ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந் கடிதம் 

imagesCA65KGRIசொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களது உடல் ஆரோக்கியத்துக்கும் மன அமைதிக்கும் எப்போதும் வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்’ என ரஜினி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கைதால் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலை தங்களுக்கு சாதகமாக்கி, ரஜினியை பா.ஜ.க.வுக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதை அண்மைய சந்திப்புகள் உறுதி செய்து வருகின்றன. இந்நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு ரஜினி கடிதம் எழுதி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட ரஜினி கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஜெயலலிதாவுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அண்மைய காலமாக நடந்தவை அனைத்தும் வருத்தத்துக்கு உரியது என்றும், ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்லா பிரச்சினைகளும் இடர்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வந்து, மீண்டும் முறைப்படி நிர்வாகத்தில் ஈடுபடுவீர்கள் என அக்கடிதத்தில் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பிரஜைகள் வடக்கு செல்ல வீசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.

thamil thesiya koottamaippu indiaவெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கிற்கு பயணம் செய்யும் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இந்த உத்தரவிற்கு எதிராக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக இலங்கைத் தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது அடிப்படை உரிமை மீறலாகும். பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாகவே வாழ்ந்து வருவதாகவும். இவ்வாறான இலங்கைத் தமிழர்கள் வடக்கிற்கு செல்லும் போது பாரிய நெருக்கடிகளையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிடும். பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் தங்களது பூர்வீக நிலங்களுக்கு செல்ல இவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென நிபந்தனை விதிப்பது, அவர்களை அசௌகரியத்தில் ஆழ்த்தும். குறிப்பாக சொந்தங்களை பார்வையிடுவதற்கு, திருமண வைபவங்களில் பங்கேற்பதற்கு, வேறும் நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு இவ்வாறு தமிழ் மக்கள் வடக்கிற்கு பயணம் செய்வதற்கு. இனி வரும் காலங்களில் குறித்த தமிழர்கள் இரண்டு வீசாக்ளைப் பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் செய்ய ஒரு வீசாவையும், இலங்கையிலிருந்து தமது பூர்வீக நிலமான வடக்கிற்கு பயணம் செய்ய மற்றுமொரு வீசாவையும் பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாகதவும். இந்த நடவடிககையானது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தடையை இரத்துச் செய்தமை குறித்து மிக உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம்.

புltte_eu_001லிகளின் தடையை இரத்துச் செய்தமை குறித்து மிக உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் போது அவை அந்த நாட்டின் சட்டத்திற்க்குட்பட்டதாகவும், அதனை பின்பற்றுவதாகவும் அமையவேண்டும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டேலி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை இரத்துச் செய்தமை தொடர்பாக மிக உன்னிப்பாக ஆராய்ந்துவருகிறோம், சகலரினது கருத்துக்களையும் செவிமடுத்த பின்னரே பதிலளிப்போம், இந்த தருணத்தில் எதனையும் செய்ய முடியாது, இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சாதராணமான விடயம்,ஐரோப்பிய ஒன்றியம் ஜனநாய கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகின்றது, நீதித்துறையும் அதன் செயற்பாடுகளும் சட்டத்தின் அடிப்படையிலேயே  அமைந்திருக்கும், ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாதத்தை எதிர்க்கின்றது, அதுவே அதன் நிகழ்ச்சி நிரலில் முக்கியமாக உள்ளது, இதற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுக்கிறோம்,பயங்கரவாதத்திற்க்கு எதிராகபோராடுவதற்க்கு அப்பால் அதற்கு எதிராக நாளாந்தம் நடவடிக்கைகளை எடுத்தவண்ணமுள்ளோம், ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்க்குட்பட்டவையே , நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஆராய்ந்துவருகிறோம், அதனை தொடர்ந்து செய்வோம், இலங்கை, பிரிட்டன் அல்லதுவேறு எந்த நாடாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும், என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும் அது சட்டத்திற்க்குட்பட்டதாக ,அதனi பின்பற்றுவதாக அமையவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

யாழ் கொழும்பு கடுகதி ரயிலில் இருக்கை தட்டுப்பாடு

images1யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் பயணிப்பதற்கு அதிகளவானவர்கள் முன்வருவதால் அந்த ரயிலில் இருக்கை  தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் கூறினார். குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலுக்கான முற்பதிவுகள், மொபிட்டல் தொலைபேசி வலைப்பினூடாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் இருக்கைகள் அனைத்தும் முன்பாகவே முற்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இந்நிலையில், முற்பதிவுகளை மேற்கொள்ளாமல் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் பயணிப்பதற்காக யாழ். புகையிரத நிலையத்துக்கு வருபவர்கள், இருக்கைகள் இன்மையால் தினமும் 250பேர் வரையிலானோர் திரும்பிச் செல்கின்றனர் என்று அவர் கூறினார். இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் ஏனைய ரயில்களில் முற்பதிவுகளை மேற்கொள்வதற்கான முற்பதிவு முறைமைகள் இன்னமும் சீராக இயங்கத் தொடங்கவில்லை. இதனால், முற்பதிவு செய்ய வருபவர்களை காத்திருக்க வைக்கவேண்டிய அதேவேளை, முற்பதிவுகள் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதே நேரம் யாழ் கொழும்பு ரயில் சேவையில் நான்கு நாட்களில் 18இலட்சம் ரூபா வருமானம்