வடபகுதி பயணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய தொலைபேசி, தொலைநகல் இலக்கங்கள்-

vadapakuthi payanaththitkuட பகுதிக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்லும்போது பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே இது தொடர்பான தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்கள் பத்திரிகைவாயிலாக வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் அந்த இலக்கங்களில் தவறுகள் காணப்பட்ட காரணத்தினால் மீண்டும் அவை திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதன்படி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பொதுத் தொலைபேசி இலக்கமான 0112430868 அல்லது 0112430875 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பாதுகாப்பு அனுமதி அதிகாரி (எம்.எல்.ஓ.) பிரிவுக்கு மாற்றுமாறு கூறி அங்குள்ள அதிகாரியுடன் தொடர்பு கொள்ளமுடியும். அத்துடன் பயணம் தொடர்பான தகவல்களை 0112328109 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்போது பெறுபவர், பாதுகாப்பு அனுமதி அதிகாரி (எம்.எல்.ஓ.) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு என குறிப்பிட்டு அதன்கீழ் பெயர், வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம், பயணம் செய்யும் இடம், காரணம், தங்கும் இடம் மற்றும் தங்கும் காலப்பகுதி, அனுப்புபவரின் பக்ஸ் இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு மேற்கூறிய தொலைநகல் இலக்கம் ஊடாக தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரியாபெத்த மண்சரிவு , 14சடலங்கள் மீட்பு, சுமார் 300 பேர் மாயம்-

meetiyapeththa man sarivu (2)meetiyapeththa man sarivu (1)பதுளை மாவட்டம், ஹல்துமுல்லை – கொஸ்லாந்தை – மீரியாபெத்த தோட்டத்தில் இன்றுகாலை இடம்பெற்ற மண்சரிவினால் அங்கு வசித்த 66 குடும்பங்களைச் சேர்ந்த 300பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் மண்ணுக்குள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அங்கு மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் இராணுவத்தினர், காவற்துறையினரோடு பிரதேச வாசிகளும் இணைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில் 14பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் 7,8,9,10,11 மற்றும் 12 ஆகிய 6 லயன் குடியிருப்புக்கள், 1 கோயில், 5 குவார்ட்டஸ், 2 பால் சேகரிக்கும் நிலையம், 2 வாகனம் திருத்துமிடம், 1 வைத்திய நிலையம், கடைகள் என பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. மண்சரிவினால் மீரியாபெத்த தோட்டம் சேறு நிரம்பிக் காணப்படுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புக் குழுத் தலைவர் யாழ் விஜயம்-

ஜ.நாவின் பயங்கரவாத எதிர்ப்புக்குழுத் தலைவர் ஜீன் போல் மற்றும் அவரது குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இந்த விஜயத்தின்போது, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்ததன் பின்னர், அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பாக படங்களுடன் விளக்கமளிக்கப்பட்டதோடு, யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாகவும், விரிவாக கேட்டறிந்தனர். மேலும் யாழ். நிலவரம் தொடர்பாக அதிகாரிகள் என்ன கூறினார்கள் என அரச அதிபரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, யாழ். மாவட்டத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தமக்குள் கதைத்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது என்றார். இச்சந்திப்பில், கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு அரச அதிபர் வேதநாயகம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மலைநாட்டுக்கான ரயில் சேவை பாதிப்பு-

train_lanka_மத்திய மலைநாட்டுக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயில் பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. மேலும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் தனது பயணத்தை பண்டாரவளையில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ல – தெம்மோதர இடையிலான பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் என்ஜின் மீது நேற்று இரவு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட இணைப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்துள்ளார். மண்சரிவை அகற்றி ரயில் பாதையை சீர்செய்யும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுளார்.

அடுத்த தேர்தலில் பொதுநலவாய கண்காணிப்பு குழு-

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு பொதுநலயவாய கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கு தயார் என பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஸ் ஷர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியும், தேர்தல்கள் ஆணையாளரும் இணக்கம் தெரிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 5நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கமலேஸ் சர்மா கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கையில் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் தேசிய கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளுக்கு முழுமையான பிரவேச அனுமதியை வழங்கவும், தேர்தல்கள் ஆணையாளர் இதன்போது இணங்கியதாக கமலேஸ் சர்மா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா குழு வடக்கிற்கு விஜயம்;-

ஐ.நா குழு ஒன்று இன்றையதினம் வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களையும் சந்தித்து அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடிருந்தனர். இலங்கை வந்துள்ள ஐ.நாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் போல் அடங்கிய குழுவினர் இன்றுகாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் காலை 11.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லை மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.