது இடமே கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் நடுத்தர அபிவிருத்தி நாடுகளின் பட்டியல்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த முன்னிடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை 73ஆம் இடத்தில் இருந்தது. பாகிஸ்தானுக்கு 146ஆவது இடமும் பூட்டானுக்கு 136ஆவது இடமும், பங்களாதேஸுக்கு 142ஆவது இடமும் கிடைத்துள்ளன. டோக்கியோவில் வெளியிடப்பட்ட இந்த சுட்டெண்ணின் அடிப்படையில் கல்வி தரம், வருமானம் போன்றவை கணிப்பிடப்பட்டுள்ளன. 187 நாடுகளை மையப்படுத்தியுள்ள இந்த சுட்டெண்ணில் முதல் 5 இடங்களையும் நோர்வே, அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.