Header image alt text

ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளி சிறார்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி-

pajanai padasalai 03யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் பயின்றவர்களுள் 14 சிறார்கள் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது வழிகாட்டலில் திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்து வாழும் திரு. வே.மணிவண்ணன் அவர்களது அனுசரணையுடன் 2014ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிற்கான இலவச புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்தியடைந்த பிள்ளைகளின் பெயர் மற்றும் புள்ளிகள்

1. ஜெயக்குமார் திருட்டாஜினி – 159                                                                   
2. செந்தூரன் பிரிஜென்சி – 176
3. செந்தூரன் சரண்யா – 177
4. சந்திரவேல் மதுனிகா – 170
5. கஜேந்திரன் சிந்துஜன் – 169
6. உதயநாதன் ஆகாஸ் – 167
7. ரவீந்திரன் சோவிகன் – 161
8. ஆனந்தகிருஸ்ணன் ரதீபன் – 166
9. பிரசன்னா கபின்சன் – 163
10. சிவதாசன் தர்சனன் – 172
11. இராசரட்ணம் தனஞ்சிகன் – 180
12. விஜிதகுமார் தபீனா – 166
13. த. எழிலரசி – 171
14. செ. மதுமிதா – 158
Elalai Metku  (2)Elalai Metku (1)Elalai Metku (3)

ஊவா மாகாண முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ பதவிப்பிரமாணம்-

shasheendraஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்த மித்ர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண சபைக்கு ஏனைய கட்சிகள் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லண்டன் பி.பி.ஸி தமிழோசையைக் காப்பதற்கு கை கொடுக்குமாறு வேண்டுகோள்-

கடந்த 74 ஆண்டுகாலமாக லண்டனிலிருந்து இயங்கி வரும் தமிழோசையை இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நாடு கடத்துவதற்கு பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்தியா பொலிஸி எனும் திட்டத்தின் கீழ் இந்திய சாகரத்துக்குள் சேர்த்துவிட பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு பக்கசார்பற்ற சர்வதேச தமிழ் செய்திநிறுவனம் தமிழோசையாகும். இது இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட தரப்பினரின் ஆதரவையும், அதே சமயம் விமர்சனத்தையும் தமிழோசை பெறுவதன்மூலம் தெளிவாகின்றது. இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கு பி.பி.ஸி தமிழோசை இன்னமும் அவசியமானதாக உள்ளது. இந்நிலையில் தமிழோசையை லண்டனில் இருந்து டெல்லிக்குக் கொண்டு செல்வது தமிழ்பேசும் இலங்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பேரிழப்பாகும். பி.பி.ஸி சிங்கள சேவை லண்டனில் இருக்க, தமிழோசையை மட்டும் டெல்லிக்கு அனுப்புவது அந்தசேவை அதிகம் தேவைப்படும் மக்களுக்கு பெரும் இழப்பாக அமையும். எனவே இதனைத் தடுப்பதற்காக தயவு செய்து பி.பி.ஸி நிர்வாகத்துக்கும், பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கும் அனுப்புவதற்கான கீழுள்ள விண்ணப்பத்தில் பெயரைப் பதிவு செய்வதுடன் முகநூலிலும் பகிர்ந்துகொள்ளுமாறு கேடடுக்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.petitions24.com/signatures/save_the_london_bbc_tamil_broadcast/start/0

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more

தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்பு-

Tamil_News_686500191689தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் இன்றுபிற்பகல் 1மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து ஏனைய அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பதவியேற்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தன. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமையை அடுத்து, அவர் இயல்பாகவே தமது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார். அத்துடன் அவரின் அமைச்சரவையும் பதவியிழந்தது. இதனையடுத்து சிறையிலுள்ள ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்றுமாலை கூடி பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக தெரிவுசெய்தனர். இதன்போது ஜெயலலிதா அனுப்பிய கடிதம் ஒன்றும் வாசிக்கப்பட்டது இந்நிலையில் தமிழக ஆளுநர் ரோசைய்யா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பன்னீர்செல்வம் தாம் அமைச்சரவையை அமைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இதேவேளை பன்னீர்செல்வம் கடந்த 13 வருடத்தில் இரண்டாவது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார் ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு ஒன்றின்போதும் பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

எங்கும் தப்பி ஓட மாட்டேன்! ஜெயலலிதா-

Tamil_News_884116768837சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக தனித்தனியாக பிணை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு பிணை மனுவுடன் தீர்ப்பின் நகலும் ஆயிரம் பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தனது பிணை மனுவில், ‘தனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பெங்களுர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர, நான் ஒரு சாதாரண நபர் அல்ல மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. பிணையில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

திருமலை அரசாங்க அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

திருகோணமலை மாவட்ட, அரசாங்க அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு கோரி, திருமலை பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இன்று திருமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கருகில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். கடந்த 2006ஆம் ஆண்டு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர்ஜெனர்ல் டி.டி.ஆர்.டி சில்வாவுக்கு எதிராகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருமலை பிரதேச செயலர்களின் அரச கடமைகளை செய்வதற்கு, அரச அதிபர் தடையாக இருப்பதாகவும் அவரை உடனடியாக இடம்மாற்ற கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச அதிபரை இடம்மாற்றம் செய்வதற்கான கடிதம் இம்மாதம் 15ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் அவருடைய பதவிக்கு வேறோருவரும் நியமிக்கப்பட்டார். இருந்தும், இடம்மாற்ற கடிதத்தை நிராகரித்துவிட்டு அரச அதிபர் சேவையில் ஈடுபட்டுள்ளார் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். இதேவேளை, அரச அதிபரை இடம்மாற்றம் செய்யக்கூடாது என கோரி திருமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு முன்பாக, அலுவலக ஊழியர்களும் பொதுமக்களும் மற்றுமொரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கந்தளாய் கோமரங்கடவல பிரதேசத்திலுமிருந்து பொதுமக்கள் வந்து கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகளை வாசிக்க… Read more

அராலி மத்தி, ஊரத்தி கிராமத்தில் குடியிருப்பாளருக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு-

araliவலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் வலி மேற்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள அராலி மத்தி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட ஊரத்தி கிராமத்தில் அமைந்;துள்ள பிரதேச சபைக்கு சொந்தமான காணி குடியிருப்பாளருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் நடவடிக்கைகள் நேற்று 27.09.2014 சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி காணியானது பிரதேச சபைக்கு சொந்தமான காணியாகும் இக்காணியில் ஏறத்தாள 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர் இந்நிலையில் இப்பகுதி மக்கள் தமக்கு குடியிருக்க நிரந்தர காணியற்ற நிலையில் இக்காணிகளை பங்கீடு செய்து தரும் பட்சத்தில் எதிர்காலத்தில் வழங்கப்படும் உதவிகளை பெற்று வாழ்வாதாரத்ததினை உயர்த்த முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் இக் காணிகளை பங்கீட செய்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானது. இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தெரிவு: நாளை பதவியேற்பு-

-panneerselvamதமிழகத்தின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு நாளையதினம் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை, லோயிட்ஸ் வீதியில் அமைந்துள்ள அ.தி.மு.க., தலைமையகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழக சட்டசபை அ.தி.மு,க., தலைவராக தமிழக அரசின் தற்போதைய நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் நாளையதினம், ஆளுனர் மாளிகையில் நடைபெற உள்ள ஒரு விழாவில் முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ளவுள்ளார். இதன்போது முக்கிய அமைச்சர்களும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஐ.நா செயலர் பான்கீ மூன் ஜனாதிபதி சந்திப்பு-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீ மூனை சந்தித்துள்ளார். நியூயோர்க் பகுதியிலுள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் இச்சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது நாட்டில் இடம்பெறும் அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி, பான்கி மூனுக்கு விளக்கமளித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகள் தொடர்பிலும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் எடுத்துக் கூறியுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடனும் இலங்கையில் வெற்றிகரமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பான் கீ மூன் இந்த சந்திப்பில் இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு மற்றும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் என்பன தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு எதிரொலி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

Tamil_News_254951119423தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிறையில் அடைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு இரவு உணவாக ஒரு களி உருண்டை, 200 கிராம் அரிசி, 200 கிராம் சாம்பார் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறையில் 7402 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. Read more

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

Tamil_News_150992989541சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 6 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி 4 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளார். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா பதவி இழக்கும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த 2001ல் வழக்குகளில் சிக்கி ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்தார். இந்த முறையும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்ததும், கோர்ட் அறையில் இருந்த ஒ.பன்னீர்செல்வத்துடன் ஜெயலலிதா சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி உறுதி என்று கூறப்படுகிறது. Read more

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான தீர்ப்பு தொடர்பாக சில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துகள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
உப்பை தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் தவறு செய்தால் தண்டணையை அனுபவித்தே தீரவேண்டும் என்ற இயற்கையின் நியதியை யாராலும் மாற்றமுடியாது. இதற்கு தமிழகத்தின் முதல்ரூயஅp;அமைச்சர் ஜெயலலிதாவும் விதி விலக்கல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு மிகப்பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையட்டி அ.தி.மு.க.வினர் நடத்தும் போன்ற வன்முறை சம்பவங்களை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்தவேண்டும்

சுப்ரமணிய சாமி (பாஜ):
நானே நிரூபித்து உள்ளதை போல உணர்கிறேன். இந்த தீர்ப்பு மூலம், மக்களிடம் இழந்திருக்கும் நம்பகத்தன்மையை ஜெயலலிதாவால் திரும்ப மீட்கவே முடியாது. Read more

ஜெயலலிதாவுக்கு நான்கு வருடங்கள் சிறை-

Tamil_News_476707100869சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி அவர் தமிழக முதல்வர் பதவியை இழப்பார் எனத் தெரியவருகிறது. 

கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் திகதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி 27.6.1996-ம் திகதி தமிழக இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். Read more

சர்வதேச விசாரணைகளை இலங்கை நிராகரித்தமை வருத்தமளிக்கிறது-

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. இதேவேளை, யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கான, ஐ.நா சபையின் அழைப்பை இலங்கையின் மூத்த அதிகாரிகள் நிராகரித்தமை தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சுதந்திரமாக விசாரணை செய்ய, 2014ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மறுப்புத் தெரிவித்துள்ளது வருத்தமளிப்பதாக சர்வதேச கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோர் சாட்சியமளிப்போர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றார்களா என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. Read more

தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா தனது பதவியை இழக்கும் நிலை-

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களுரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்றுகாலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். Read more