ஐ.நா ஆணையாளர் ஹூசைன் – அனந்தி சசிதரன் சந்திப்பு-
ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள இளவரசர் செயிட் அல் ஹ_ஸைனை, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சந்தித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான ஒன்றுகூடலின்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், வட மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார். நேற்றையதினம் காலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அனந்தி சசிதரன், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தி உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.