தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்-இந்தியா-
இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழும் வகையிலான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பருதீன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நேற்றையதினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் இது தொடர்பில் டெல்லியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, அக்பருதீன் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் தெளிவாக விளக்கப்படுத்தி இருப்பதாகவம் அவர் கூறியுள்ளார். மேலும் 13ம் திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் உள்ளிட்ட ஐக்கியமான தீர்வு ஒன்று தொடர்பில் இந்தியா செயற்படும் என்றும் அக்பருதீன் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் சந்திப்பு-
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகள், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பினர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளனர். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா பங்களிப்பு செய்யவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கூட்டமைப்பினர் இதன்போது எடுத்துக்கூறியுள்ளனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. வடகிழக்கு மக்களின் நிலை தொடர்பாகவும், அவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் நாங்கள் கலந்து ஆலோசித்தோம். இந்த பிரச்சினை தொடர்பாக முக்கியமான சில கோரிக்கைகளை இந்திய அரசின் பார்வைக்கு முன் வைத்திருக்கிறோம். இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் களநிலைமை, Read more