இந்திய அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு நம்பிக்கை-

tna-modi-0313ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதுடன் இந்திய அரசாங்கம் நின்றுவிடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், சுய உரிமைகளுடனும், சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கும் என இந்திய பிரதமர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். பிரிக்கப்படாத ஒரே இலங்கையில் இந்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். மேலும் இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உதவும். அத்துடன் அதனடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வினை ஏற்படுத்தவும் இந்திய அரசாங்கம் செயற்படுமென தம்மிடம் உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகளுக்கான பணி தொடர்பில் எதிர்ப்பு-

australiaஅவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நகர சுத்திகரிப்பு பணியாளர்களாக இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகள் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் அகதிகளுக்கு இந்த பணிகள் வழங்கப்பட்டமைக்கு அவுஸ்திரேலியாவில் எதிர்ப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்த பணிகள் அவுஸ்திரேலியர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் சிலத் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் தொழில் இல்லாத நிலைமை அதிகரித்து வருகின்ற நிலையில், இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற தமிழர்களுக்கு இவ்வாறு தொழில் வழங்க கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. எனினும் தமிழ் அகதிகளுக்கு நகர சுத்திகரிப்பு பணிகள் வழங்கப்பட்டுள்ளமையை, குயின்ஸ்லாந்தின் நகர முதல்வர் ரேய் ப்ரௌன் நியாயப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியர்கள் செய்யமறுத்த தொழில்களையை இலங்கையில் இருந்து வந்த அகதிகள் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் ராஜதந்திரிகளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மனித உரிமை உள்ளிட்ட விடயங்களை கருவிகளாக பயன்படுத்தி, இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வாறான பிரசார நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான முக்கியத்துவம் குறித்து இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் விபத்தில் கர்ப்பணிப்பெண் உயிரிழப்பு, வாகனம் தீக்கிரை-

yaal vipaththil karpini pen uyirilappu (3)yaal vipaththil karpini pen uyirilappu (2)யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கர்ப்பிணி பெண் பலியானதையடுத்து ஆத்திரமுற்ற பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சேர்ந்து விபத்துக்கு காரணமான அந்த வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பித்து ஓடிவிட்டார். விரைந்து செயற்பட்ட பொலிஸார், வாகனத்தை தீயிட்டு கொளுத்தியவர்களைத் துரத்தியதுடன், வாகனத்தின் சாரதியையும் தேடிப்பிடித்து கைது செய்தனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வாகனத்தின் பெருமளவான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து கோப்பாய், காங்கேசன்துறை, ஆகிய பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் பகல் 12.45 மணியளவில் நிலைமையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய – இலங்கை கூட்டுக்குழு கூட்டம் நாளை-

ilankai inthiya koottukulu kootamதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். இதை தடுக்க இரு நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இடையிலான கூட்டம் மத்திய அரசின் ஏற்பாட்டின்படி நடந்து வருகிறது. இதன்படி இந்திய – இலங்கை கூட்டுக்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த திங்கட்கிழமை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதன்படி, நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள் என தமிழக ஊடகமான தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் குழுவும் நாளை டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள். இவர்கள், டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளர் மட்டத்தில் நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில், இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசி, நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக உயர் தொழிநுட்ப உபகரணங்கள்-

siraichaalaiyin pathukaappitkuசிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உயர் தொழிநுட்பம் கொண்ட உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோதமான பொருட்களைக் கொண்டுவருவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்குள் கொழும்பைச் சூழவுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த உபகரணங்களைப் பொருத்த எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது. மேலும் நாட்டிலுள்ள மற்றைய சிறைச்சாலைகளிலும் தேவைக் கேற்ப இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

வீட்டுக்குள் அத்துமீறிய இராணுவ வீரர் கைது-

யாழ் குருநகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று இரவு அத்துமீறி நுழைய முற்பட்ட இராணுவ வீரர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி இயக்கச்சி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி இராணுவ வீரர், தனியாக வசித்து வரும் பெண்ணொருவரின் வீட்டிற்குள்ளேயே நேற்று நள்ளிரவு நுழைய முற்பட்டுள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், மேற்படி சிப்பாயை மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலேயே மேற்படி நபர், இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.