அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 29வது நினைவுதினம் அனுஷ்டிப்பு- யாழ். தாவடியில், யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில்

SAM_2012SAM_2010இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2014) அனுஷ்டிக்கப்பட்டது.

29வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரும், தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவருமான திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இன்றுகாலை 7மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது.

SAM_2019SAM_2026SAM_2029SAM_2033SAM_2035SAM_2097SAM_2054SAM_2043SAM_2095SAM_2114SAM_2107SAM_2104SAM_2085SAM_2101SAM_2079SAM_2175இதன்போது தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் சி.க..சிற்றம்பலம் அவர்கள் பிரதான நினைவுரையினை ஆற்றினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி, லண்டனிலிருந்து வருகைதந்திருந்த அரசியல் பிரமுகர் சிறீ கெங்காதரன், வலி வடக்கு; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. குமாரவேல், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. பிரகாஸ், வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி.நாகரஞ்சனி ஐங்கரன்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வை.பாலச்சந்திரன், வலி.தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கணேசவேல், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் பரமேஸ்வரலிங்கம், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், அமரர் தர்மலிங்கம் அவர்களின் ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும், இந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்தனர்.

SAM_2132SAM_2125SAM_2126SAM_2147SAM_2139இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு கல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு இரங்கல் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, கல்லூரியின் பீடாதிபதி திரு.அமிர்தலிங்கம், லயன் வைத்தியக் கலாநிதி தியாகராஜா, திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இங்கு உரையாற்றிய பீடாதிபதி திரு.அமிர்தலிங்கம் அவர்கள், கல்வி வளர்ச்சிக்காக இக் கல்லூரியினை அமைப்பதற்கு 230 பரப்புக் காணியை தனது தந்தையாரின் பெயரில் திரு. சித்தார்த்தன் அவர்கள் வழங்கியிருந்தார் என்பதை நினைவுபடுத்தியதுடன், கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கல்வியியற் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரும், பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அமரர் வீ. தர்மலிங்கம் அவர்களது நினைவாக இன்று நண்பகல் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.