ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு எதிரொலி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

Tamil_News_254951119423தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிறையில் அடைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு இரவு உணவாக ஒரு களி உருண்டை, 200 கிராம் அரிசி, 200 கிராம் சாம்பார் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறையில் 7402 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

சாலை மறியல்கள், தாக்குதல்கள் தீக்குளிப்பு
_219611763955வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.  இதையடுத்து சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சென்னையில் மறியல் போராட்டங்களில் ஈடுபடும் அதிமுகவினர் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரின் உருவபொம்மைகளை எரித்தனர். சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கல் வீசினர். ஐ.டி. கம்பெனிகள், சுற்றுவட்டாரத்தில் இருந்த டாஸ்மாக் கடைகள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
அதிமுகவினர் சாலை மறியல், உருவ பொம்மைகள் எரிப்பு என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இரு சக்கர வாகனங்கள், கார்களில் வந்தவர்கள் எந்த பாதையில் செல்வது என தெரியாமல் அவதிப்பட்டனர். அனைத்து பேருந்து நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
Tamil_News_145484566689தீர்ப்புக்கு பிறகு ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பஸ்களில் செல்ல பயந்தனர். அதனால் நேற்று பிற்பகலில் சென்னை புறநகர் ரயில்களில் நெரிசல் அதிகமாக இருந்தது. ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சீமா அகர்வால் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினரும் ரயில்களில் சென்றனர். பல்வேறு இடங்களில் ரயில் மறியல் நடந்தது
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை ஒட்டி தமிழகம் முழுதும் அதிமுக தொண்டர்கள் மூன்று பேர் தீக்குளித்தனர்.  இதில் ஒருவர் 60 சதவிகித தீக்காயத்துடன் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  விருகம்பாக்கம் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (45) இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதே போல் தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவிலை சேர்ந்த அதிமுக தொண்டரான ஆட்டோ டிரைவர் ரவிகுமார் (30) தீக்குளிக்க முயற்சி செய்தார். மேலும் போயஸ் கார்டனில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி: காலை முதலே அதிமுக தொண்டர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். இந்நேரம் தேனாம்பேட்டையை சேர்ந்த வண்டு ரவி(45) என்ற ஆட்டோ டிரைவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலின் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.