Header image alt text

புலிகள்மீதான தடை நியாயமானது – இந்தியா-

Indiaஇந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது தடை விதிக்கப்பட்டுள்ளமையை நியாயப்படும் வகையிலான ஆவணங்களை இந்திய அரசாங்கம், இந்த தடை குறித்து ஆராயும் தீர்ப்பாயத்திடம் கையளித்துள்ளது. புலிகள் மீது இந்திய விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நீதிபதி ஜீ.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இந்த தீர்ப்பாயம் நேற்று சென்னையில் தமது அமர்வை நடத்தியிருந்தது. இதன்போது இந்தியாவின் பிரதி மன்றாடியார் நாயகம், புலிகள் தடை செய்யப்பட்டமையை நியாயப்படுத்தும் வகையிலான ஆதாரங்களை தீர்ப்பாயத்தில் முன்வைத்தார். கடந்த 2012ம் ஆண்டு மூன்று புலி உறுப்பினர்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டமை, இந்த தடை நீடிப்புக்கான காரணங்களில் ஒன்றாக இந்திய அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் புலிகளின் சார்பில் வாதாடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொது செயலாளர் வை.கோ. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறினார். அதேநேரம் புலிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இயக்கம் என்றும் இந்திய மத்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியது. இதனை மறுத்துள்ள வை.கோ. புலிகள் இலங்கையில் தமிழீழத்தை கேட்டார்களே தவிர, இந்தியாவில் ஒரு அங்குலத்தையேனும் கேட்டிருக்கவில்லை என்று கூறினார். இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் சென்னையில் இடம்பெறுகின்றது.

ஜனாதிபதி- ஆஸி. பிரதமர் சந்தித்து கலந்துரையாடல்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோர் நியூயோர்க் நகரில் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐ.நா பொதுச்சபையின் 69ஆவது அமர்வின் ஓரமாக இடம்பெற்ற இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது இருதரப்புச் சம்பந்தமான பல விடயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். பொருளாதார, அபிவிருத்தி துறைகளில் இலங்கையின் அண்மைய விருத்திநிலை தொடர்பாகவும், இலங்கையின் நல்லிணக்கப் பணிகள் தொடர்பாகவும் பிரதமருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ விளக்கியுள்ளார். மேலும் நல்லிணக்க ஆணைக்குழு சிறப்பாக செயற்படுவதாகவும் இலங்கையின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பது சிறப்பான ஒரு விடயம் எனவும் டோனி அபோட் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் மனிதக் கள்ளக்கடத்தலை எதிர்கொள்ள இலங்கை வழங்கிய உதவிக்கு மிக நன்றி தெரிவிப்பதாகவும் டோனி அபோட் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க… Read more

விரைவில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை-

untitledநீதிமன்றங்களில் சிங்களம் மற்றும் தமிழில் தயாரிக்கப்படும் குற்றப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை அந்தந்த மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மொழி பெயர்ப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ உறுதியளித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ இன்று யாழ். நீதிமன்றில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடினார். அச்சந்திப்பின்போது, பொலிஸாரினால் தாக்கல்செய்யப்படும் குற்றப்பத்திரங்கள் சிங்களத்தில் இருப்பதனால் மொழிபெயர்ப்பு செய்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குவதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்படும் குற்றப்பத்திரம் மற்றும் ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இவ்வாறு மொழிபெயர்ப்பிற்கான காலம் நீடிப்பதால் வழக்குகளின் கால எல்லைகளும் நீடிக்கப்படுகின்றன எனவும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொலிஸாரினால் தயாரிக்கப்படும் குற்றப்பத்திரங்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்படும் ஆவணங்களை அந்தந்த மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் விரைவில் நீதிமன்றங்களில் நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.

வவுனியா பிரதேச செயலாளர் வீட்டின்மீது கல்வீச்சு-

avuniyavil kadum kaatruவவுனியா பிரதேச செயலாளர் கே.உதயராசாவின் வீட்டின்மீது நேற்றிரவு 9.45மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா உத்யான வீதியில் அமைந்துள்ள பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ இலத்தின்மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலால் பிரதேச செயலருக்கோ எவருக்குமோ பாதிப்பு ஏற்படவில்லை. தாக்குதல் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதேச செயலாளர் கே.உதயராசா தெரிவித்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் சாரதியின்றி பயணித்த பஸ் மோதி வைத்தியர் பலி-

koneswaram aalaya valaakamதிருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென பள்ளத்தை நோக்கி நகர்ந்ததால் பஸ்ஸில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி பஸ்ஸை நிறுத்திவிட்டு சென்றவேளை பஸ் இவ்வாறு பள்ளத்தை நோக்கி நகர்ந்தவேளை அதில் மோதுண்ட ஒருவர் பாதுகாப்பு கொங்றீட் தூணில் நசுங்குண்டு பள்ளத்தில் வீழ்ந்துள்ளார். பின்னர் அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு வழிபாட்டுக்குச் சென்ற சீதுவ – ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தை அடுத்து ஆலயத்தில் கூடியிருந்தவர்கள் பஸ்ஸின் சாரதியை தாக்கியுள்ளனர். காயமடைந்த சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதல்வர் – சட்ட மா அதிபர் சந்திப்பு-

வடமாகாண முதலமைச்சரும், முன்னாள் உயர் நீதிமன்ற நிதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரனை சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ சந்தித்து கலந்துரையாடினார். யாழிற்கு நேற்று சென்ற சட்டமா அதிபர் யாழ். நீதிமன்றிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், பொலிஸார் மற்றும் பல தரப்பினரை சந்தித்தார். இதன்போது, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று மாலை அவரைச் சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க… Read more

நாடு கடத்தல் தொடர்பில் இலங்கையுடன் ரஷ்யா உடன்படிக்கை-

நாடு கடத்தல் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையுடன் நாடு கடத்தல் உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அந்நாட்டு நீதியமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தத் தகவலை ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இவ்வாறானதொரு உடன்படிக்கையை செய்துகொள்ள இலங்கை அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கையின் பின்னர் இரு நாடுகளிலும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பரஸ்பரம் இடமாற்றப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சம் கோரி ஆஸி. செல்வோரை கம்போடியாவுக்கு அனுப்ப முடிவு-

படகுமூலம் தஞ்சம்கோரி அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. படகுகள்மூலம் விசா இல்லாமல் வந்தவர்களையும் நௌரு, மனுஸ், பப்புவாநியூகினியா தீவுகளில் உள்ளவர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்க்கான ஒப்பந்தந்தம் செய்துள்ளதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இந்நடவடிக்கைக்கு ஆஸி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஆனால் கிலாரட் பதவியில் இருந்தபோது புகலிடம் கோரியவர்களை மலேசியா அனுப்பியது போன்ற நடைமுறைதான் இதுவும் என மொரிசன் விளக்கியுள்ளார். இதேவேளை, இந்நடவடிக்கையானது மனித உரிமை மீறலாகும் என மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கம்போடியாவில் அகதிகள் வாழ்வதற்கான சரியான சூழலும் இல்லை என அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க…  Read more

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை-

mahinda_hillary_003ஐக்கிய நாடுகள் சபையின் 69ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று உரை நிகழ்த்தவுள்ளார். இலங்கை நேரப்படி இன்றுபிற்பகல் 6.30ற்கு ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தக் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியிருந்தது. ஐ.நா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளில் அநேகமான நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் இம்முறை பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்றும் பல அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஐ.தே.கட்சி பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச எம்.பி நியமனம்-

UNP pirathi thalaivarakaஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் உதவித் தலைவராக கொழும்பு மாவட்ட எம்.பி ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இளைஞர் முன்னணி தலைவராக அண்மையில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஹரேன் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளராக எரான் விக்ரமரட்ன எம்.பியும், கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளராக ரஞ்சித் மத்துமபண்டார எம்.பியும், கட்சியின் பிரதிப் பொதுச்செயலராக அகிலவிராஜ் காரியவசம் எம்.பியும் நியமிக்கப்பட்டுள்ளதோடு கட்சியின் தேர்தல் செயலாளராக தலதா அதுகோரல எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஒன்று கூடலும், கௌரவிப்பு நிகழ்வும்.

unnamed1 unnamed2 unnamed3 unnamedசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சுவிஸ் சூரிச், சுக் மாநிலத்தில் வதியும், புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும். புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும் நிகழ்வும். கடந்த சனிக்கிழமை (20.09.2014)சூரிச் அடில்ஸ்வில் சிவசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் இராசமாணிக்கம் ரவீந்திரன் அக்குடும்பத்தினரை வரவேற்று ‘புங்குடுதீவு மருத்துவமைனைக்கு அவர்கள் ஆற்றியபணி காலம் அறிந்து ஆற்றிய செயலென’ புகழ்ந்துரைத்தார். ‘அவர்கள் இப்புகழ்ச்சியினை விரும்பவில்லையெனினும், நாங்கள் இச்செயலை வெளிக்கொணர்ந்து காட்டினால் உங்களை முன்மாதிரியாகக் கொண்டு ஏனையோரும் உதவிட முன்வருவார்கள்’ எனக்கூறி தனதுரையை நிறைத்தார்.
செயலாளர் தர்மலிங்கம் தங்கராஜா அவர்கள்; ஒன்றியத்தின் சார்பில் வாழ்த்துப்பாவினையும் வழங்கி கௌரவித்து மனமாரப் பாரட்டுகின்றேன் என்றர்.  Read more

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் தினம் அனுஷ்டிப்பு-

neerveli (5)யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியானது 1929ம் ஆண்டு முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 85 ஆண்டுகளாக கல்விச் சேவை புரிந்து வருகின்றது. அத்துடன் தனது பணியை கல்வியுடன் நிறுத்தி விடாமல், விளையாட்டு, கலை, பண்பாடு மற்றும் இன்னோரன்ன துறைகளிலும் கவனம் செலுத்தி ஆயிரமாயிரம் கல்வியாளர்களை இக் கல்லூரி உருவாக்கியுள்ளது. நேற்று (22.09.2014) திங்கட்கிழமை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களின் 53ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நினைவுதின நிகழ்வின்போது தீபம் ஏற்றுதல், மலர்மலை அணிவித்தல், மலரஞ்சலி என்பன இடம்பெற்றன. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்வி பணிப்பாளர் குணநாதன் அவர்களும், தியாகராஜா குருக்கள் (மணிஐயர்), முத்துக்குமரன், ராசேந்திரன் செல்வராஜா, கிராமசேவையார் சண்முகவடிவேல், நீர்வேலி வடக்கு சுந்திரலிங்கம், பரராஜசிங்கம் உள்ளிட்டோரும் விளக்கேற்றல் மலர்மாலை அணிவித்தலில் பங்குகொண்டிருந்தனர். கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரியின் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவிலானோர் இந்நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் இறுதியில் திரு திருமதி இராஜராஜேஸ்வரி சிவகுமார் தம்பதிகளின் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

neerveli(11)neerveli (10)neerveli  (8)neerveli (7)neerveli (9)neervelineerveli (6)neerveli  (4)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-

thamil thesiya koottamaippu indiaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாரளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்றுமாலை இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநதிகள் கலந்து கொண்டனர். இங்கு, இன்றிருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் முக்கிய சில முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது

1. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமாகவும், சில கட்டுப்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கூட்டமைப்பை கொண்டு நடத்த வேண்டியிருப்பதனால் இவற்றை உள்ளடக்கிய யாப்பொன்று தயாரிக்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

2. ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் தேசிய மாநாட்டின் தீர்மானங்களுக்கேற்ப தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பல்வேறுபட்ட மக்கள் அமைப்புக்களை உள்ளடக்கி தமிழ் தேசிய சபையொன்றை நிறுவுவதெனவும் முடிவுசெய்யப்பட்டது

3. வடக்கு மாகாணசபை தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், அதற்கான ஆலோசனைகளை பரிமாறிக்கொள்வதற்குமாக மாதாந்த கூட்டமொன்றை முதலமைச்சருடன் இணைந்து மேற்கொள்வதெனவும் முடிவுசெய்யப்பட்டது.

4. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக முறையான ஒழுங்காற்று நடவடிக்கைகளை உருவாக்கும் பொருட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சட்டதிட்ட வரைமுறைகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிராகவோ முரணாகவோ செயற்படுவோர்மீது ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில் குழுவொன்றை அமைப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை அவசியம் – அல் ஹூசெய்ன்-

Navaneethampillaiyin paathaiyilஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புரியப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கையை சமர்ப்பிக்கும்போது தெரிவிக்கப்படும் விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்தகால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது. புனர்வாழ்வு பணிகளில் இலங்கை அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்மூலம் இலங்கை மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நன்மைகளை ஏற்படுத்தப்படும். இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை நிராகரித்தது மற்றும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன். இலங்கையின் நீண்டகால நலன்களை கருத்தில்கொண்டு சர்வதேச விசாரணைக்குழுவுடனும் விசேட அறிக்கையாளர்களுடனும் ஒத்துழைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பா.ஜ.க.வின் முரளிதர் ராவ் விஜய், ஜொலி, கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களுடன் சந்திப்பு-

02இலங்கைக்கு வருகை தந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தேசிய செயலர் முரளிதர் ராவ் மற்றும் பா.ஜ.கவின் உலக வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், தேசிய நிறைவேற்று உறுப்பினருமான விஜய் ஜொலி ஆகியோர் இன்று மதியம் இந்தியா புறப்படுவதற்கு முன்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவர்களை பட்டாடை போர்த்தி குமரகுருபரன் அவர்கள் வரவேற்றார். இலங்கை அரசியல் அமைப்பில் 13வது திருத்தம் ஒருபொழுதும் அபிலாசைகளுக்கேற்ற அரசியல் தீர்வாக அமைய முடியாது என்பதை பா.ஜ.கவின் முரளிதர் ராவ், விஜய் ஜொலி ஆகியோர் புரிந்து கொண்டிருப்பதும், இங்கு அதை வலியுறுத்தி கூறியிருப்பதும் மகிழ்ச்சியை அளிக்கின்றது ஆனால், அரசியல் தீர்வு விவகாரங்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள கட்சிகளும் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இலங்கை அரசாங்கம் நடைமுறை சாத்தியமற்றதாக்கிவிட்டது. 13வது திருத்தத்தை கூட வட மாகாணத்தில் அமுல்படுத்த முடியாத நிலையும் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றுதான். எனவே இந்தியாவினுடைய கண்காணிப்பும் அழுத்தமும் அவசியமாகிறது, 3ம் தரப்பின் அனுசரணை தேவையாகின்றது. மாகாண சபை என்பது இந்தியாவினுடைய குழந்தை தான். அதை அநாதரவாக நீங்கள் விட்டுவிட முடியாது. 13ன் அமுலாக்கம் என்பதை வேறாகவும் அரசியல் தீர்வென்பதை வேறாகவும் கையாள வேண்டும் என்று கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்கள் இதன்போது எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவ தயார் – பிரித்தானியா-

imagesCA5L8U3Dஇலங்கையில் சமாதானம் காரணமாக பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் சமாதானக்கு தொடர்ந்தும் உதவும் என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது 32வது சர்வதேச சமாதான தினம் நேற்று நினைவு கூறப்பட்டமையை முன்னிட்டு பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவியஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது இலங்கையில் சமாதானம் அரசியல் பங்கேற்றல் மற்றும் பொருளதார அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

காணாமல் போனோர் தொடர்பில் 19,452 முறைப்பாடுகள் பதிவு-

kaanaamat ponorகாணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கிளிநொச்சியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உள்ளது. எதிர்வரும் 27ம் திகதிமுதல் 4ம் திகதிவரை விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். 27ம் திகதி மற்றும் 28ம் திகதிகளில் முழங்காவில் பிரதேசத்தில் தமிழ் மகா வித்தியாலயத்தில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. 29ம் மற்றும் 30ம் திகதிகளில் பூநகரி பிரதேச செயலகத்தில் விசாரணைகள் நடைபெறவுள்ளன. கடந்தமுறை நடைபெற்ற விசாரணைகளில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியாதுபோன ஸ்கந்தபுரம் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் 30ம் திகதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு 7வது தடவையாக தனது கூட்டத்தை நடத்தவுள்ளதுடன் ஆணைக்குழுவிடம் இதுவரை 19,452 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் சுமார் ஆயிரம் முறைப்பாடுகள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

யாழ்.நகரை வந்தடைந்த யாழ்;தேவி-

unnamedபளை – யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு யாழ். தேவி வந்தடைந்துள்ளது. யாழ் தேவியின் வருகையை காண்பதற்காக யாழ். குடா நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். ரயில் சேவை ஆரம்பமாகியதை அடுத்து இரு மருங்கிலும் நின்று பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.