சங்கானைப் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் ஊடான பணிகள்-

வலி மேற்கு பிரதேச சபைக்கு உட்படட்ட சங்கானைப் பகுதியில் 320 இலட்சம் ரூபா செலவில் நெல்சிப்தி;ட்டம்மூலம் மீன்சந்தை அமைக்கும் ஆரம்பபணிகள் ஆரம்பமாகியுள்ளது. 2011ம் ஆண்டு முதலாக சங்கானை பகுதி பட்டிண அபிவிருத்திச் சபை மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலி மேற்கு பிரதேச சபையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதிய சந்தைக்கான தெரிவு பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொண்டது. இந்நிலையில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சங்கானை பிரதேச பொது அமைப்புகளுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு மேற்படி சந்தைக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய அறிக்கையை தயார் செய்து அனுப்பினார். தொடர்ந்து சங்கானை பட்டின அபிவிருத்தி சபை மேற்கொண்ட முயற்சி காரணமாக பிரதேச சபைக்கு புதிய நிலம் மீன் சந்தை அமைப்பதற்கான நிலம் பிரதேச செயலகத்திற்கு பின் உள்ள பகுதியில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதேவேளை மேற்படி மீன்சந்தை அமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி சந்தையை அமைக்காது இவ் நிதிமூலம் வீதிகளை செப்பனிடலாம் என கோரிக்கையையும் முன்வைத்து இப்பணிகளை முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இவ் சந்தை அமைப்பதன் வாயிலாக பெறப்படும் நிதி தொடர்ச்சியாக பிரதேச அபிவிருத்திக்கு பயன்படமுடியும் என்பதை கருத்தில்கொண்டு மேற்படி திட்டம் தவிசாளரால் முன்மொழியப்பட்டு தற்போது ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வியம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஓய்வுநிலை புவியியலாளர் சங்கானை பிரதேசத்தினை நகரமாக்கும் செயன்முறையின் முதல்கட்ட படிமுறையாக இவவிடயம் அமையும் என்றார்.

தொல்புரம் கலாலயத்தின் நரகாசுரன் இசைநாடக கலைஞர் கௌரவிப்பு இறுவெட்டு வெளியீடு-

யாழ். தொல்புரம் கலாலயத்தின் நரகாசுரன் இசைநாடக கலைஞர் கௌரவிப்பு இறுவெட்டு வெளியீடு மற்றும் தசரதன் செல்வன் இசை நாடகத்திற்கான அங்குராட்பண வைபவம் என்பன கடந்த 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கலாலய நிறுவனத்தின் தலைவர் மு.சடாற்சரம் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராஞமன்ற உறுப்பினர் கௌரவ .ஈ.சரவணபவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் வெளியீ;டு நிகழ்வில் ஆய்வுரையினi சங்கானை பிரதேசசெயலக கலாச்சார உத்தியோகஸ்தர் திருமதி நிரூபா.காசிநாதர் அவர்கள் வழங்கினார். ஏற்புரையை கலாலய நிறுவனத்தின் நெறியாளர் செ. உதயச்சந்திரன் வழ்ங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் நடிகர் குணபாலன் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் இவ் நிறுவனத்தின் பெண் நடிகரை கௌரவித்து மலர்மாலை அணிவித்தார் இந்நிகழ்வில் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவகள் உரையாற்றும்போது- வலி மேற்கில் இசை நாடக மரபினை மிக நீண்டகாலமாக அரங்கேற்றி வருவதில் தனக்கென தனியிடம் பெற்றுள்ளது இவ் கலாலயா நாடக மன்றம் இவ் மன்றத்தின் செயற்பாடுகள் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது மிகச் சிறப்பாக கூறக்கூடிய விடயம் ஆகும். இவ் நாடகங்கள் ஊடாக இவ் மன்றத்தினர் அருகிவரும் தமிழர் தம் பண்பாடுகள் மற்றும் எமது கலாச்சாரங்களை எமது சமுதாயத்தில் நிலைபெறுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதும் காலத்தினால் பாராட்டக் கூடிய ஒன்றாகவே உள்ளது. இதற்கும் மேலாக பொன்னாலை வரதராஜப் பெஐருமாள் ஆலய உற்சவ காலத்தல் வருடம் தோறும் ஒவ்வொரு புராண இதிகாச இசை நாடகத்தினை தொடர்ச்சியாக மேடை ஏற்றி வருவது மற்றும் ஒர் சிறப்பம்சமாக உள்ளது. இவ்வாறான நிலை ஓர் புதிய மரபை ஏற்படுத்துவதோடு அல்லாமல் ஏனைய ஆலயங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகவே கருத முடியும். இதுவரை காலமும் இருந்துவந்த நிலைமையில் கடந்த காலத்தில் ஓர் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெண் பாத்திரங்களை ஆண்களே மேற்கொண்டு வந்தநிலையில் தற்போது அவ்பெண் பாத்திரங்களை பெண்களே மேற்கொள்ளும் நிலை என்பது மிகச் சிறப்பான ஓர் விடயமாவே கொள்ள முடியும். இதேவேளை சிறுவர்களுக்கும் உரிய பாத்திரங்கள் வழங்கப்பட்டு சிறுவர்களும் இங்கு ஊக்கு விக்கப்பட்டுள்ளமை மற்றும் ஒர் சிறப்பான அம்சமாகவே கொள்ளமுடியும் . இந்த வகையில் இவ்வாறான உயரியதும் தமிழர் தம் சிறப்புக்களை வெளிப்படுத்தக் கூடியதுமான கலைப் படைப்புக்களை உருவாக்கி செயல் வடிவம் வழங்கிய கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் அவர்களின் மகத்துவமான இப்பணி காலத்தினால் மறக்கப்படவோ அல்லது மறைக்கப்படவோ முடியாதது. இக் கலைஞர்கள் எமது இனத்தின் பெறுமதி மதிக்க முடியாத சொத்துக்கள் என குறிப்பிட்டார்