சித்தன்கேணிபாலர்பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு-
கடந்த 12.10..2014 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். சித்தன்கேணி பாலர் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு பாலர் பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியர் செல்வி லீலாவதி மாரிமுத்து தலைமையில் இடம்பெற்றது இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரும் இவ் ஆரம்ப பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். சிறார்களின் மகிழ்வான வரவேற்புடன் இவ் நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து இவ் பாடசாலையின் பழைய மாணவரும் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவருமாகிய சபா.வாசுதேவக் குருக்கள் ஆசியுரையினை வழங்கினார். இவ் நிகழ்வில் கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரும் இவ் ஆரம்ப பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று எமது சமுதாயத்தில் முன் பள்ளிகள் காத்திரமான பங்கை வகிக்கின்றது. வளரும் சிறார்களை உரிய முறையில் வளர்த்தெடுக்கவேண்டியது மிக முக்கிய கடமையாக காணப்படுகின்றது. இந்த வகையில் இவ் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எமது முன்பள்ளிகள் மிக முக்கிய பங்கினை வகித்து வருகின்றன. இன்றைய இவ் மழலைகளே நாளைய எமது எதிர்காலத்தினை தீர்மானிக்கும் தலைமுறைகள் ஆவர். அம்மா என்ற வாhத்தை எழுத்தில் எழுதக் கற்றுக் கொள்வது இவ் இடத்திலேயே ஆகும். இந்த வகையில் இவ் முன்பள்ளி பழைய மாணவி என்ற வகையில் மகிழ்வடைகின்றேன் பெருமை அடைகின்றேன். இவ் முன்பள்ளி ஆசிரியர்கள் வெறுமனே ஆசிரியர்களாக மட்டும் அல்லாது தாயாகவும் நல்லதோர் அரவணைப்பாளராகவும் செயற்பட வேண்டியநிலை காணப்படுகின்றது. இவ் ஆசிரியப் பணி மிக காத்திரமானது. இவ்வாறான பணி செய்யும் ஆசிரியர்களின் பணியினை போற்றுகின்றேன் வாழ்த்துகின்றேன். இவ்வாறன மகத்துவமான பணியினை மேற்கொள்ளும் ஆசியர்களின் நினைவுகள் என்றும் மாணவர்கள் மனதில் இருந்து அகலாத ஒன்றாகவே அமைந்து விடும். இவ் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் முனனேற்றத்திற்காக பலவேறு வளங்களில் இருந்தும் நிதியினை பெற்று வழங்கியுள்ளேன். இப் பணி எதிர்;காலத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். இதற்கும் மேலாக இவ்வாறான படசாலைகளின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பும் மிக முக்கிய ஒன்றாகவே உள்ளது. ஆரம்பக் கல்வியே மாணவர்களின் பல்துறை சார் ஆற்றல்களையும் மேம்படுத்தும் என்பதை எல்லோரும் அறிவர். இவ்வாறான செயற்பாடுகளில் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. இன்று எமது பண்பாட்டினையும் கலாச்சரத்தையும் சிதைப்பதற்கும் சீரழிப்பதற்கும் பலர் பல கோணங்களில் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ் நிலைமையில் மாற்றம் ஏற்படுத்த இவ் முன்பள்ளிப் பராயத்திலிருந்து செயலாற்றுவது மிக முக்கியமான ஒன்றாகும். வருங்கால எமது சமூதாயத்தை ஒழுக்கமுள்ள எமது பண்பாட்டையும் கலாச்சரத்தினையும் கடைப்பிடிக்கக்கூடிய சமூகமாக மாற்றுவதற்கு ஒன்றுபட்டு அனைவரும் செயலாற்ற வேணடும் என குறிப்பிட்டார். இவ் நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் திருமதி நிருபா.காசிநாதன், மற்றும் பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இளைப்பறிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.