சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால் குடிநீர் வழங்கும் வண்டி அன்பளிப்பு
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கும் வண்டி கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில் வட இலங்கை சர்வோதய சேவை வளாக மண்டபத்தில் (புங்குடுதீவு) 30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 03.00 மணிக்கு நடைபெற்றது.
பேராசிரியர் கா. குகபாலன் (இணைப்பாளர், வட இலங்கை சர்வோதயம்)திரு. கு.சந்திரா (கிராம அலுவலர், புங்குடுதீவு), செல்வி க. புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), செல்வி. பொ.ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்), செயலாளர், -வேலணை பிரதேச சபை, திரு.ச.ரமணதாஸ் (பொருளாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.
திரு.ச.ரமணதாஸ் அவர்களினால் (பொருளாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்) மேற்படி குடிநீர் வழங்கும் வண்டி கையளிக்கப்பட்டு, செல்வி க. புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) ஆகியோரினால் பொறுப்பேற்க்கப்பட்டது.
வெள்ளோட்டமாக புங்குடுதீவின் சில பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.
தகவல் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து