ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு-

janathipathi anaikuluvin pathivi kaalamகாணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவின் சட்டத்தின் 393 ஆம் சரத்தின் 4ஆம் பிரிவின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய 2013 ஆகஸ்ட் 15ஆம் திகதி 1855ஃ19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கான காலப்பகுதி 1990ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை என வரையறை செய்யப்பட்டிருந்தது. எனினும் குறித்த வரையறை இந்திய இராணுவ ஆட்சிக்காலம் 1983ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்குமாகாணத்திலுமாக 7தடவைகள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் ஆரம்பமாகி இவ்வாண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் ஒரு வருடத்தை ஆணைக்குழு அடைந்திருந்த நிலையில் அதன்கால எல்லை நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆணைக்குழுவின் செயற்பாட்டு காலத்தை 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆகஸ்ட் 15ம்திகதி ஸ்தாபிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவிற்கு இது வரையில் பொதுமக்களிடமிருந்து 14,471 முறைப்பாடுகளும் பாதுகாப்பு படையினர் தொடர்பான 5,000 முறைப்பாடுகளுமாக மொத்தம் 19,471 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 299பேரும், யாழ்ப்பாணத்தில் 180பேரும், மட்டக்களப்பில் 327பேரும், முல்லைத்தீவில் 129பேரும், மன்னாரில் 153பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 492விண்ணப்பங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து 804விண்ணப்பங்களும், மட்டக்களப்பில் இருந்து 1503விண்ணப்பங்களும், மன்னாரில் 157விண்ணப்பங்களும் முல்லைத்தீவில் இருந்து 398 புதிய விண்ணப்பங்களும் கடந்த 7 அமர்வுகளில் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஆணைக்குழுவினால் இரண்டு தடவைகள் அமர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 8ஆவது அமர்வு வவுனியா அல்லது முல்லைத்தீவு மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ளது. எனினும் தீர்க்கமான முடிவுகள் இன்னும் எட்டவில்லை என்று ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.