வலிமேற்கு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர்தின நிகழ்வு-
கடந்த 11.10.2014 சனிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சர மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர் தின நிகழ்வுகள் வலி மேற்கு பிரதேச முன்பள்ளி இணைப்பாளர் நிரஞ்சனா ஆசிரியை தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் ஏராளமான முன்பள்ளி ஆசிரியைகள் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் தலைமை உரையின்போது பிரதேச முன்பள்ளிகள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதாகவும் தெரிவித்த தலைவர் அவர்கள், வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் இவ் மண்டபத்தை முன்பள்ளி நிகழ்வுகளுக்கு வழங்கியமை தொடர்பில் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எமது முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி ஒவ்வொரு ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தி சான்றிதழ் வழங்கியதோடு மட்டும் அல்லாமல் இவ் விழாவை நிகழ்த்துவதற்கு எம்மிடம் போதுமான வசதி காணப்படவில்லை என குறிப்பிட்போது தனது மாதாந்த ஊதியத்தினை வழங்கி எமது விழாவை நடாத்துவதற்கு போதுமான உதவியை மேற்கொண்டுள்ளார். இந்த வகையில் அவரது செயற்பாடுகள் பாராட்டத்தக்கது பொற்றத்தக்கது என குறிப்பிட்டார். தொடர்ந்து இவ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது. எமது பிரதேச முன்பள்ளிகளின் சேவை என்பது அளப்பரிய ஒன்றாககும் நான் பதவிக்கு வந்த நாள் முதலாக முன்பள்ளிகளின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் அதிக சிரத்தை எடுத்து வருவது அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்கு தெரிந்த விடயம் ஆகும். மனித வாழ்வின் ஆரம்பப் பருவத்தினை தீர்மானிக்ககூடிய ஒன்றாக இவ் முன்பள்ளிகள் அமைவு பெற்றுள்ளமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். எமது பிரதேச முன்பள்ளிகள் ஒவ் வொன்றுக்கும் சென்றுள்ளேன் எனனால் இயன்றதை மேற்கொண்டுள்ளேன். இதற்கும் மேலாக அவர்களின் பல நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளேன். ஒரு தாயாக ஆசிரியராக அவர்கள் முன்பள்ளிகளின் முன்னேற்றத்தில் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சிகளையும் நான் நன்கு அறிவேன் இதற்கும் மேலாக ஒரு பெண்னாக இவ் ஆசிரியர்களின் வேதனையை நான் நன்கு அறிவேன் இதேவேளை இவ் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் பல பிரச்சனைகள் காணப்படுவதனை நான் நன்கு அறிவேன். இவற்றில் உங்கள் கொடுப்பணவு தொடர்பான பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் திர்வு கிடைக்கும் என்றே கருதுகின்றேன். உங்கள் பணியினை என்றும் போற்றுகின்றேன் வாழ்த்துகின்றேன் என குறிப்பிட்டார்.