தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம்-

thamil thesiya koottamaippu indiaஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ள கூட்டமைப்பின் குழுவினர் அந்நாட்டின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளனர். இதன்படி நாளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் நாளை மறுதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வட மாகாண சபை அமர்விலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு-

vada maakaanasabai amarvilirunthuவட மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆளுங்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சமர்ப்பித்த 3 பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. சர்வதேச விசாரணைக்கான கால வரையறையை நீடித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த 03 பிரேரணைகள் சிவாஜிலிங்கத்தினால் இன்றைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பிரபா கணேசன், பீ.திகாம்பரம் பிரதியமைச்சர்களாக பதவிப்பிரமாணம்-

pirathi amaicharkalபாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் பீ.திகாம்பரம் ஆகியோர் பிரதியமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அலரி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சராக பிரபா கணேசனும், தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க பிரதியமைச்சராக பீ திகாம்பரமும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை-

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு நேற்று டெல்லியில் உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய வேளாண்மை, உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இலங்கை இந்தியா இடையேயான சர்வதேச எல்லையின் ஏற்படும் பிரச்சினைகள், கைது சம்பவங்கள் போன்றவை குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச வளங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடு-

therthal nadavadikkaiku arasa valankalaiஊவா மாகாணசபைத் தேர்தலின் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச வளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிடுகின்றது. இதேவேளை, அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத போஸ்டர், கட்அவுட்களை காட்சிப்படுத்துல் தொடர்பில் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதனைத்தவிர, அரசியற் காரணங்களுக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவது தொடர்பிலும் 05 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள்மீது தாக்குதல்-

கதிர்காமம் புதிய நகரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இருவர்மீது இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டுவதற்காக முச்சக்கர வண்டியில் சென்றவர்கள்மீது இன்று அதிகாலை 1.20 அளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 40 பேரடங்கிய குழு தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்கு தெபரவௌ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை அகதிகளை இடம்மாற்றத் தீர்மானம்-

ilankai akathikalai idamaatraஇந்தியாவின் ஈரோடு மாவட்டம் பவானி சாகரில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை வேறு முகாமிற்கு இடம்மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் கோரிக்கையை பரிசீலித்துப் பார்த்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆணையாளர் பி.ஆனந்த் தெரிவித்துள்ளார். குறித்த அகதிகளுக்கு தேவையான நீர், சுகாதாரம் மற்றும் கழிவகற்றல் வசதிகள் போதுமானளவு இல்லாமையினாலேயே இவர்கள் இடமாற்றப்படவுள்ளனர். இந்த முhகமில் 1057 குடும்பங்களைச் சேர்ந்த 3532 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 1000 பேரை வேறிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகம்மீது தாக்குதல்-

UNP aluvalakam meethu thaakkuthalஊவா பரணகம – கலஹகம பகுதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம்மீது இன்று அதிகாலை 3.00மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. தனியாரின் மரக்கறி வர்த்தக நிலைய கட்டிடத்திலேயே குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த ஆட்டோ முற்றாக சேதமடைந்துள்ளதோடு, வர்த்தக நிலையத் தொகுதியும் சேதமடைந்துள்ளது. ஏ.எம்.புத்ததாஸ எனும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரின் ஆதரவாளர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் ஐயந்த கன்னங்கர கூறியுள்ளார். ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹரீன் பிரனாந்து கலந்துகொண்ட சந்திப்பொன்று இந்த அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் இதனை ஏற்பாடு செய்த குழுவினருக்கு இரவில் ஜீப் வண்டியில் வந்த சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர் என கன்னங்கரவினால் தமக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக கபே சுட்டிக்காட்டியுள்ளது.