பிரித்தானிய வைத்திய நிபுணர் சி.நவரட்ணம் அவர்கள் மற்றும் சித்தண்கேணி நாககன்னி அம்மன் ஆலய குருக்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்-

pirithaaniya vaiththiya nipunar (4)pirithaaniya vaiththiya nipunar (3)பிரித்தானியாவின் புகழ்பூத்த வைத்திய நிபுணர் திரு. சி. நவரட்ணம் அவர்கள் கடந்த 18.08.2014 திங்கட்கிழமை அன்று யாழ்;. வலி மேற்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களை சந்தித்து பல்வேறு வியங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார், இச்சந்திப்பின்போது புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுபினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடந்த 17.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பன்முக வரவுசெலவுத் திட்ட நிதி ஊடாக யாழ்ப்பாணம் சித்தன்கேணி நாககன்னி அம்மன் ஆலயத்திற்கான ஒதுக்கீடு தொடர்பில் ஆலய ஞானகுரு இந்திரன் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்களுக்கு திரு. சித்தார்த்தன் அவர்கள் நிதியொதுக்கீடு-வலி மேற்கு தவிசாளரால் குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு-

vattukottai vilaiyaattu kalaham sana samooka nilaiyam (3)vattukottai vilaiyaattu kalaham sana samooka nilaiyam (2)vattukottai vilaiyaattu kalaham sana samooka nilaiyam (1)யாழ். வட்டுக்கோட்டைப் பகுதிக்கு நேற்றையதினம் (21.08.2014) விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் .சித்தார்த்தன் அவர்கள் வடமாகாண சபையின் ஒதுக்கீடுகளில் சுழிபுரம் மேற்கு பிரதேச இளம்சுடர் விளையாட்டுக்கழகம், சுழிபுரம் சன்ஸ்டார் விளையாட்;டுக்கழகம், திக்கரை தழிழ்த்தாய் சனசமூக நிலையம் மற்றும் மூளாய் மனிதவள சனசமூக நிலையங்களுக்கான தனது ஒதுக்கீட்டுத் தொகையினை வழங்கியுள்ளார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி .நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பிரதேசத்தின் எதிர்கால தேவைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் எடுத்துக்கூறினார். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையால் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்திச் செயல் திட்டங்களில் ஒன்று சங்கானைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நவீன நூலகம் ஆகும் இதற்கான குடிநீர் அமைப்புத் திட்டம் சம்பிரதாயபூர்வமாக இன்றையதினம் (22.08.2014) வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியனின் 77ஆவது பிறந்த தினம்-

velanai veniyan pirantha thinam, (2)கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியனின் 77ஆவது பிறந்ததினத்தில் கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய தர்மகர்த்தாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான டிஎம் சுவாமிநாதன், இலங்கை இந்து முன்னணியின் இணைத்தலைவரும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன், இன நல்லிணக்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் இலங்கை இந்து முன்னணி செயலாளர் கலாநிதி மோகன் ஆகியோர் வேலணை வேணியனுக்கு பட்டாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து வாழ்த்தினர் ஆலய பிரதம குருக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

 திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் கூட்டமைப்பு முறைப்பாடு-

இந்தியா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுஷ்மா சுவராஜிடம் எடுத்துக் கூறியுள்ளதக தெரியவருகிறது. இரா. சம்பந்தன் தலைமையில் இந்தியாவுக்குச் சென்றிருக்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றுகாலை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் பலரை சந்தித்து வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

மோசடியான முறையில் பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பித்த மூவர் கைது-

42 வயதான இலங்கைப் பெண்ணும், வயதுக்கு வந்த அவரது இரு புதல்விகளும் மோசடியான முறையில் பிரித்தானிய செல்ல வீசா பெற்றுக்கொள்ள முயற்சித்தவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2005ஆம் ஆண்டிலும் வேறு பெயர்கள் மற்றும் வேறு பிறந்த திகதிகளைப் பயன்படுத்தி பிரித்தானிய செல்ல வீசாவிற்காக விண்ணப்பித்துள்ளனர். குறித்த மூன்று பேரினதும் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு 10 வருட காலம் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த மோசடியில் ஈடுபட்ட பெண்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தல்-பாதுகாப்பு செயலர்-

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும் அது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் சில குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. புலிகளின் அழுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சில தற்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறான சில குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால் மீளவும் இன முரண்பாடுகள் வெடிக்கும் சாத்தியமுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு விசா வழங்கல் தற்காலிக நிறுத்தம்-

எபோலா வைரஸ் தாக்கம் காரணமாக சில ஆபிரிக்க நாடுகளுக்கு, இலங்கை வருவதற்க்கான விசா (ஒன் எரைவல் விசா) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நைஜீரியா, கினியா, சியராலியோன் மற்றும் லைபீரியா ஆகிய நான்கு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுக்கே விசா வழங்குவதே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலர்மீது தாக்குதல்-

யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்மீது இனம் தெரியாத நபர்கள் நேற்றிரவு 9மணியளவில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நல்லூர் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது நல்லூர் செட்டிதெரு வீதியில் வைத்து இவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் முகத்தில் காயமடைந்த நிலையில் விஜயகாந் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விஜயகாந் தலைமையில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தது.

இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம், ஒருவர் காயம்-

பளை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் படுகாயமடைந்த இரரணுவ வீரர் ஒருவர், பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த முகாமில், துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததிலேயே மேற்படி வீரர் படுகாயமடைந்த நிலையில் நேற்றுமாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். டி.சமன்திலக (வயது 31) என்ற இராணுவ வீரரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். அவர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வட்டு தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக்கு முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடு-

வட மாகாண முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக வட்டு தென் மேற்கு பிரதேச அபிவிருத்திக்காக பிரதேச மக்களாலும் பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி .ஐங்கரன் அவர்களதும் வேண்டுகோளுக்கு இணங்க 18.08.2014 அன்று 2.015மில்லியன் ரூபா ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்நிகழ்வின் செயற்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கண்காணிப்புகுழு தெரிவு கூட்டம் வட்டுகோட்டை மூன்றாம் பனை ஐக்கிய நாணய சங்க கட்டிடத்தில் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக தவிசாளர் கலந்து கொண்ட பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று அபிவிருத்தி என்ற வகையில் மக்களுடைய ஏராளமான தேவைகள் உள்ளன. இவ் விடயம் தொடர்பில் முதலமைச்சருக்கு இப் பிரதேச மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். Read more