கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுநாள் மற்றும் நினைவுப் பேருரை-

unnamedகலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுநாளும் நினைவுப் பேருரையும் எதிர்வரும் 11.09.2014 வியாழக்கிழமை அன்று காலை 8.45 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.00மணிவரையில் இடம்பெறவுள்ளது. செல்லா மண்டபம், வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்ற முகவரியில் வாழ்வகத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொள்கின்றார். சிறப்பு அதிதிகளாக – வலி தெற்கு (உடுவில்) உதவி பிரதேச செயலர் திருமதி யசோதா உதயகுமார் மற்றும் சர்வதேச லயன்ஸ் கழகங்களின் 306(டீ)ஆளுனர் லயன் னுச.வை.தியாகராஜா, யாழ். ஞானம் பவுண்டேசன் திரு கனகசிங்கம் நவநீதன், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி னுச.மகேந்திரன் சுரேந்திரன், வரையறுக்கப்பட்ட வர்த்தக வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு. றோய் நிக்கலஸ், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.எச்.எல்துஸ்யந்த ஆகியோரும், கௌரவ விருந்தினராக – தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வின்போது யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம், முதுநிலை விரிவுரையாளர் திருமதி திலகேஸ்வரி குமுதரஞ்சன் அவர்கள் நினைவுப் பேருரையினை ஆற்றவுள்ளார்.

வடமாகாண சபையை இயங்கவிடாது அரசு முட்டுக்கட்டை போடுவதாக சுட்டிக்காட்டு- 

vada maakaanaவடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கு எடுத்துக்கூறியதாக யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை, ஆளுநர் பதவியிலிருந்து மாற்றாமல் தொடர்ந்து அவரை இரண்டாவது தடவையாக நியமித்து வடமாகாண சபையின் செயற்பாடுகளை செய்யவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக அவருக்கு எடுத்துக்கூறினேன். தமிழ் மக்கள் மத்தியில் திருப்பம் ஒன்று கட்டாயம் வேண்டும். தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டேன். வடக்கு மாகாண சபைக்கு இருக்கும் முட்டுக்கட்டைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரும் தன்னிடம் எடுத்துக் கூறியதாகவும் அன்ரு மன், தன்னிடம் தெரிவித்ததாக ஆயர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி ஞாபகார்த்த தடகளப் போட்டி-

வாழ்வக நிறுவனத்தால் நடத்தப்படும் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி ஞாபகார்த்த தடகளப் போட்டி – 2014 எதிர்வரும் 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை 9.01மணியளவில் யாழ். மருதனார்மடம், இராமநாதன் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவர் திரு..ஆறுமுகம் ரவீந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி இமெல்டா சுகுமார், (செயலாளர், சமூகசேவைத் திணைக்களம்) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு ஆறுமுகம் ராஜேந்திரன் (மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாணம்) வைத்தியக் கலாநதி மு.மலரவன் (கண் சத்திர சிகிச்சை நிபுணர்) யாழ். போதனா வைத்தியசாலை. திருமதி கமலராணி கிருஸ்ணப்பிள்ளை (அதிபர். இராமநாதன் கல்லூரி, யாழ்ப்பாணம்.) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more