அமெரிக்க எமி விருதுக்கு ‘மோதல் தவிர்ப்பு வலயம்’ பரிந்துரை-

america emi viruthukkuஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மோதல் தவிர்ப்பு வலயம் விவரணப்படம் அமெரிக்காவின் உயர் தொலைக்காட்சி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விவரணப்படம் நேற்று 2014ஆம் ஆண்டின் சர்வதேச ´எமி´ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விருதை பெறும் விவரணப்படம் குறித்த அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி நியூயோர்க்கில் வெளியிடப்படவுள்ளது. மனித குலத்துக்கு எதிரான கொடுமைகளை, போர்க்குற்றங்களை சாட்சியங்களுடன் இந்த விவரணப்படம் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக எம்மி விருதுகளை அமெரிக்கா வழங்கி வருகின்றது. 10 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுப் பட்டியலில் சிறந்த ஆவணப் படங்களுக்கான பிரிவில் ´மோதல் தவிர்ப்பு வலயம் விவரணப்படமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி-

சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறை ஊழியர்களுக்கு இதுவரை தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை எனவும், இதனால் தூதர் பிரதேசங்களில் இருந்து சேவைக்குவரும் சிறை ஊழியர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். அதனால் சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் அவரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க… Read more