ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு கூட்டமைப்பு பங்கேற்பு
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசாரமொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும். இந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த கைலாகு செய்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாங்கறியாதவனின் திட்டம் எப்படி: ஜனாதிபதி
நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியதுடன் மக்களின் மனங்களை கவரும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை 1.30க்கு கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததும். சம்பிரதாயபூர்வமான வரவு-செலவுத்திட்ட பெட்டியை இம்முறையும் எடுத்துவராத நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோவையுடன் அவைக்குள் பிரவேசித்தார். Read more