தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான தீர்ப்பு தொடர்பாக சில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துகள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
உப்பை தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் தவறு செய்தால் தண்டணையை அனுபவித்தே தீரவேண்டும் என்ற இயற்கையின் நியதியை யாராலும் மாற்றமுடியாது. இதற்கு தமிழகத்தின் முதல்ரூயஅp;அமைச்சர் ஜெயலலிதாவும் விதி விலக்கல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு மிகப்பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையட்டி அ.தி.மு.க.வினர் நடத்தும் போன்ற வன்முறை சம்பவங்களை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்தவேண்டும்
சுப்ரமணிய சாமி (பாஜ):
நானே நிரூபித்து உள்ளதை போல உணர்கிறேன். இந்த தீர்ப்பு மூலம், மக்களிடம் இழந்திருக்கும் நம்பகத்தன்மையை ஜெயலலிதாவால் திரும்ப மீட்கவே முடியாது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்
தீர்ப்பை தீர்ப்பாகத்தான் பார்க்கவேண்டும். தீர்ப்பின் மீது விமர்சனம் என்பது இருக்கக்கூடாது. எனவே தமிழகத்தில் இது தொடர்பாக நடைபெறுகிற வன்முறைச்சம்பவங்கள் சாதாரணமாக பொதுமக்களை பாதிக்கும் என்பதை உணர்ந்து அதனை கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமிழக காவல்துறைக்கு உண்டு. எனவே காவல்துறை தனது கடமையை செய்யும் என நம்புகிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
சொத்துக்குவிப்பு வழக்கில் தாமதமாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் நீதி தரம் குறையாமல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. ஊழல் மூலம் சொத்துக்குவிக்க நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை சரியான பாடமாக அமையும். சொத்து வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வினரின் வன்முறையும், அதற்கு துணைபோகும் காவல்துறையினரின் செயல்பாடுகளும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
இத்தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது. இத்தீர்ப்பையட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள், பொதுசொத்துக்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறை சட்டம் ரூயஅp; ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியை பாதுகாக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழக்கில் மிகத்தாமதமாக தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பு நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி எதுவும் செய்யலாம் என்ற எண்ணத்தை உடையவர்கள் எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும் நீதி தன் கடமையைச் செய்யும் என்பதை நிரூபித்திருக்கிறது. வன்முறையில் ஈடுபடுவோரை காவல்துறை கடும் நடவடிக்கையால் தடுக்கவேண்டும்.
ஆனந்த் சர்மா (காங்கிரஸ்):
இந்தியாவுக்கென தனி சட்டங்கள் உள்ளன. இங்குள்ள நீதிமன்றங்கள் அனைத்து விஷயங்களையும் தீர ஆராய்கின்றன. அதைப் போல, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என்பது நீதித்துறையின் நடவடிக்கைகளில் ஒன்றாகும். இத்தகையை நடவடிக்கைகளை காங்கிரஸ் கவனித்து வருகிறது. மற்றபடி, தீர்ப்பு குறித்து பதில் கூறுவதோ விளக்கம் அளிப்பதோ அதிமுக செய்ய வேண்டிய செயலாகும்.
இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு இறுதியான தீர்ப்பல்ல. முதல்வர் எப்பொழுதுமே சட்டத்தைமதிப்பவர், சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்துபவர், தமிழக மக்களின் உரிமைகளைக் காக்க சட்டப் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்துள்ளவர். இதுபோன்ற சோதனைகளையும், வேதனைகளையும் வெற்றிகண்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர். இந்த தீர்ப்பிற்கு மேலாக உயர்நீதிமன்றம் அல்லது, உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்புகிடைப்பதற்கு வழிஇருக்கிறது.
மணிஷ் சிசோடியா (ஆம் ஆத்மி):
எதுவும் இல்லாததற்கு காலதாமதம் என்பது எவ்வளவோ மேல். ஆனாலும், இதுபோன்ற தீர்ப்புகள் எதிர்காலத்தில் விரைவில் வழங்கப்பட வேண்டும். ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கை: இந்த வழக்கில் தீர்ப்பளிக்க 18 ஆண்டுகள் காலதாமதம் ஆகி இருக்கிறது. அந்த இடைப்பட்ட காலத்தில், குற்றம் செய்த பிறகும் ஜெயலலிதா 2 முறை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இதனால், இந்த கால தாமதம் தமிழக மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றுதான் அர்த்தமாகிறது. மேலும், விஐபிக்களையும், சாதாரண பொதுஜனத்தையும் சரிசமமாக கருதும் வகையில் நமது நீதித்துறை இல்லை என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது சட்டநடவடிக்கைகள் மூலம் மேல்முறையீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெற்றிகாண்பது உறுதி.