நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் தினம் அனுஷ்டிப்பு-
யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியானது 1929ம் ஆண்டு முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 85 ஆண்டுகளாக கல்விச் சேவை புரிந்து வருகின்றது. அத்துடன் தனது பணியை கல்வியுடன் நிறுத்தி விடாமல், விளையாட்டு, கலை, பண்பாடு மற்றும் இன்னோரன்ன துறைகளிலும் கவனம் செலுத்தி ஆயிரமாயிரம் கல்வியாளர்களை இக் கல்லூரி உருவாக்கியுள்ளது. நேற்று (22.09.2014) திங்கட்கிழமை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களின் 53ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நினைவுதின நிகழ்வின்போது தீபம் ஏற்றுதல், மலர்மலை அணிவித்தல், மலரஞ்சலி என்பன இடம்பெற்றன. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்வி பணிப்பாளர் குணநாதன் அவர்களும், தியாகராஜா குருக்கள் (மணிஐயர்), முத்துக்குமரன், ராசேந்திரன் செல்வராஜா, கிராமசேவையார் சண்முகவடிவேல், நீர்வேலி வடக்கு சுந்திரலிங்கம், பரராஜசிங்கம் உள்ளிட்டோரும் விளக்கேற்றல் மலர்மாலை அணிவித்தலில் பங்குகொண்டிருந்தனர். கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரியின் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவிலானோர் இந்நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் இறுதியில் திரு திருமதி இராஜராஜேஸ்வரி சிவகுமார் தம்பதிகளின் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டது.