Header image alt text

யாழ் விடத்தல்பளை கமலாசினி வித்தியாலய பரிசளிப்பு விழா-

1யாழ். விடத்தல்பளை கமலாசினி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா-2014 நேற்று 20.10.2014 திங்கட்கிழமை காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. நாகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சர்வேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக முன்னைநாள் ஓய்வு நிலை அதிபர் திரு. கதிரித்தம்பி மற்றும் வரணி, வைத்திய அதிகாரி உயர்திரு. வீ. ஆறுமுகம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்ட குழாய்க்கிணறும், அதற்குரிய குடிநீர்க் குழாய் கட்டமைப்பும் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.  தொடர்ந்து பாடசாலைப் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

தீபாவளி திருநாளில் உயிர்களை வதைப்பதை நிறுத்தி புனித தன்மையை கடைப்பிடியுங்கள் இந்துக்களிடம் சைவ மகா சபை கோரியுள்ளது.

saivaதீபாவளி தினத்தன்று சில இடங்களில் ஆடு, மாடுகளை கொன்று அதன் ஊணை புசிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த செயற்பாடுகளை நிறுத்தி தீபாவளியின் அர்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். சிவ விரதங்களில் முக்கியமான விரதமாகிய கேதார கௌரி விரத முடிவு நாளில் வருகின்ற தீபாவளி தினத்தன்று இந்துக்கள் புனிதத் தன்மையை கடைப்பிடிப்பது முக்கியமானது. அதை விடுத்து அந்த தினத்தன்று உயிர்களை வதைத்து அதன் ஊணை புசிப்பது பாவமான காரியமாகும். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதானது புனிதமான கேதார கௌரி விரதத்திற்கு மாசு கற்பிப்பதற்கு ஒப்பானது. தீபாவளி என்பது அரக்க குணத்தை அழித்த நாள். அந்த நாளில் நாங்கள் எங்களிடம் அரக்க குணத்தை வரவழைத்து பிற உயிர்களை வதைப்பது எமது சமயத்திற்கு ஏற்புடையதல்ல. எனவே, இந்த நாளில் தன்னுயிர் போல மண்ணுயிர்களையும் நேசிக்கும் இயல்பை நாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தீபாவளி தினத்தன்று சிலர் ஆடு, மாடுகளை அறுத்து அதன் ஊனை புசிக்கின்ற செயற்பாடுகள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அவர்கள் இன்று தீபாவளியின் அர்த்தத்தையும் கேதார கௌரி விரதத்தின் மகிமையையும் உணர்ந்து குறித்த விரதத்தை அனுஷ்டித்து வருகின்றனர். இதேபோன்று ஏனைய மக்களும் இதனை கடைப்பிடிக்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவநீதம்பிள்ளை கடித வழக்கு விவகாரம் சட்ட மா அதிபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ்

navipillaiyin visaaranaiஐக்கிய நாடுகள் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் எழுதிய வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சட்ட மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. சட்டமா அதிபரை, ஒக்டோபர் 30ஆம் திகதி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு எதிராக தண்டனை சட்டக்கோவையை செயற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கும் சட்டமா அதிபருக்கும் நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கையிலுள்ள இனக்குழுக்களுக்கிடையில் குறிப்பாக சிங்களவர் மற்றும் தமிழர் இடையில் காழ்ப்புணர்வு, முரண்பாடு மற்றும் அமைதியின்மை என்பவற்றை தோற்றுவிக்கக்கூடிய கூற்றுக்கள் இந்த கடிதத்தில் உள்ளதென மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். பொலிஸ் மா அதிபரும் சட்டமா அதிபரும் இந்த மாகாண சபை உறுப்பினர்கள் மீது விசாரணை நடத்தவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டுள்ளார். முறைப்பாட்டாளர்கள் பொலிஸ் மா அதிபரும் சட்டமா அதிபரும் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீது, அவரது அலுவலகம், விசாரணை நடத்த வேண்டும் எனவும் அந்த விசாரணையின் போது யுத்தம் தொடருவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களையும் கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும் கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளைச் சேர்ந்த 33 உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளைக்கு, ஓகஸ்ட் முதல் வாரத்தில் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தனர். தமிழ் மக்களுக்கு எதிராக சகல அட்டூழியங்களையும் ஆராய்ந்து இனவொழிப்பு இடம்பெற்றதா? என ஆராய வேண்டும் என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் விசாரணை அணியினரை இந்த 33பேரும் கடிதம் மூலம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிரணியில் பங்களிப்போம், பொது வேட்பாளர் தொடர்பில் முடிவில்லை மனோ கணேசன்,

இது தொடர்பான ஊடக அறிக்கையில்—

imagesCAXROG66கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான சந்திப்பில் பல்வேறு பரஸ்பர சமகால முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் உரையாடினோம். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், நமது ஜனநாயக மக்கள் முன்னணி எதிரணியில் பங்களிக்கும் என்றாலும் பொது வேட்பாளர் தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னமும் எந்த ஒரு நிலைபாட்டையும் நாம் எடுக்கவில்லை எனவும், அது தொடர்பாக  முடிவெடுக்கும் முன்னர் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை சந்திக்க எண்ணியுள்ளதாக நான் விக்னேஸ்வரனிடம் தெரிவித்தேன். அதுபோலவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை எனவும், அது தொடர்பில், ஊடகங்களில் பல கருத்துகள் கூறப்பட்டாலும்கூட,  ஒரு அவசரப்படாத போக்கையே தமது கட்சி தலைமை முன்னெடுப்பதாக விக்னேஸ்வரன் என்னிடம் தெரிவித்தார்.  அத்தகைய ஒரு முடிவெடுக்கும் வேளையில், வடமாகாண முதலமைச்சர் என்ற அடிப்படையில் எதிர்நோக்கும் பாரிய சிக்கல்களை தமது கட்சி கணக்கில் எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார். Read more