சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஒன்று கூடலும், கௌரவிப்பு நிகழ்வும்.

unnamed1 unnamed2 unnamed3 unnamedசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சுவிஸ் சூரிச், சுக் மாநிலத்தில் வதியும், புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும். புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும் நிகழ்வும். கடந்த சனிக்கிழமை (20.09.2014)சூரிச் அடில்ஸ்வில் சிவசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் இராசமாணிக்கம் ரவீந்திரன் அக்குடும்பத்தினரை வரவேற்று ‘புங்குடுதீவு மருத்துவமைனைக்கு அவர்கள் ஆற்றியபணி காலம் அறிந்து ஆற்றிய செயலென’ புகழ்ந்துரைத்தார். ‘அவர்கள் இப்புகழ்ச்சியினை விரும்பவில்லையெனினும், நாங்கள் இச்செயலை வெளிக்கொணர்ந்து காட்டினால் உங்களை முன்மாதிரியாகக் கொண்டு ஏனையோரும் உதவிட முன்வருவார்கள்’ எனக்கூறி தனதுரையை நிறைத்தார்.
செயலாளர் தர்மலிங்கம் தங்கராஜா அவர்கள்; ஒன்றியத்தின் சார்பில் வாழ்த்துப்பாவினையும் வழங்கி கௌரவித்து மனமாரப் பாரட்டுகின்றேன் என்றர். 
பொருளாளர் சத்தியநாதன் ரணமணதாஸ் அவர்கள் தாய் தந்தையருக்கு உதவி செய்வது போல், தாய்பூமியை நினைத்து எம் மக்களுக்கு வழங்கியதென்பது ஒரு புண்ணியமான செயலாகும். அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து பல நற்பணிகளைச் செய்ய வேண்டும். இதுபோன்ற சேவைகளை நாம் ஒவ்வொருவரும் செய்ய முன்வர வேண்டும். காலம் கனிந்திருக்கிறது. ஒருபிராங் தந்தாலும் அது ஊரை வளம்படுத்தும்’ என்று கூறி தனதுரையினை முடித்தார்.
உபதலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் கூறுகையில, ‘உங்களை ஒன்றியம் கௌரவிக்க விரும்புகின்றது’  நமது அன்புக் கோரிக்கையை ஏற்று வருகை தந்தமையையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்’ எனவும், ‘ஒன்றிய ரீதியாக கௌரவிப்பதை விட சபையோரைக் கொண்டு கௌரவிக்க விரும்புகின்றோம். இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும்’ வினயமாகக் கேட்டுக் கொண்டார்.
அந்தவகையில் முதலாவதாக திரு.திருமதி. அருள்நாதன் குடும்பத்தினரை திரு.திருமதி. தனபாலசுப்பிரமணியம் குடும்பத்தினரும், திரு.திருமதி. பெஞ்சமினின் குடும்பத்தினரை ‘ஒன்றியத்தின்’ தலைவர் திரு.இராசமாணிக்கம் ரவீந்திரன் அவர்களும். திரு.திருமதி. லோகநாதன் (ரவி) குடும்பத்தினரை திரு.திருமதி. சந்திரன் குடும்பத்தினரும். திரு.திருமதி. சந்திரகுமார் குடும்பத்தினரை செயலாளர் திரு.த.தங்கராஜா அவர்களும். திரு.திருமதி. ரகுநாதன் மைதிலி குடும்பத்தினரை திரு.திருமதி. இலங்கேஸ் குடும்பத்தினரும். திரு.திருமதி கணேசராஜா குடும்பத்தினரை ‘ஒன்றியத்தின்’ உபதலைவர் திரு.ரஞ்சன் அவர்களும். திரு.திருநாதன் அவர்கள் சார்பில் கலந்து கொண்ட அவர்களின் புதல்வர்களை திரு.திருமதி. கௌதமன் குடும்பத்தினரும். திரு.திருமதி. ராஜேஸ் குடும்பத்தினரை ‘ஒன்றியத்தின்’ பொருளாளர் திரு.ரமணன் அவர்களும். திரு.ரகுநாதன் (அப்பன்) குடும்பத்தினர் சார்பாக (அவர்கள் இலங்கையில் வசிப்பதால்) அவர்களின் பெறாமக்களை திருமதி.தயா ரவீந்திரனும், செல்வி. பிரியா ரவீந்திரனும் அவர்களும், திருமதி.ரஞ்சனும், திருமதி.சிறிகாந்தராஜா அவர்களும்  ‘ஒன்றியத்தின்’ தலைவர் திரு.இராசமாணிக்கம் ரவீந்திரன் அவர்களும்.
மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகள் போர்த்தியும் கேடயங்கள் வழங்கியும் கௌரவித்தனர்.
அத்துடன் ‘புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் -லண்டன்’, ‘புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் -பிரான்ஸ்’ ஆகியவற்றின் வாழ்த்துச் செய்திகளும் வாசித்துக் கையளிக்கப்பட்டன.
‘இவர்களது தாய், தந்தையர்; தனது நண்பர் என்றும், இவர்கள் நீடுழி வாழ்ந்து, இன்னும் பல நற்பணிகளை ஆற்ற, எல்லாம்வல்ல முருகப் பெருமானின் அருள் வேண்டி வாழ்த்துகின்றேன்’ என திரு. தனபாலசுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்துக் கூறினார்.
திரு. பெஞ்சமின் அவர்கள் தமது வாழ்த்தாக ‘அருள்நாதன் பள்ளித் தோழர் என்றும், இவர்களின் சேவையை எண்ணிப் பாராட்டுகின்றேன்’ என்றார்.திரு.லோகநாதன் (ரவி)அவர்கள் ‘அனைவருக்கும் நன்றியும், அன்பான கௌரவிப்புக்கு மகிழ்ச்சியையும் தெரிவிப்தோடு, புங்குடுதீவுக்கும், புங்குடுதீவு மக்களுக்கும், புங்குடுதீவு ஒன்றியத்திற்கும் என்றென்றும் தங்களது உதவி இருக்கும் என உறுதி கூறி’ நிறைவு செய்தார். ‘இவர்கள் எல்லோரும் எமது அழைப்பை ஏற்று குடும்பத்தோடு வந்து சிறப்பித்தமைக்கு’ நன்றி பாராட்டி இந்த கௌரவிப்பு நிகழ்வினை திரு. ரஞ்சன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்.