வலி மேற்கில் ஊனமுற்ற நபர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு-

02 03 04 05 061யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் கடந்த 30.07.2014 புதன்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் ஊனமுற்ற நபர்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேசத்தை சேர்ந்தவரும் நோர்வே நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் ஆலோசகரும், மனோதத்துவவியலாளரும், ஆசிரியையுமான அன்புமலர் இராஜசிங்கம் அவர்கள் கலந்துகொண்டு 50ற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். மேற்படி கொடையாளர் இலங்கையில் சுனாமி அனர்த்தம் இடம்பெற்றபோது நோர்வே நாட்டின் வாயிலாக பாதிக்கப்பட்ட அனைத்தின மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதேவேளை போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் உதவித்திட்டம் வழங்குவது தொடர்பிலும் மேற்படி நிகழ்வின்போது ஆராயப்பட்டுள்ளது.