புகலிடக கோரிக்கையாளர் பிரச்சினை தொடர்பில் ஐ.நா அமைப்பு கவலை-
இலங்கையில் அரசியல் தஞ்சம் கோருகின்றவர்களை நாடுகடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. அகதிகள் பேரவையின் இணையத்தளத்தில் இது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 3ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் 62 பாகிஸ்தானியர்களும், 2 ஆப்கானிஸ்தானியர்களும் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இன்னும் 102 பேர் வரையில் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்படவிருக்கும நிலையில், இந்த செயற்பாடுகளை நிறுத்துமாறு ஐ.நா அகதிகள் பேரவை கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம், ஜூன் 9ஆம் திகதி இதற்குரிய சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்தது. ஓகஸ்ட் 15ஆம் திகதி அது ஸ்தம்பித்திருந்தது. எனினும் செப்டெம்பர் 3ஆம் திகதி மீண்டும் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் மொனோரெயில் சேவை-
கொழும்பு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மொனோரெயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகின் தனித்துவமான போக்குவரத்து சேவையான மொனோரெய்ல் திட்டத்தை கொழும்பு நகரிலும் நடைமுறைப்படுத்த விருப்பம் கொண்டுள்ளதாக ஹிட்டாச்சி மொனோரெயில் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைத்தந்த ஜப்பானிய பிரதமருடனான வர்த்தகக்குழு இதனை அறிவித்துள்ளது. மொனோரெய்ல் திட்டம், போக்குவரத்துக்கு மிகவும் காத்திரமான பங்கை அளிக்கும் என்றும் ஹிட்டாச்சி மொனோரெய்ல் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரத்தை மையப்படுத்தும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 1.3பில்லியன் டொலர்கள் தேவை. இதற்கான ஆய்வுகளும் முடிவடைந்துள்ளன. ஜப்பானின் ஜெய்க்கா திட்டம் முதல்கட்ட நிதிகளை வழங்கவுள்ளது. இதன்படி ஒருகிலோமீற்றர் மொனோரெய்ல் திட்டத்தை அமைக்க 57 மில்லியன் டொலர்கள் தேவை. இத்திட்டம் மாலபே ஊடாக ரொபட் குணவர்த்தன மாவத்தை, பத்தரமுல்ல, தேசிய வைத்தியசாலை, உலக வர்த்தக மையம், கொழும்பு கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை மையப்படுத்தி மொனோரெயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை வாசிக்க…… Read more