Header image alt text

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் தினம் அனுஷ்டிப்பு-

neerveli (5)யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியானது 1929ம் ஆண்டு முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 85 ஆண்டுகளாக கல்விச் சேவை புரிந்து வருகின்றது. அத்துடன் தனது பணியை கல்வியுடன் நிறுத்தி விடாமல், விளையாட்டு, கலை, பண்பாடு மற்றும் இன்னோரன்ன துறைகளிலும் கவனம் செலுத்தி ஆயிரமாயிரம் கல்வியாளர்களை இக் கல்லூரி உருவாக்கியுள்ளது. நேற்று (22.09.2014) திங்கட்கிழமை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களின் 53ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நினைவுதின நிகழ்வின்போது தீபம் ஏற்றுதல், மலர்மலை அணிவித்தல், மலரஞ்சலி என்பன இடம்பெற்றன. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்வி பணிப்பாளர் குணநாதன் அவர்களும், தியாகராஜா குருக்கள் (மணிஐயர்), முத்துக்குமரன், ராசேந்திரன் செல்வராஜா, கிராமசேவையார் சண்முகவடிவேல், நீர்வேலி வடக்கு சுந்திரலிங்கம், பரராஜசிங்கம் உள்ளிட்டோரும் விளக்கேற்றல் மலர்மாலை அணிவித்தலில் பங்குகொண்டிருந்தனர். கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரியின் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவிலானோர் இந்நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் இறுதியில் திரு திருமதி இராஜராஜேஸ்வரி சிவகுமார் தம்பதிகளின் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

neerveli(11)neerveli (10)neerveli  (8)neerveli (7)neerveli (9)neervelineerveli (6)neerveli  (4)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-

thamil thesiya koottamaippu indiaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாரளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்றுமாலை இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநதிகள் கலந்து கொண்டனர். இங்கு, இன்றிருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் முக்கிய சில முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது

1. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமாகவும், சில கட்டுப்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கூட்டமைப்பை கொண்டு நடத்த வேண்டியிருப்பதனால் இவற்றை உள்ளடக்கிய யாப்பொன்று தயாரிக்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

2. ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் தேசிய மாநாட்டின் தீர்மானங்களுக்கேற்ப தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பல்வேறுபட்ட மக்கள் அமைப்புக்களை உள்ளடக்கி தமிழ் தேசிய சபையொன்றை நிறுவுவதெனவும் முடிவுசெய்யப்பட்டது

3. வடக்கு மாகாணசபை தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், அதற்கான ஆலோசனைகளை பரிமாறிக்கொள்வதற்குமாக மாதாந்த கூட்டமொன்றை முதலமைச்சருடன் இணைந்து மேற்கொள்வதெனவும் முடிவுசெய்யப்பட்டது.

4. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக முறையான ஒழுங்காற்று நடவடிக்கைகளை உருவாக்கும் பொருட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சட்டதிட்ட வரைமுறைகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிராகவோ முரணாகவோ செயற்படுவோர்மீது ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில் குழுவொன்றை அமைப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை அவசியம் – அல் ஹூசெய்ன்-

Navaneethampillaiyin paathaiyilஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புரியப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கையை சமர்ப்பிக்கும்போது தெரிவிக்கப்படும் விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்தகால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது. புனர்வாழ்வு பணிகளில் இலங்கை அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்மூலம் இலங்கை மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நன்மைகளை ஏற்படுத்தப்படும். இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை நிராகரித்தது மற்றும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன். இலங்கையின் நீண்டகால நலன்களை கருத்தில்கொண்டு சர்வதேச விசாரணைக்குழுவுடனும் விசேட அறிக்கையாளர்களுடனும் ஒத்துழைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பா.ஜ.க.வின் முரளிதர் ராவ் விஜய், ஜொலி, கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களுடன் சந்திப்பு-

02இலங்கைக்கு வருகை தந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தேசிய செயலர் முரளிதர் ராவ் மற்றும் பா.ஜ.கவின் உலக வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், தேசிய நிறைவேற்று உறுப்பினருமான விஜய் ஜொலி ஆகியோர் இன்று மதியம் இந்தியா புறப்படுவதற்கு முன்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவர்களை பட்டாடை போர்த்தி குமரகுருபரன் அவர்கள் வரவேற்றார். இலங்கை அரசியல் அமைப்பில் 13வது திருத்தம் ஒருபொழுதும் அபிலாசைகளுக்கேற்ற அரசியல் தீர்வாக அமைய முடியாது என்பதை பா.ஜ.கவின் முரளிதர் ராவ், விஜய் ஜொலி ஆகியோர் புரிந்து கொண்டிருப்பதும், இங்கு அதை வலியுறுத்தி கூறியிருப்பதும் மகிழ்ச்சியை அளிக்கின்றது ஆனால், அரசியல் தீர்வு விவகாரங்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள கட்சிகளும் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இலங்கை அரசாங்கம் நடைமுறை சாத்தியமற்றதாக்கிவிட்டது. 13வது திருத்தத்தை கூட வட மாகாணத்தில் அமுல்படுத்த முடியாத நிலையும் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றுதான். எனவே இந்தியாவினுடைய கண்காணிப்பும் அழுத்தமும் அவசியமாகிறது, 3ம் தரப்பின் அனுசரணை தேவையாகின்றது. மாகாண சபை என்பது இந்தியாவினுடைய குழந்தை தான். அதை அநாதரவாக நீங்கள் விட்டுவிட முடியாது. 13ன் அமுலாக்கம் என்பதை வேறாகவும் அரசியல் தீர்வென்பதை வேறாகவும் கையாள வேண்டும் என்று கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்கள் இதன்போது எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more