பிரித்தானிய துணைப் பிரதமரின் அறிவிப்பு-

imagesCA5L8U3Dஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குடிமக்கள் ஏழு வருடங்களின் பின்னர், அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய துணைப் பிரதமர் நிக் கிலெக் இதனைக் கூறியுள்ளார். பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களுள்ளன. இந்நிலையில் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான குடியேற்றம் குறித்த முக்கிய விவாதம் ஒன்று நேற்று இடம்பெற்றது. அதில் பங்கேற்ற துணைப் பிரதமர் நிக் கிலெக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில்; ஏழு வருடங்கள் குடியிருந்த ஒருவர், ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறவோ அல்லது தொழில் புரியவோ முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் நிக் கிலெக் கூட்டணி அரசில் பங்குபெற்றுள்ள லிபரல் டெமோகிராட்ஸ் என்ற இளைய கட்சியின் தலைவராவார்.

மீனவர் பிரச்சினைக்கு சிரத்தையுடன் செயற்பாடு – சுஷ்மா-

sushma suvarajஇலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் சிரத்தையுடன் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ் தலைமையிலான குழு நேற்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தது. இதன்போது இருநாட்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போதே சுஷ்மா சுவராஜ் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பாரதிய ஜனதா கட்சி ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாக தெரிவித்ததாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பௌத்த சாசன அமைச்சை மாற்ற வலியுறுத்தல்-

பிரதமர் டி எம் ஜயரத்தினவிடம் இருந்து பௌத்த சாசன அமைச்சை மீள பெறவேண்டும் என பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவணா பலய கோரியுள்ளது. ராவணா பலய என்கின்ற மேற்படி அமைப்பின் இணைப்பாளர் ஹித்தாகந்தே சத்தா திஸ்ச இதனை தெரிவித்துள்ளார். மல்வத்த பீட மஹாநாயக்கரை இன்றையதினம் காலையில் சந்தித்த ஹித்தாகந்தே சத்தா திஸ்ச தான் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவின் பொலிஸ் மா அதிபர் இலங்கைக்கு விஜயம்-

maldives police chiefமாலைதீவின் பொலிஸ் மா அதிபர் ஹூசைன் வைட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். பொலிஸ் மா அதிபர் என் கே இலங்ககோன், சட்டம் மற்றும் சமாதன தொடர்பான அமைச்சின் செயலாளர் மேஜர்ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோரின் அழைப்பின்பேரிலேயே அவர் இலங்கை வரவுள்ளார். மாலைதீவு பொலிஸ் மா அதிபரை வரவேற்றும் நிகழ்வு நாளை மறுதினம் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது.