பிரித்தானியாவில் இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் எதிர்ப்பு-

scotlandதனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தில் நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று அதிகாலை முதல் வெளியாகத் துவங்கின. பிரித்தானியாவிலிருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் ஓர் அங்கமாக கடந்த 307 ஆண்டுகளாக நீடித்த ஸ்கொட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு, அந்நாட்டிலேயே உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் உண்மையான நிலையறிய அங்கு நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 2,600 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 16வயது நிரம்பியவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். 86 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே, பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது உறுதியாகியது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரும் ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டுமென தங்கள் விருப்பத்தைத் தெரிவித்;திருந்தனர்.