Header image alt text

குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய பரிசளிப்பு விழா, சரஸ்வதி சிலை திறந்துவைப்பு-

kuppilan school 17.10 (1)யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், சரஸ்வதி சிலை திறப்பு விழாவும் நேற்றுமாலை (17.10.2014) நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. தம்பிராஜா தவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வைத்தியக்கலாநிதி கணேசலிங்கம் சுஜந்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. தில்லைநாதன் தர்மலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.  நிகழ்வில் ஆசியுரையினை சைவாகம ஜோதி சி.கிருஷ்ணசாமி குருக்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சரஸ்வதி சிலை திறப்புவிழா இடம்பெற்றது. சிங்கப்பூரில் வசிக்கின்ற குப்பிளான் விக்னேஸ்வரா வித்தியாலய பழைய மாணவர் திரு. கிருஷ்ணர் அவர்கள் இப்பாடசாலையில் சரஸ்வதி சிலையினைக் கட்டுவதற்கு அனுசரணை வழங்கி உதவியிருந்தார்.  புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சரஸ்வதி சிலையினை திறந்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து பிள்ளைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது. அத்துடன் சிங்கப்பூரில் வசிக்கும் திரு. கிருஷ்ணன் அவர்களின் உதவியின்கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அப்பகுதியைச் சேர்ந்த 200பேருக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

kuppilan school 17.10 (1) kuppilan school 17.10 (2) kuppilan school 17.10 (4) kuppilan school 17.10 (5) kuppilan school 17.10 (7) kuppilan school 17.10 (8)

வடக்கு தொடரூந்து சேவையில் பாரிய லாபம்-

yaldeviவடக்கு தொடரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 4 நாட்களில் 30 லட்சம் ரூபாவரை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் வணிகத்துறை பிரதானி ஜீ.டபிளியு. சிரிரகுமார தெரிவித்துள்ளார். புதிதாக பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை தொடரூந்து சேவைகள் விஸ்தரிக்கப்பட்டதன் பின்னர் அதிகளவிலான பயணிகள் தொடரூந்து சேவையை நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குளிரூட்டப்பட்ட நகரங்களுக்கு இடையிலான தொடரூந்து சேவை பெட்டிகளில் மாத்திரம் பயணித்தவர்களிடம் இருந்து சராசரியாக 5 லட்சம் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. இதுதவிர, சாதாரண சேவைகளின் போதும் அதிகளவான பயணிகள் தொடரூந்தை பயன்படுத்துவதாக வணிகத்துறை பிரதானி ஜீ.டபிளியு. சிரிரகுமார குறிப்பிட்டுள்ளார். எனினும், அதிகளவு லாபம் ஈட்டப்பட்டபோதிலும், அவற்றில் ஒரு தொகை பராமரிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more