புன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி சிறார்களின் விளையாட்டுப் போட்டி-

யாழ். புன்னாலைக்கட்டுவன் கலைவாணி சனசமூக நிலையமும், கலைவாணி முன்பள்ளி மாணவர் சங்கமும் இணைந்து நடாத்திய கலைவாணி முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டுப் போட்டி இன்று (04.10.2014) சனிக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு எஸ். நேசராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் நிகழ்வில் பங்குகொள்ளாமையால் வட மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். புன்னாலைக்கட்டுவன் கிராம சேவையாளர் திரு. பரமநாதன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன், நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. தியாகராஜா பிரகாஸ், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் திரு வசந்தகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். வட மாகாணசபை உறுப்பினர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் சார்பில் அவரது செய்தியினை புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திரு லோகன் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாலை 6மணியளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

20141004_16564620141004_17034020141004_17084820141004_17223820141004_17213220141004_160055