சுன்னாகம் கந்தரோடையில் இனந்தெரியாத குழுவொன்றினால் ஒரு குடும்பம் தாக்கதலுக்கு உள்ளாகியுள்ளது.

imagesசுன்னாகம் கந்தரோடைப்பகுதில் புதன் இரவு வீடபுகுந்த குழவொன்று மூன்று பிள்ளைகளின் தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோரை தாக்கியுள்ளது. இன்னும் இரு சிறு பெண் பிள்ளைகள் இருந்தபோதும் அவர்கள் பயத்தில் ஒளித்துக் கொண்டத்தில் தப்பிவிட்டார்கள். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தந்தையை யாழ்வைத்திய சாலைக்கு இடம்மாற்றியுள்ளனர். தாக்கியவர்கள் தலைக்கவசம் (கெல்மெற்) அணிந்து வாள் இரும்புக்கம்பி மரப்பொல்லுகள் கொண்டு அகோரமாகத் தாக்கியதில் தந்தை ஆபத்தான நிலையில் உள்ளார். தாயும் மகனும் படுகாயம் அடைந்தள்ளனர்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற வடமாகாணசபை உறுப்பினரும் புளொட் தலைவருமான சித்தார்த்தன் அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று காயப்பட்டவர்களை பார்வையிட்டு நடந்தவற்வை கேட்டறிந்து உடன் பொலிசாருடன் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்டவர்களை உடன் கைது செய்யுமாறு கேட்டுள்ளதுடன். மேலும் உரிய அதிகாரிளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்
மேலும் கிடைத்த செய்திகளின் படி சிலதினங்களுக்கு முன்பு உடுவில்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் சண்டை நடைபெற்றதாகவும். அப்போது தாக்கப்பட்டவர்களின் மகனும் அவ்விடத்தில் நின்றதாகவும் ஆனால் அவருக்கும் சண்டைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
இதே இச்சண்டையில் ஈடுபட்ட குழுவொன்று இவர்களின் வீட்டுக்கு இருதினங்களுக்கு முன்பு இரவு போதையில் வந்து கத்திவிட்டு சென்றதாகவும். அவ்வீட்டுக்காரர் வீடு தேடிவந்தவர்களை இனம் கண்டுகொண்டதால் மறுநாள் அவர்களின் வீடுகளுக்கு ஏன் அப்படி செய்தீர்கள் எனக் கேட்டபொழுது தாம் தெரியாமல் போதையில் தவறு செய்து விட்டோம் பிரச்சனை ஒன்றும் இல்லை என மன்னிப்பு கேட்டதாகவும். இருதினங்களின் பின் இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேநேரம் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தின் மகனை அழைத்துக் கொண்டு வீடு தேடி வந்தவர்களின் வீடுகளுக் சென்றுள்ளனர் ஆனால் அவர்கள் யாரும் அங்கு இல்லை. இதுவரை பொலிசார் சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை.
Jaffna-Boys-062009 யுத்தத்தின் பின் யாழ் நிலமை தலைகீழாக மாறிவிட்டது. கட்டிவைத்த நாய்களை அவிழ்த்து விட்ட நிலமைபோல் ஆகிவிட்டது தற்போதய யாழ்ப்பாண இளம் சமூகத்தின் நிலை. ஆவா குறூப், பாவா குறூப், சங்கிமங்கி குறூப் என பல ரவுடிக் கூட்டங்கள் உருவாகி வடபகுதி மக்களின் நிம்மதியைச் சீரழித்துக் கொண்டு இருப்பதாகவும்.
இளம் பெண்கள் சுதந்திரமாக செல்லமுடியாத நிலை காணப்படுவதாகவும். ரவுடிகள் எனப்படுவோர் அதிகம் நடமாடும் பகுதிகளாக தனியார் கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பேரூந்துநிலையங்கள், கோவில்கள் போன்ற இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்றும்.
யாழில் உள்ள பொலிசாரும் இந்த ரவுடிகளுக்கு துணைபோவதாக மக்கள் சந்தேகப்படுகின்றார்கள். அத்துடன் சில பொலிஸ் நிலையங்கள் ரவுடிகளை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தாலும் அங்கு வரும் சட்டத்தரணிகளால் அவர்களுக்கு சுலபமான முறையில் பிணை கிடைத்து வெளியே வந்து மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபடுவதாகவும்.
யாழில் உள்ள சட்டத்தரணிகள் பணத்தை மட்டும் நோக்காக கொண்டு நமது சமூகம் சீரழிக்கப்படுவதற்கு கோடரிக்காம்புகளாய் இருக்கக் கூடாது. இவ்வாறானவர்களுக்காக வாதிடுவதை தவிர்த்தல் வேண்டும்.  முடிந்தால் தவறானவர்களை திருத்த முயற்சிக்க வேண்டும். இயக்கங்கள் இருந்தபோது இப்படிப்பட்ட தீய செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவும் இப்போது இப்படி ஆகிவிட்டது எனவும் அப்போது பல அசௌகரியங்கள் இருந்தாலும் இதை விட அது பறவாய் இல்லை போல் என மக்கள் நினைப்பதாகவும் இதேநேரம் தெளிவில்லாமல் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் அதைவிரும்பியவர்கள இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஒருசாரார் கருதுகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.